7 வருஷத்துக்கு முன்னாடி நடந்த அத்துமீறல்.. பாடகி இப்போ சொல்ல அதுவா காரணம்? எல்லை மீறிய பிரபலம்
சென்னை: பாடகி ஸ்வாகதா தன்னிடம் ஒரு பிரபல இசையமைப்பாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் அந்த இசையமைப்பாளருடன் மட்டும் இல்லாமல், மொத்த திரையுலகில் இருந்தும் வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த இசையமைப்பாளர் தொட்ட இடத்தில் எல்லாம் தோல் உரிந்து புதிய தோல் வரும்படி சிகிச்சை எடுத்தேன் என்றும் அந்த இசையமைப்பாளரின் பெயரை விரைவில் கூறுவேன் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
தற்போது பாடகி ஸ்வாகதாவுக்கு ஆதரவாக திரைத்துறையில் இருந்தே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் தொடர்பாக மிகவும் காட்டமாகவும், பாடகி ஸ்வாகதாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, " ஸ்வாகதா 7 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை இப்போது கூறுகிறார். மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட அவர் அப்போதே இது குறித்து கதற வேண்டியது தானே? இப்போது வந்து ஏன் கதறுகிறார். அதுவும் ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து கொண்டு ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.

என்ன தேவை?: 7 ஆண்டுகள் கழித்து இப்போது பேச என்ன தேவை வந்தது. நான் பேச வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதை அப்போதே பேசாமல் இப்போது பேச என்ன காரணம்? நீங்கள் வாய்ப்புக்காக உங்களையே தியாகம் செய்யத் தயாராகிவிட்டீர்கள். அதனால் தான் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்றி உள்ளீர்கள். இல்லை என்றால் நீங்கள் அப்போதே வெளியே வந்து, நல்லவர்கள் என்று நீங்களே சான்றிதழ் கொடுத்த அந்த நான்கு இசையமைப்பாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியது தானே?
காரணம் இதுதான்: இப்போது இந்த விஷயத்தை பேசுவதற்கு காரணம், அப்போது அந்த இசையமைப்பாளர் வெறும் 50 ஆயிரம் ஒரு லட்சத்திற்கு இசையமைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் இப்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார். அதனால் தான் பணத்தை டார்கெட் செய்து இப்படிச் செய்கிறார்கள். அதற்காக அந்த இசையமைப்பாளரை யோக்கியன் என்றோ நல்லவர் என்றோ நான் கூறவில்லை. அவர்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இதை வெளியே சொல்ல என்ன காரணம் என்றுதான் நான் பேசுகிறேன்" என்று கூறி உள்ளார். அவரது இந்த பேட்டி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications