கணவரின் மரணம் என்னை புரட்டிபோட்டது.. தாலியை கழட்ட மனசு வரல.. பாடகி வேதனை!

சென்னை: இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். கணவருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த உஷா உதுப்பால், அவரின் திடீர் மரணத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் அவர் நினைவுடனே இருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில் கணவரின் மரணம் என்னை பைத்தியமாக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

பாடகி உஷா உதுப், 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கிறார். அஞ்சலி படத்தில் வரும் 'வேகம் வேகம் போகும் தூரம்', சிவலிங்கா படத்தில் மகாசிவா, லக்கி பாஸ்கர் படத்தில் டைட்டில் பாடலை பாடி இருக்கிறார். இவரது கணீர் குரலைக்கேட்டாலே ஆடாத கால்களும் ஆட்டம் போடும், அந்த அளவுக்கு அவரின் குரலில் ஒரு வைப் இருக்கும். பெரிய பொட்டு.. பட்டுப் புடவை.. தலை நிறைய மல்லிகைப் பூ, இது தான் உஷா உதுப்பின் அடையாளம். இப்படி, கலாச்சார உடையில் இருந்தாலும், உஷா உதுப் பாடி அசத்துவது வெஸ்டர்ன் பாடல். இவர் பல மணிநேரம் பாடினாலும், இறுதிவரை ரசிகர்களை எனர்ஜி லெவல் குறையாமல் வைப்பது இவருக்கு கை வந்த கலை.

Usha uthup interview

பாடகி உஷா உதுப்: உஷா உதுப்பின் கணவர், ஜானி சாக்கோ தேயிலை தோட்டத் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவரான இவரை, உஷா உதுப் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு, ஜானி சாக்கோ வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரின் மறைவு உஷா உதுப்பை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதில் இருந்த மெல்ல மெல்ல மீண்டு வரும் இவர், அண்மையில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

தாலியை கழட்டமனசு வரல: அதில், என் கணவர் ஜானி இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அவருடனான 40 ஆண்டு கால வாழ்க்கை என்னை புரட்டிப்போட்டு விட்டது. அவர் இறந்த பிறகு நான் யாரிடமும் பேசாமல் அமைதியாகிவிட்டேன். அந்த அமைதி எனக்கு ஆறுதலை கொடுத்தது, நான் அமைதியாக இருக்கும் போது, என் கணவரின் ஆன்மாவோடு என்னால் பேச முடிகிறது. தினமும் இவர் இல்லாததை நினைத்து அழுது கொண்டே இருக்கிறேன். அவரை நான் இழந்துவிட்டேன் என்று நினைக்கும் போதே மனம் பாரமாக உள்ளது.

Usha uthup interview

தங்கமுடியாத வேதனை: பலர் கணவர் இறந்த பிறகும் தாலி, பூ, பொட்டி வைத்திருப்பது ஏன் என்று கேட்கிறார்கள். இந்தியாவில் கணவனை இழந்துவிட்டால் பூ, பொட்டு, தாலியை அணிய மாட்டார்கள். அதை நீங்கள் நம்புறீங்க என்றால் அதை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், நான் அதை செய்தேன் என்றால் வெளிவேஷம் போடுகிறேன் என்று அர்த்தம். ஏனென்றால் இவை அனைத்தும் என்னை வலிமையாக்குகிறது, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. மற்றவர்களுக்காக நான் தாலி, பொட்டு போடவில்லை என்றால், என் கணவரே ஏன் முட்டாள் மாதிரி பண்ற என்று தான் கேட்பார். இது உன் வாழ்க்கையை எப்போதும் போல் வாழு என்று சொல்லுவார். இதில் பலருக்கு நம்பிக்கை இருந்தால் செய்யுங்கள், ஆனால், மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள் என உஷா உதூப் அந்த பேட்டியில் தனது கணவர் குறித்து பேசி உள்ளார்.

பாடகியான உஷா உதுப், மேல் நாட்டு மருமகள், மன்மத அம்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும், அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல்,சூப்பர் சிங்கர் ஜூனியர், குயில் பாட்டு போன்ற பாட்டு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X