twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமைச்சர் விஜயபாஸ்கர் தான் இன்ஸ்பிரேஷன்.. பாடகர் வீரமணி ராஜு ஸ்பெஷல் பேட்டி!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உணவின்றி தவிக்கும், முதியோர் இல்லங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் பாடகர் வீரமணி ராஜு.

    Recommended Video

    அமைச்சர் விஜயபாஸ்கர் தான் INSPIRATION | SINGER VEERAMANI RAJU OPEN TALK | ONEINDIA TAMIL

    ஐய்யப்பன் பாடல்கள் என்றாலே வெண்கல குரலோன் வீரமணி ராஜுவின் பெயர் தான் நினைவுக்கு வரும்.

    பக்தி பாடல்கள், சினிமா பாடல்கள் என இசைத் துறையில் கலக்கி வரும் வீரமணி ராஜு, கொரோனா கலவரத்தின் நடுவே, சமூக பணியாற்றி வருகிறார்.

    Singer Veeramani Raju special interview about Corona help!

    முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி வரும் பணியை ஒரு குழுவினரோடு இணைந்து தனது அடையாளத்தை கூட காட்டிக் கொள்ளாமல் பொது நலத்துடன் பணியாற்றி வரும் வீரமணி ராஜு, நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கொடுத்துள்ள பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இப்படி சமூக பணி ஆற்றும் எண்ணம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் இன்ஸ்பிரேஷன் என அசத்தலாக விடை அளித்துள்ளார்.

    Singer Veeramani Raju special interview about Corona help!

    நாடே ஊரடங்கு உத்தரவில் வீட்டில் முடங்கி கிடந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு பொது மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து, கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்.

    ஒரு அமைச்சரே இப்படி களத்தில் இறங்கி போராடும் போது, நாம் வீட்டில் முடங்கி கிடந்தால் நல்லது அல்ல, என நினைத்தேன், என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன் அவ்வளவு தான் என தனது பேட்டியில் அடக்கத்துடன் பேசியுள்ளார். வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

    English summary
    Devotional singer Veeramani Raju help to needy old age home people to give food and clothes talks about his inspiration and social activities in a special interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X