போலீஸாருக்கு 25 ஆயிரம் மாஸ்க்.. விழிப்புணர்வு பாடல்கள்.. பாடகர் வேல்முருகன்.. ஸ்பெஷல் பேட்டி
சென்னை: கிராமிய இசையை சினிமா பாடல்களில் ஒலிக்க வைத்து வரும் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனின் பேட்டி வெளியாகி இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் பல திரைப் பிரபலங்கள் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் வி கனெக்ட் பேட்டியில் வீடியோ கால் மூலம் ஸ்பெஷல் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

இந்த லேட்டஸ்ட் லாக்டவுன் ஸ்பெஷல் பேட்டியில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார் பாடகர் வேல்முருகன்.
முதல்வர், துணை முதல்வர்களை சந்தித்து பேசியதாகவும், காவல் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 25 ஆயிரம் மாஸ்க்குகளை கொடுத்து உதவியுள்ளார் வேல்முருகன்.
மேலும், தனது திறமையையும் இதில் காட்ட வேண்டும் என நினைத்த வேல் முருகன் பல கொரோனா பாடல்களையும் பாடியுள்ளார். "உள்ளே போ உள்ளே போ" கொரோனா பாடல், உள்ளிட்ட பல்வேறு பாடல்களையும் பாடி அதன் மூலமாகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய அனுபவங்களை வேல்முருகன் இந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











