'ரசிகர்கள்': பயத்தில் சிரஞ்சீவி மகள்!
| Click here for more images |
ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரீஷ் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆந்திராவே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
தற்போது தனது காதல் கணவருடன் டெல்லியில், போலீஸ் பாதுகாப்புடன் தங்கியுள்ளார் ஸ்ரீஜா. அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டெல்லியில் தங்கியுள்ள ஸ்ரீஜா, தனது தந்தையின் ரசிகர்களால், ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனது தந்தை ஆந்திராவில் மிகப் பெரிய நடிகர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் எங்களை ஏற்க மாட்டார்கள். என் தந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஹைதராபாத்தில் நாங்கள் நடமாட முடியாது.
எங்கள் காதல் விவகாரம் ஏற்கனவே கசிய ஆரம்பித்ததும் ஷிரிஷ் மீது ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். எனக்கு ரசிகர்கள் மீது பயம் கிடையாது. அவருக்கு ரசிகர்களிடம் பயம் இருந்தது. இதனால்தான் நாங்கள் டெல்லிக்கு வந்தோம்
எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி யது. முதலில் ஜாதி குறுக்கிட்டதால் ஷிரிஷ் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மெகா ஸ்டார் மகள் என்பதால் அந்தஸ்தை நினைத்து பயந்தனர்.
ஆனால் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். ஷிரிஷ் பெற்றோர் நல்லவர்கள். என் மீது பாச மழை பொழிந்தனர்.
எங்கள் வீட்டில் அப்பா கண்டிப்பானவர். அவர் சொல்வதைத்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். என் மீது அப்பாவுக்கு உயிர். நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்.
எனக்கு விருப்பமானவற்றை எல்லாம் நிறைவேற்றி வைப்பார். ஆனால் காதலை நிறைவேற்ற அவர் தயாராக இல்லை. காதல் விவகாரத்தில் என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை.
8 மாதமாக வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். யாருடனும் என்னை தொடர்பு கொள்ள விடாமல் வைத்திருந்தனர். நாங்கள் 4 ஆண்டுகளாக காதலித்தோம். இப்போது எனக்கு 19 வயது ஆகிறது. முடிவு எடுக்கும் அதிகாரம், தகுதி எனக்கு உண்டு. இது நாங்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல.
கோடிகளுக்கு நான் ஆசைப்படவில்லை. மனசுக்கு பிடித்தவருடன் வாழ விரும்புகிறேன். மெகா ஸ்டார் மகளாக இருந் தால் ரசிகர்கள் என்னை மரியாதையுடன் பார்ப்பார்கள். நான் அதை விரும்பவில்லை. சாதாரணமான பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்.
ஷிரிஷ் குடும்பம் நடுத்தர குடும்பம். அந்த குடும்பத்தின் மருமகளாக, ஒரு சாதாரணமானவருக்கு மனைவியாகத்தான் வாழ ஆசைப்படுகிறேன். இங்கிருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு எனக்குக் கிடைக்கவில்லை.
என் சித்தப்பா (நடிகர் பவன் கல்யாண்) பற்றி எனக்கு கவலை இல்லை. அப்பா எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வார். அவரால் என் உயிருக்கு ஆபத்து இல்லை. ஷிரிஷ் தான் பயப்படுகிறார். எனவே அப்பா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால் எந்த ஆபத்தும் வராது.
நாங்கள் தேனிலவுக்கு லண்டன் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். உண்மையான காதல் என்றும் தோற்பது இல்லை. ஆண்களை விட பெண்கள் காதலில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீஜா.
மருமகனின் பயத்தை சிரஞ்சீவி போக்குவாரா?


Click it and Unblock the Notifications











