அழகிய டிவி சகோதரிகள்.. தியா மேனன் மற்றும் தீப்தியின் ஜாலி பேட்டி!
சென்னை: முன்னதாக நமது தமிழ் பிலிமி பீட் வி கனெக்ட் ஷோவில் சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளினி தியா மேனன் பேட்டி அளித்த நிலையில், தற்போது, அவருடைய சகோதரியும் பிரபலமுமான தீப்தி பேட்டி கொடுத்துள்ளார்.
Recommended Video
பேட்டியின் இடையே சர்ப்ரைஸாக கலந்து கொண்ட தியா மேனனின் அரட்டைகளையும் காணத் தவறாதீர்கள்.

விஜே தியா மேனன் கொடுத்து இருந்த கலகலப்பான பேட்டி வைரலாகி இருந்த நிலையில், பிரபல எம்.சியும் சீரியல் நடிகையுமான தீப்தி இந்த லாக்டவுனில் அடுத்து என்ன செய்யலாம் என்ற அட்டகாசமான யோசனையை உருவாக்கி உள்ளார்.
அழகான இந்த சகோதரிகள் இருவரும் இந்த லாக்டவுனில் D-Sisters எனும் புது யூடியூப் சேனலை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சன் மியூசிக் சேனலில் பிரபல விஜேவாக வலம் வந்த தியா மேனன், கிரேஸி கண்மணி, கால் மேல காசு உள்ளிட்ட பல ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
வி கனெக்டின் லேட்டஸ்ட் எபிசோடில் பங்கேற்று சர்வ சாதாரணமாக தனது வாழ்க்கை குறித்தும், கடந்து வந்த பாதைகள் குறித்தும், நடிகையாக போவது குறித்தும் பல சுவாரஸ்யங்களை வெளிப்படுத்தி இருந்தார்.
சர்கார் படத்தின் ஆடியோ லாஞ்சை தொகுத்து வழங்கிய போது, நடிகர் விஜய்யை நீண்ட நேரம் அருகே பார்க்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தையும் அந்த சாட்டில் பகிர்ந்து இருந்தர்.
இந்நிலையில், அத்தனை நிகழ்ச்சிகளையும் நிர்வகித்து வந்த அவரது சகோதரி தீப்தி குறித்தும் இந்த பேட்டியில் ரசிகர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த சகோதரிகளின் செம ஜாலியான பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











