நாட்டாமை படத்துல சிவாஜியா?.. குஷ்பு எப்படி வந்தாரு தெரியுமா? கே.எஸ். ரவிக்குமார் ஓபன் பேட்டி!
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் நாட்டாமை படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது சிவாஜி சார் தான் என பேசியுள்ளார்.
மேலும், அந்த படத்தில் குஷபுவுக்கு முன்னதாக எந்த நடிகையை தேர்வு செய்திருந்தேன் என்பதையும் குஷ்பு எப்படி படத்தில் கமிட்டானார் என்பதையும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். சமீப காலமாக படங்களை தயாரிப்பது மற்றும் நடிப்பது என அசத்தி வருகிறார்.
கேஎஸ். ரவிக்குமார்: 1990-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.எஸ். ரவிக்குமார். அந்தப் படத்தை தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், புருஷ லட்சணம், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா, தெனாலி, பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
நாட்டாமை: சேரன் பாண்டியன் படத்திலேயே சரத்குமாரை வைத்து இயக்கி வெற்றிகண்ட கே.எஸ். ரவிக்குமார் 1994-ஆம் ஆண்டு நாட்டாமை படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து முத்து படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
சிவாஜி நடிக்க வேண்டியது: நாட்டாமை படத்தில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜி நடிக்க வேண்டியது என்றும் அவருக்கு அந்த நேரம் உடம்பு சரியில்லாத காரணத்தினால் அவர் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக விஜயகுமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என சமீபத்திய பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் சிவாஜி கணேஷனை நடிக்க வைத்திருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.
குஷ்புவுக்கு முன்னதாக லட்சுமி: நாட்டாமை படத்தில் குஷ்பூ நடித்த வயதான கதாபாத்திரத்தில் முதலில் நடிகை லட்சுமி தான் தேர்வானார். அப்போது சூட்டிங் ஒன்றில் குட்டி கவுன் போட்டு குஷ்பு ஆடிக்கொண்டிருந்த நிலையில், நாட்டாமை படத்தில் நான் நடிக்கிறேனே என்றார். அது வயதான ரோல் எப்படி நடிப்பீங்க என்றதும் அண்ணாமலை படத்தில் ஒயிட் போட்டு நடிச்சிருக்கேனே என சொல்ல, அப்படித்தான் அந்த படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
காசுக்காக: இயக்குநர்கள் எல்லாம் சமீப காலமாக திரைப்படங்களில் நடித்து வருகின்ற என்ன காரணம் என்கிற கேள்விக்கு டப்பு தான் முக்கிய காரணம் என அதிரடியான பதிலை கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார். அவரது வெளிப்படையான பேச்சு பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹிட் லிஸ்ட்: இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டி வாழ்த்துக்களை பெற்றார். போர் தொழில் படத்தில் சரத்குமார் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்து ஹிட்டான நிலையில், தொடர்ந்து பல இளம் நடிகர்கள் சரத்குமாருடன் இணைந்து நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











