twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை கலைஞர்களுக்கு கொரோனா நிதி.. கேட்டவுடன் கொடுத்த சிவகார்த்திகேயன்.. ரவிவர்மா பேட்டி!

    |

    சென்னை: சில்வர்ஸ்க்ரீன் ஹீரோ ஆனாலும், சின்னத்திரையை மறக்காமல், அதில், கொரோனாவால் வேலை இழந்து வாடும் கலைஞர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியை ரவிவர்மா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளன.

    Sivakarthikeyan also donate some money for Small screen actors!

    லாக் டவுன் நேரத்தை சமாளிக்க புதிய கன்டென்ட் இல்லாத நிலையில், மெட்டி ஒலி, தங்கம் உள்ளிட்ட பல கிளாசிக் சீரியல்கள் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    சினிமா கலைஞர்களின் கூட்டமைப்பான FEFSIக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், தனுஷ் 15 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் தலா 10 லட்சம் ரூபாயும் கொடுத்து உதவினர்.

    ஆனால், அதே சமயம், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதவி செய்ய ஆட்கள் யாரும் முன் வரவில்லை. இந்நிலையில், அந்த சங்கத்தின் தலைவர் ரவிவர்மா, நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற, உடனடியாக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் 10 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

    சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில், உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட சிலர் தங்களால் இயன்ற உதவியை சின்னத்திரை கலைஞர்களுக்கும் செய்து வருகின்றனர் என தனது பேட்டியில் ரவிவர்மா கூறினார்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பது குறித்த பல்வேறு விஷயங்களையும் ரவி வர்மா பேசியுள்ள வீடியோவை காண லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

    English summary
    Actor Sivakarthikeyan also donates some amount to Tv actors in the Corona virus lockdown period. He also donates 10 lakhs to FEFSI and 25 lakhs to PM care.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X