சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் பிளஸ்? அண்ட் மைனஸ்? செய்யாறு பாலுவின் விமர்சனம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' படம் இன்று வெளியாகி உள்ளது. இதில், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இருக்கிறார் சுதா கொங்கரா. இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள இப்படத்தின் செய்யாறு பாலு விமர்சனம் அளித்துள்ளார்.

அதில், 1960 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் எப்படி இருந்தது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் எழுச்சி எந்த அளவிற்கு இருந்தது, ஹிந்தி மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்த்து மாணவர்கள் எப்படி உயிர் தியாகம் செய்தார்கள் என்பதை திரைப்படமாக 'பராசக்தி' என்ற பெயரில் இயக்குனர் சுதா கொங்கரா எடுத்து இருக்கிறார். இவர்களின் முந்தைய படங்களான இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற படங்கள். குறிப்பாக இந்த படத்தின் கதையை ஒரு பெரிய நடிகரிடம் சொல்லி, அவர் கதையை கேட்டு அவர் மறுத்ததால், கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

parasakthi sivakarthikeyan Cheyyaru Balu
Photo Credit:

தீ பரவட்டும்: பராசக்தி சிவகார்த்திகேயனின் 25வது படம் ஜிபி பிரகாஷின் 100வது படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோவாக கலக்கி வரும் ரவி மோகன் இந்த படத்தில் வில்லன் ரோலில் நடித்து உள்ளார். பராசக்தி படத்தில் இயக்குநர் தெலுங்கு, ஸ்ரீ லீலா என மற்ற நடிகர்கள் அனைவரும் தெலுங்கு இந்த படம் எப்படி தமிழின் பெருமையை பேசு என பல விதமான விமர்சனம் இருந்தன. ஆனால், இன்று படம் வெளியாகி அனைத்து விமர்சனத்தையும் தகர்த்துள்ளது.

பராசக்தி படத்தின் கதை: படம் ஆரம்பிக்கும் போதே நேரடியாக கதைக்குள் செல்கிறது. சிவகார்த்திகேயன் இந்திக்கு எதிராக போராடும் புறநானூறு என்ற அமைப்பை வைத்து இருக்கிறார். அப்போது ரயில் எரிப்பில் தன் நண்பனை இழக்கிறார். இதனால், இனி எதுவுமே வேண்டாம், நிம்மமியாக வாழ்க்கை நடத்தி தம்பியை காப்பாற்றுவோம் என அரசு வேலையில் சேர்கிறார். ஆனால், தம்பி அதர்வா மூலமாக ஒரு பிரச்சனை வருகிறது. அதன் மூலுமாக தீ பரவியதா.. நீதி வென்றதா என்பது தான் பராசக்தி படத்தின் கதை.

பிளஸ்: பராசக்தி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் தான். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா என அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீலீலா என்னத்தா நடிக்க போகிறார்கள் என்று அனைவரும் சொன்ன நிலையில், தன்னுடைய கதாபாத்திரம் உணர்ந்து அவர் நடித்து இருக்கிறார். படத்தின் ஒரு காட்சியில் இந்தி திணிப்புக்கு மட்டுமில்ல, தெலுங்கு திணிக்கப்பட்டாலும் போராடுவேன் ன அவர் சொன்னதும் தியேட்டரில் கை தட்டல் பறக்கிறது. ஏன் என்றால் ஸ்ரீ லீலா ஒரு தெலுங்கு நடிகை.

மைனஸ் : படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 15 நிமிடத்தில் ஆமை வேகத்திற்கு சென்றுவிடுகிறது. அதன் பிறகு சிவகார்த்திகேயன்,ஸ்ரீ லீலாவின் காதல் சலிப்பாக இருக்கிறது. முதல் பாதியிலேயே மூன்று பாடல்களை வந்துவிட்டது. பாடல்கள் நன்றாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தை அது பாதிக்கிறது. இப்படியே முதல்பாதி நகர்ந்து நகர்ந்து சென்று இடைவேளை வருகிறது. அதன்பிறகு தான் படமே சூடுபிடிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X