நீயெல்லாம் அதை பண்ணவே மாட்ட.. பேட்டியெடுத்த KPY பாலாவை திட்டிய சிவகார்த்திகேயன்.. என்ன ஆச்சு?

சென்னை: அயலான் படத்தின் புரமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அவரை KPY பாலா பேட்டியெடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது நான் உன்னை பாராட்டல, திட்டிட்டு இருக்கேன் என சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

அந்த படத்தில் நடிக்க KPY பாலாவிடம் கேட்ட போது அவர் நடிக்க மறுத்து விட்டதையும் சிவகார்த்திகேயன் செம ஃபன்னாக அந்த பேட்டியில் பதிவு செய்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு பாலா ஒரு இன்ட்ரோ கொடுக்க பதிலுக்கு பாலாவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ட்ரோ ரசிகர்களை அந்த பேட்டியை முழுவதுமாக பார்க்க வைத்து விட்டது.

Sivakarthikeyan scolds KPY Bala in a recent Ayalaan promotional interview for this reason

தனுஷுடன் மோதல்: 3 படத்தில் வாய்ப்பு கொடுத்து பின்னர் தனது தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என ஹீரோவாக மாற்றி சிவகார்த்திகேயனை தனுஷ் அழகு பார்த்தார். ஆனால், தற்போது அயலான் படத்தின் மூலம் தனுஷ் உடனே போட்டிக்கு வந்து விட்டார் சிவகார்த்திகேயன். வரும் பொங்கலுக்கு கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் மோதுகின்றன. மேலும், விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் மற்றும் அருன் விஜய்யின் மிஷன் 1 உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. அரண்மனை 4 மற்றும் லால் சலாம் வெளியாகவில்லை.

அயலான் புரமோஷன்: அயலான் படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் ஆடியோ லான்ச் விழாவை நடத்தியிருந்தார். சிவகார்த்திகேயனின் மனைவி, மகள் மற்றும் மகன் என ஒட்டுமொத்த குடும்பமே கலந்து கொண்டனர். டி. இமான் சர்ச்சைக்கு மறைமுகமாகவே பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து அயலான் புரமோஷனுக்காக ஏகப்பட்ட யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

கொரோனா காரணம்: அயலான் படம் 6 வருட தாமதத்தில் வெளியாக உள்ள நிலையில், படம் பாஸ் ஆகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறப் போகிறது என்றும் படத்தின் தாமதத்திற்கு கொரோனா தான் காரணம். 2 ஆண்டுகள் முடக்கிப் போட்ட நிலையில், சிஜி கூட சரியாக பண்ண முடியவில்லை அதனால் தான் இந்த தாமதம் என சிவகார்த்திகேயன் KPY பாலா கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

பாலாவுக்கு பாராட்டு: கேபிஒய் பாலா தொடர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை தன்னிடம் உள்ள கை காசு எல்லாத்தையும் போட்டு பண்ணி வருவது பெரிய விஷயம் என்றும் வெள்ள பாதிப்பின் போது நீயும் அமுதவாணனும் சேர்ந்து பண்ணது வேறலெவல் என பாலாவை சிவகார்த்திகேயன் பாராட்டி இருந்தார்.

நான் உன்னை திட்டுறேன்: அயலான் படத்தில் நடிக்க அழைத்தும் பாலா வரவில்லை என்றும் கனா படத்தில் நடிக்க அழைத்த போது கூட பாலா வர மறுத்து விட்டார் என வெளிப்படையாக போட்டு உடைத்த சிவகார்த்திகேயன் சொல்வதை எல்லாம் கேட்டு தேங்க்யூ அண்ணா, லவ்யூ அண்ணா என்றே பாலா சிரித்துக் கொண்டே சமாளித்தார். மேலும், அயலான் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் பேசவே பேசாது என்பதால் யோசித்தேன் என பாலா சொல்ல, நீ வாயை தொறந்தா மூடமாட்ட, உனக்கு எப்படி அந்த ரோல் செட்டாகும் என சொல்ல மீண்டும் நன்றி சொன்னார் பாலா, உடனடியாக பேசிய சிவகார்த்திகேயன், நான் உன்னை திட்டுறேன்.. பாராட்டவில்லை என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ள அயலான் படம் நிச்சயம் குழந்தைகளின் ஃபேவரைட்டாக இருக்கும் என தெரிகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் படம் குழந்தைகளுக்கான, குடும்பத்துக்கான படமாக இருக்காது என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X