»   »  மகா ரதி ஸ்னேகா!

மகா ரதி ஸ்னேகா!

Subscribe to Oneindia Tamil

பி.வாசு இயக்கத்தில் தெலுங்கில் நடித்து வெளியாகியுள்ள மகாரதி சூப்பர் ஹிட் படமாகியுள்ளதால் ஜில் பாவையான ஸ்னேகா படு சந்தோஷமாகஇருக்கிறாராம்.

மகா ரதி படம் சமீபத்தில் ஆந்திராவில் ரிலீஸ் ஆனது. சென்னையில் இப்படத்தின் பிரிவியூ ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது ஸ்னேகாவை சந்திக்க நேர்ந்தது. ரதியை சந்தித்து சில வார்த்தைகள் பேசினோம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், 10 மாடிக்கட்டடத்திலிருந்து ஸ்னேகா குதிப்பது போன்ற ஒரு காட்சி. அதில் நிஜமாகவே அவர் குதித்ததாக கூறப்பட்டது.

மெய்யாலுமா ஸ்னேகா என்று அவ>டம் கேட்டோம். ஆமாங்க, நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனால் நான்தான் குதித்தேன். எனதுமுகத்தை கூர்ந்து பார்த்தாலே அதைத் தெ>ந்து கொள்ள முடியும்.

அதுக்காக இந்த மாடியிலிருந்து குதித்து நிரூபிக்கச் சொல்லிடாதீங்க என்று குறும்புப் புன்னகையுடன் நம்மையே கலாய்த்தார் ஸ்னேகா.

ஹைதராபாத்திலேயே செட்டிலாகி விடும் எண்ணமா.?

மகாரதிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதற்காக நான் அங்கேயே செட்டிலாகி விட மாட்டேன். நான் ஒரு தமிழ்ப் பெண். எனவேதமிழ் சினிமாதான் எனக்கு வீடு. இங்கே எனக்குள்ள இடத்தை இழக்க நான் விரும்பவில்லை.

இப்போது நான் 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன். எல்லாமே மெகா பட்ஜெட் படங்கள். இன்னும் 3 படங்கள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகஉள்ளது.

தெலுங்கில் 2 மெகா பட்ஜெட் படங்கள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார் புன்னகை இளவரசி.

ஸோ, ஸ்னேகா மார்க்கெட் சில்லுன்னு இருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil