ஸ்னேகாவை வறுத்த பிருந்தா! நடிகைகளிலேயே படு மோசமாக டான்ஸ் ஆடுவது ஸ்னேகாதான் என்கிறார் பிரபலடான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியுள்ளார். பெஸ்ட் டான்ஸர் சிம்ரன் என்பது அவரதுகருத்து.டான்ஸ் மாஸ்டர் கலாவின் தங்கை பிருந்தா. இவரும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்ஆவார். இவர்களது அக்கா கிரிஜாவும் சிறந்த டான்ஸர். மாஸ்டர் ரகுவின் மனைவிதான்கிரிஜா.இவர்களது குடும்பத்தில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும்நிடனத்திற்காகவே பிறந்தவர்கள் போல திரையுலகில் அசத்தி வருகிறார்கள்.கலா-பிருந்தாவின் தம்பி பிரசன்னாவும் கூட டான்ஸர்தான்.தமிழ் சினிமா நடிகைகளின் டான்ஸ் திறமை குறித்து பிருந்தா மனம் திறந்துபேசியிருக்கிறார். அவரது பார்வையில் சிம்ரன்தான் பெஸ்ட் டான்ஸராம். பிருந்தாகூறுகையில்,சிம்ரனுக்கு நிகர் சிம்ரன்தான். அவருக்கு போட்டியாக இதுவரை ஒரு நடிகையும்வரவில்லை. அவர் டான்ஸுக்குத் தயாராவதே ஒரு அழகு. அப்படி பூனை போல ஒருஓரமாக இருப்பார்.எல்லாம் ரெடியாகி, லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் என்று சொன்னால் போதும் அப்படியேதுள்ளிக் குதித்து கலக்கி விடுவார்.எங்கிருந்துதான் அப்படி திடீர்னு பாடி லாங்குவேஜ் வருமோ, ரொம்ப ஆச்சரியமாகஇருக்கும் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது. புது சிம்ரனை பார்க்க முடியும்.அவரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.நடிகைகளின் உடல் வாகு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.அதற்கேற்ற வகையில் ஸ்டெப்ஸ் கொடுத்து, ஸ்டைலை சொல்லிக் கொடுத்து ஆடவைத்து விடுவோம்.அதேசமயம், எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டியது அவர்களின் கையில்தான் உள்ளது.எல்லாமே சேர்ந்து வந்தால்தான் டான்ஸ் பார்க்க நன்றாக இருக்கும்.இப்போ வரும் நடிகைகளில் பலர் டான்ஸ் கற்றுக் கொண்டு நடிக்க வருவதில்லை.வந்த பிறகுதான் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் அவர்கள் திணறநேரிடுகிறது.த்ரிஷா வந்தபோது அவருக்கு டான்ஸே வராது. ஆனால் படு வேகமாக பிக்கப் செய்துகொண்டார். இப்போது என்ன ஸ்டெப் கொடுத்தாலும் அசத்தி விடுகிறார். ஸ்விஸ்நாட்டில் கடும் குளிரில் கூட சொல்லிக் கொடுத்தது போல பிரமாதமாக ஆடி அசத்திவிட்டார்.ஜோதிகாவும் நல்ல டான்ஸர். ஸ்டெப் சொல்லிக் கொடுத்து விட்டால் போதும்,பிராக்டிஸ் செய்து கொண்டு வந்து செட்டில் அழகாக ஆடி பாராட்டை பெற்றுவிடுவார்.ஆசின் புத்திசாலியானப் பெண். அப்போதைய டிரெண்டு எதுவோ, அதற்கேற்றார்போல ஆடுவார்.நயனதாராவுக்கு டான்ஸ் பெரிய அளவில் வராது. வரும்போதே பயந்து கொண்டுதான்வருவார். நிறைய டேக் எடுத்து ஆடுவார். ஆனால் அவரது அழகான முகம்தப்புக்களை மறைத்து விடும். இருக்கிற நடிகைகளிலேயே மோசமான டான்ஸர் யார் என்றால் அது ஸ்னேகாதான்.அவரிடம் ஒரு ஸ்டைல் இருக்காது. ஸ்டெப் சரியாக வைக்க மாட்டார். அவர்ஆடுவதைப் பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு டான்ஸா என்று வெறுப்புதான் வரும்.ஆர்வமே இல்லாமல் ஆடுவார். ஆரம்பத்தில் அவர் சினிமாவுக்கு வந்தபோது எப்படிஇருந்தாரோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். நன்றாக ஆட வேண்டும் என்றுஅவர் நினைப்பதே கிடையாது.நடிகர்களில் விஜய்தான் பெஸ்ட் டான்ஸர். சொல்லிக் கொடுப்பதை அப்படியே,அப்போதே ஆடிக் காட்டுவார் விஜய். அவரது ஷூட்டிங் என்றால் மாஸ்டர்களுக்குஜாலிதான். டென்ஷனே இல்லாமல்தான் விஜய் பாடல் காட்சிகளுக்கு டான்ஸ்அமைக்க போவேன்.ஒரு தடவை சொல்லிக் காட்டினால் போதும், அப்படியே பிடித்துக் கொண்டு ஆடிக்காட்டுவார். எந்த ஸ்டெப் போட்டாலும் அதை ஆடுவார். மாத்துங்க என்று இதுவரைஅவர் சொன்னதே இல்லை என்றார் பிருந்தா.டான்ஸ் மாஸ்டர் கலா, ஸ்னேகாவின் அண்ணன் கோவிந்தராஜனைத் தான் கல்யாணம்செய்திருந்தார். இருவரும் துபாயில் கொஞ்ச காலம் குடும்பம் நடத்தினர். ஆனால்இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து விட்டனர்.அப்போது முதல் கலா குடும்பத்திற்கும், ஸ்னேகாவுக்கும் இடையே ஒருவித பூசல்நிலவி வருகிறது.ஸ்னேகா, நடிகர் ஸ்ரீகாந்த்தை காதலிப்பதாக கலாவும், தங்கச்சி பிருந்தாவும்தான்வதந்தியைக் கிளப்பி விட்டார்கள் என்று ஸ்னேகா தரப்பு புலம்பியது. இந் நிலையில்தான் இப்போது ஆடத் தெரியாத ஸ்னேகா என்று பிருந்தா வறுத்துத் தள்ளியுள்ளார்பிருந்தா.நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய ஸ்னேகாவுக்கு இப்படி ஒரு பாராட்டு!

By Staff

நடிகைகளிலேயே படு மோசமாக டான்ஸ் ஆடுவது ஸ்னேகாதான் என்கிறார் பிரபலடான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியுள்ளார். பெஸ்ட் டான்ஸர் சிம்ரன் என்பது அவரதுகருத்து.

டான்ஸ் மாஸ்டர் கலாவின் தங்கை பிருந்தா. இவரும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்ஆவார். இவர்களது அக்கா கிரிஜாவும் சிறந்த டான்ஸர். மாஸ்டர் ரகுவின் மனைவிதான்கிரிஜா.

இவர்களது குடும்பத்தில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும்நிடனத்திற்காகவே பிறந்தவர்கள் போல திரையுலகில் அசத்தி வருகிறார்கள்.கலா-பிருந்தாவின் தம்பி பிரசன்னாவும் கூட டான்ஸர்தான்.

தமிழ் சினிமா நடிகைகளின் டான்ஸ் திறமை குறித்து பிருந்தா மனம் திறந்துபேசியிருக்கிறார். அவரது பார்வையில் சிம்ரன்தான் பெஸ்ட் டான்ஸராம். பிருந்தாகூறுகையில்,

சிம்ரனுக்கு நிகர் சிம்ரன்தான். அவருக்கு போட்டியாக இதுவரை ஒரு நடிகையும்வரவில்லை. அவர் டான்ஸுக்குத் தயாராவதே ஒரு அழகு. அப்படி பூனை போல ஒருஓரமாக இருப்பார்.

எல்லாம் ரெடியாகி, லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் என்று சொன்னால் போதும் அப்படியேதுள்ளிக் குதித்து கலக்கி விடுவார்.

எங்கிருந்துதான் அப்படி திடீர்னு பாடி லாங்குவேஜ் வருமோ, ரொம்ப ஆச்சரியமாகஇருக்கும் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது. புது சிம்ரனை பார்க்க முடியும்.அவரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நடிகைகளின் உடல் வாகு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.அதற்கேற்ற வகையில் ஸ்டெப்ஸ் கொடுத்து, ஸ்டைலை சொல்லிக் கொடுத்து ஆடவைத்து விடுவோம்.

அதேசமயம், எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டியது அவர்களின் கையில்தான் உள்ளது.எல்லாமே சேர்ந்து வந்தால்தான் டான்ஸ் பார்க்க நன்றாக இருக்கும்.

இப்போ வரும் நடிகைகளில் பலர் டான்ஸ் கற்றுக் கொண்டு நடிக்க வருவதில்லை.வந்த பிறகுதான் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் ஆரம்ப கட்டத்தில் அவர்கள் திணறநேரிடுகிறது.

த்ரிஷா வந்தபோது அவருக்கு டான்ஸே வராது. ஆனால் படு வேகமாக பிக்கப் செய்துகொண்டார். இப்போது என்ன ஸ்டெப் கொடுத்தாலும் அசத்தி விடுகிறார். ஸ்விஸ்நாட்டில் கடும் குளிரில் கூட சொல்லிக் கொடுத்தது போல பிரமாதமாக ஆடி அசத்திவிட்டார்.

ஜோதிகாவும் நல்ல டான்ஸர். ஸ்டெப் சொல்லிக் கொடுத்து விட்டால் போதும்,பிராக்டிஸ் செய்து கொண்டு வந்து செட்டில் அழகாக ஆடி பாராட்டை பெற்றுவிடுவார்.

ஆசின் புத்திசாலியானப் பெண். அப்போதைய டிரெண்டு எதுவோ, அதற்கேற்றார்போல ஆடுவார்.

நயனதாராவுக்கு டான்ஸ் பெரிய அளவில் வராது. வரும்போதே பயந்து கொண்டுதான்வருவார். நிறைய டேக் எடுத்து ஆடுவார். ஆனால் அவரது அழகான முகம்தப்புக்களை மறைத்து விடும்.

இருக்கிற நடிகைகளிலேயே மோசமான டான்ஸர் யார் என்றால் அது ஸ்னேகாதான்.அவரிடம் ஒரு ஸ்டைல் இருக்காது. ஸ்டெப் சரியாக வைக்க மாட்டார். அவர்ஆடுவதைப் பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு டான்ஸா என்று வெறுப்புதான் வரும்.

ஆர்வமே இல்லாமல் ஆடுவார். ஆரம்பத்தில் அவர் சினிமாவுக்கு வந்தபோது எப்படிஇருந்தாரோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். நன்றாக ஆட வேண்டும் என்றுஅவர் நினைப்பதே கிடையாது.

நடிகர்களில் விஜய்தான் பெஸ்ட் டான்ஸர். சொல்லிக் கொடுப்பதை அப்படியே,அப்போதே ஆடிக் காட்டுவார் விஜய். அவரது ஷூட்டிங் என்றால் மாஸ்டர்களுக்குஜாலிதான். டென்ஷனே இல்லாமல்தான் விஜய் பாடல் காட்சிகளுக்கு டான்ஸ்அமைக்க போவேன்.

ஒரு தடவை சொல்லிக் காட்டினால் போதும், அப்படியே பிடித்துக் கொண்டு ஆடிக்காட்டுவார். எந்த ஸ்டெப் போட்டாலும் அதை ஆடுவார். மாத்துங்க என்று இதுவரைஅவர் சொன்னதே இல்லை என்றார் பிருந்தா.

டான்ஸ் மாஸ்டர் கலா, ஸ்னேகாவின் அண்ணன் கோவிந்தராஜனைத் தான் கல்யாணம்செய்திருந்தார். இருவரும் துபாயில் கொஞ்ச காலம் குடும்பம் நடத்தினர். ஆனால்இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து விட்டனர்.

அப்போது முதல் கலா குடும்பத்திற்கும், ஸ்னேகாவுக்கும் இடையே ஒருவித பூசல்நிலவி வருகிறது.

ஸ்னேகா, நடிகர் ஸ்ரீகாந்த்தை காதலிப்பதாக கலாவும், தங்கச்சி பிருந்தாவும்தான்வதந்தியைக் கிளப்பி விட்டார்கள் என்று ஸ்னேகா தரப்பு புலம்பியது. இந் நிலையில்தான் இப்போது ஆடத் தெரியாத ஸ்னேகா என்று பிருந்தா வறுத்துத் தள்ளியுள்ளார்பிருந்தா.

நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய ஸ்னேகாவுக்கு இப்படி ஒரு பாராட்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X