நீ தான் சரியில்ல..: ஸ்னேகா தன்னிடம் நாக்ரவி தவறாக நடக்க முயன்றதாகவும், அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் நடிகை ஸ்னேகா கூறியுள்ளார்.முன்னதாக தன்னைக் காதலித்து ஏமாற்றிய ஸ்னேகா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக நாக்ரவி மலேசியாவில்அறிவித்துள்ளார்.இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஸ்னேகா கூறியதாவது:கடந்த ஒரு மாத காலமாக நாக்ரவி என்னை எவ்வளவு அவமானப்படுத்த முடிமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி விட்டார்.நான் முடிந்த அளவு அமைதியாக இருந்து பார்த்து விட்டேன். இதற்கு மேலும் பொறுக்க முடியாததால் நடந்த சம்பவங்களைசொல்கிறேன்.நாக்ரவி என்னுடைய குடும்ப நண்பராக பழகினார். முகத்தோல் சிகிச்சைக்காக நான் மலேசியா சென்ற போது என் அண்ணனின்நண்பர் என்ற முறையில் அவர் அறிமுகமானார். அதன் பின்னர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பி என்னிடம் பேசினார்.இது குறித்து என் அப்பாவிடம் பேசும்படி கூறிவிட்டேன்.ஆனால் என் பெற்றோர் நாக்ரவியிடம் திருமணத்திற்கு சில காலம் காத்திருக்கும்படி கூறிவிட்டனர். அதன் பின்னர் எனக்கு உதவிசெய்வதாக கூறி முந்திரிக்கொட்டை போல் அவராகவே முன் வருவார். பாண்டு தெலுங்கு படப்பிடிப்பில் மலேசியாவில் நான்சென்றிருந்த போது நாக்ரவி, அவரது நண்பர் ஜெகதீஷ்பாபு ஆகிய இருவரும் அங்குள்ள கே.எல்.டவர் ஓட்டலில் டின்னர் ஏற்பாடுசெய்திருப்பதாகவும் அதற்கு நானும் படக்குழுவினரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.அங்கு நானும் என் அக்காவும் சென்றோம். படப்பிடிப்பு குழுவினர் வரவில்லை. அவர் எங்கள் நண்பர் என்ற முறையில் அருகில்இருந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆனால் அவர் என்னைப் பற்றி சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்தும்பொய்யானவை. புகைப்படங்கள் உண்மையானவை. (இது ஸ்னேகா அடித்திருக்கும் அந்தர் பல்டியாகும், முதலில் இவைகிராபிக்ஸ் மூலம் தயாரான படங்கள் என்றார்). அவர் ஒரு மோதிரம் (வைரம்) வாங்கி வந்து நண்பர் என்ற முறையில் எனக்கு அவரது பிறந்த நாள் பரிசாக அந்த மோதிரத்தைஅணிவிக்க போனார். நான் வேண்டாம் என்று தடுத்தும் கட்டாயப்படுத்தி என் விரலில் அணிவித்தார். அது நிச்சயதார்த்த மோதிரம்என்று சொல்வது சுத்த பொய்.அதன் பிறகு சென்னை திரும்பியவுடன் எனது அப்பாவிற்கு போன் செய்து என்னை திருமணம் செய்து கொள்ளஅவசரப்படுத்தினார். அதனால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. அதன் பிறகு விசாரித்த போது தான் அவருக்கும் ஒருபெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் திருமண ஏற்பாடு நடந்து ரிஜிஸ்டர் ஆபிஸ் வரை சென்று பிறகு நின்றுவிட்டது தெரிய வந்தது.ஆரம்பத்தில் நல்லவர் போல் நடந்தது கொண்ட நாக்ரவியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக திடீர் மாற்றம் ஏற்பட்டது.என்னை கண்காணிக்க தொடங்கினார். புதுப்பேட்டை படத்தில் நடிப்பதற்காக நான் ஹைதராபாத் சென்ற போது திடீரென்று அங்கவந்தார். எனது பிறந்த நாளுக்காக நகை வாங்க நானும் என் அம்மாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். நானும் உங்களுடன்வருவேன் என்று அடம் பிடித்தார். அழைத்து சென்றோம்.எங்கள் பணத்தில் நகை வாங்கினோம். இப்போது அவர் அதை வாங்கி கொடுத்ததாக பொய் சொல்கிறார். நகை பிடிக்காததால்திருப்பி கொடுத்து விட்டு பணத்தையும் வாங்கிவிட்டோம். (அதற்கான ரசீது செக் ஆகிவற்றை நிருபர்களிடம் காட்டினார்).பாண்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்த போது அவரும் வந்து விட்டார். விழாவிற்கு செல்லும் வழியில் திடீரென்றுதுணிக் கடைக்கு போக வேண்டும் என்றார். வேண்டாம் என்று கூறிய பிறகும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று என்அம்மாவுக்கு ரூ. 6,000 ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்.கடந்த நவம்பர் 6ம் தேதி பெங்களூர் அருகே காட்டுப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. பெங்களூர் அருகே தீர்த்தஹள்ளியில்நடந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நாக்ரவி நள்ளிரவில் என்னுடைய அறைக்குள் புகுந்து என்னிடம் அத்துமீறி தவறாக நடக்கமுயற்சித்தார். என் கழுத்தை பிடித்து நெரித்தார். கையை முறுக்கினார். இதனால் என் கையில் காயம் ஏற்பட்டது. இது யூனிட்டில்உள்ள அனைவருக்கும் தெரியும்.இந்தச் சம்பவம் வெளியே தெரிந்து விட்டதால் கோபம் அடைந்த அவர் உன் எதிர்காலத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார். ஆனால் அவர் அதே நாளில் என் தாயாருடன் பேசும் போது மலேசியாவில் இருப்பதாக பொய் சொல்லியுள்ளார்.இதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட தவறான எண்ணத்துடன் என்னுடனும், என் குடும்பதினருடனும் பழகியுள்ளார் என்பதுதெரிய வரும். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நான் நடந்தது கொண்டது தவறு என்னை மன்னித்து விடு என்று எஸ்எம்எஸ்அனுப்பியிருந்தார். அந்த தகவல் இன்னும் என்னிடம் உள்ளது.காளிகாம்பாள் கோவிலுக்கு நான் அழைத்து சென்றதாகவும் மழையில் நனைய விட்டு காரில் சென்றதாகவும் பொய்களைஅவிழ்த்து விட்டுள்ளார். உண்மையாகவே என் மீது காதல் இருந்திருந்தால் மலேசியாவிலேயே தற்கொலை முயற்சி செய்து இருக்கவேண்டும். என் வீட்டின் முன்பு அந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்.இப்படி எதுவும் செய்யாமல் தற்கொலை நாடகமாடியுள்ளார். அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று நான் முடிவுசெய்துவிட்டதால் என் எதிர்காலத்தை கெடுக்க வீண் பழி சுமத்துகிறார். திருமண நிச்சயதார்த்தம் செய்து இருந்தால் என் நிலைமைமிகவும் மோசமாகி இருக்கும்.அவர் குடும்ப நண்பராக பழகியதால் இதுவரை அமைதி காத்தேன். தொடர்ந்து என்னைப்பற்றி தவறாக கூறுவதால் சட்டப்படிநடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் ஸ்னேகா.

By Staff
தன்னிடம் நாக்ரவி தவறாக நடக்க முயன்றதாகவும், அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் நடிகை ஸ்னேகா கூறியுள்ளார்.

முன்னதாக தன்னைக் காதலித்து ஏமாற்றிய ஸ்னேகா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக நாக்ரவி மலேசியாவில்அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஸ்னேகா கூறியதாவது:

கடந்த ஒரு மாத காலமாக நாக்ரவி என்னை எவ்வளவு அவமானப்படுத்த முடிமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி விட்டார்.நான் முடிந்த அளவு அமைதியாக இருந்து பார்த்து விட்டேன். இதற்கு மேலும் பொறுக்க முடியாததால் நடந்த சம்பவங்களைசொல்கிறேன்.

நாக்ரவி என்னுடைய குடும்ப நண்பராக பழகினார். முகத்தோல் சிகிச்சைக்காக நான் மலேசியா சென்ற போது என் அண்ணனின்நண்பர் என்ற முறையில் அவர் அறிமுகமானார். அதன் பின்னர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பி என்னிடம் பேசினார்.இது குறித்து என் அப்பாவிடம் பேசும்படி கூறிவிட்டேன்.

ஆனால் என் பெற்றோர் நாக்ரவியிடம் திருமணத்திற்கு சில காலம் காத்திருக்கும்படி கூறிவிட்டனர். அதன் பின்னர் எனக்கு உதவிசெய்வதாக கூறி முந்திரிக்கொட்டை போல் அவராகவே முன் வருவார். பாண்டு தெலுங்கு படப்பிடிப்பில் மலேசியாவில் நான்சென்றிருந்த போது நாக்ரவி, அவரது நண்பர் ஜெகதீஷ்பாபு ஆகிய இருவரும் அங்குள்ள கே.எல்.டவர் ஓட்டலில் டின்னர் ஏற்பாடுசெய்திருப்பதாகவும் அதற்கு நானும் படக்குழுவினரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

அங்கு நானும் என் அக்காவும் சென்றோம். படப்பிடிப்பு குழுவினர் வரவில்லை. அவர் எங்கள் நண்பர் என்ற முறையில் அருகில்இருந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆனால் அவர் என்னைப் பற்றி சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்தும்பொய்யானவை. புகைப்படங்கள் உண்மையானவை. (இது ஸ்னேகா அடித்திருக்கும் அந்தர் பல்டியாகும், முதலில் இவைகிராபிக்ஸ் மூலம் தயாரான படங்கள் என்றார்).

அவர் ஒரு மோதிரம் (வைரம்) வாங்கி வந்து நண்பர் என்ற முறையில் எனக்கு அவரது பிறந்த நாள் பரிசாக அந்த மோதிரத்தைஅணிவிக்க போனார். நான் வேண்டாம் என்று தடுத்தும் கட்டாயப்படுத்தி என் விரலில் அணிவித்தார். அது நிச்சயதார்த்த மோதிரம்என்று சொல்வது சுத்த பொய்.

அதன் பிறகு சென்னை திரும்பியவுடன் எனது அப்பாவிற்கு போன் செய்து என்னை திருமணம் செய்து கொள்ளஅவசரப்படுத்தினார். அதனால் எங்களுக்கு சந்தேகம் வந்தது. அதன் பிறகு விசாரித்த போது தான் அவருக்கும் ஒருபெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் திருமண ஏற்பாடு நடந்து ரிஜிஸ்டர் ஆபிஸ் வரை சென்று பிறகு நின்றுவிட்டது தெரிய வந்தது.

ஆரம்பத்தில் நல்லவர் போல் நடந்தது கொண்ட நாக்ரவியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக திடீர் மாற்றம் ஏற்பட்டது.என்னை கண்காணிக்க தொடங்கினார். புதுப்பேட்டை படத்தில் நடிப்பதற்காக நான் ஹைதராபாத் சென்ற போது திடீரென்று அங்கவந்தார். எனது பிறந்த நாளுக்காக நகை வாங்க நானும் என் அம்மாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். நானும் உங்களுடன்வருவேன் என்று அடம் பிடித்தார். அழைத்து சென்றோம்.

எங்கள் பணத்தில் நகை வாங்கினோம். இப்போது அவர் அதை வாங்கி கொடுத்ததாக பொய் சொல்கிறார். நகை பிடிக்காததால்திருப்பி கொடுத்து விட்டு பணத்தையும் வாங்கிவிட்டோம். (அதற்கான ரசீது செக் ஆகிவற்றை நிருபர்களிடம் காட்டினார்).

பாண்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்த போது அவரும் வந்து விட்டார். விழாவிற்கு செல்லும் வழியில் திடீரென்றுதுணிக் கடைக்கு போக வேண்டும் என்றார். வேண்டாம் என்று கூறிய பிறகும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று என்அம்மாவுக்கு ரூ. 6,000 ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்.

கடந்த நவம்பர் 6ம் தேதி பெங்களூர் அருகே காட்டுப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. பெங்களூர் அருகே தீர்த்தஹள்ளியில்நடந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நாக்ரவி நள்ளிரவில் என்னுடைய அறைக்குள் புகுந்து என்னிடம் அத்துமீறி தவறாக நடக்கமுயற்சித்தார். என் கழுத்தை பிடித்து நெரித்தார். கையை முறுக்கினார். இதனால் என் கையில் காயம் ஏற்பட்டது. இது யூனிட்டில்உள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தச் சம்பவம் வெளியே தெரிந்து விட்டதால் கோபம் அடைந்த அவர் உன் எதிர்காலத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார். ஆனால் அவர் அதே நாளில் என் தாயாருடன் பேசும் போது மலேசியாவில் இருப்பதாக பொய் சொல்லியுள்ளார்.

இதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட தவறான எண்ணத்துடன் என்னுடனும், என் குடும்பதினருடனும் பழகியுள்ளார் என்பதுதெரிய வரும். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் நான் நடந்தது கொண்டது தவறு என்னை மன்னித்து விடு என்று எஸ்எம்எஸ்அனுப்பியிருந்தார். அந்த தகவல் இன்னும் என்னிடம் உள்ளது.

காளிகாம்பாள் கோவிலுக்கு நான் அழைத்து சென்றதாகவும் மழையில் நனைய விட்டு காரில் சென்றதாகவும் பொய்களைஅவிழ்த்து விட்டுள்ளார். உண்மையாகவே என் மீது காதல் இருந்திருந்தால் மலேசியாவிலேயே தற்கொலை முயற்சி செய்து இருக்கவேண்டும். என் வீட்டின் முன்பு அந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்.

இப்படி எதுவும் செய்யாமல் தற்கொலை நாடகமாடியுள்ளார். அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று நான் முடிவுசெய்துவிட்டதால் என் எதிர்காலத்தை கெடுக்க வீண் பழி சுமத்துகிறார். திருமண நிச்சயதார்த்தம் செய்து இருந்தால் என் நிலைமைமிகவும் மோசமாகி இருக்கும்.

அவர் குடும்ப நண்பராக பழகியதால் இதுவரை அமைதி காத்தேன். தொடர்ந்து என்னைப்பற்றி தவறாக கூறுவதால் சட்டப்படிநடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் ஸ்னேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X