For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீ சரியில்ல..: நாக்ரவி தெலுங்கு பட விழாவில் தாயார், நாக்ரவியுடன் ஸ்னேகா

  By Staff
  |
  தெலுங்கு பட விழாவில் தாயார், நாக்ரவியுடன் ஸ்னேகா

  முன்னதாக நடிகை ஸ்னேகா மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அவரது முன்னாள் காதலர் நாகரவி கூறினார்.

  ஸ்னேகாவின் காதலர் என்று பேசப்பட்டவர் நாக்ரவி. மலேசியாவைச் சேர்ந்த இவர் ஸ்னேகாவுக்காக செய்துள்ள செலவு (வைரநெக்லஸ், வைர மோதிரம் உள்பட நகைகள், ஊர் சுத்தல், ஹோட்டல் செலவுகள், இத்யாதி, இத்யாதி) ரூ. 20 லட்சத்தைத்தாண்டுகிறது (இது நாக்ரவி சொல்லும் கணக்கு).

  ஸ்னேகாவும் இவரும் கொஞ்சிக் குலாவியபடி இருக்கும் பல படங்கள், ஸ்னேகாவின் அப்பா இவருக்கு கேக் ஊட்டுவது,ஸ்னேகாவின் அம்மாவுடன் இவர் அமர்ந்திருப்பது ஆகிய படங்கள் வெளியான நிலையில் நாக்ரவியா?.. அது யார் என்றுநடிகைக்கே உரிய பாணியில் கேள்வி எழுப்பினார் ஸ்னேகா.

  ஜில்லுனு சாப்பிடுங்க, மாப்ள... நாக்ரவிக்கு ஐஸ்கிரீம் ஊட்டும் ஸ்னேகாவின் தந்தை

  நொந்து போன நாக்ரவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது மலேசியா திரும்பியுள்ள நாக்ரவி அங்குஅளித்த பேட்டி:

  ஸ்னேகாவை திருமணம் செய்யும்படி அவரது குடும்பத்தினர் தான் என்னிடம் வற்புறுத்தினர். ஸ்னேகாவின் அப்பா என் கையைபிடித்துக் கொண்டு என் மகளை எல்லோரையும் போல (நடிகர் ஸ்ரீகாந்த்??) கைவிட்டுவிடாதீர்கள் என்று சத்தியம் வாங்காதகுறையாக பேசினார்.

  கல்யாணத்திற்கு பிறகு கோலாலம்பூரில் தனிக்குடித்தனம் நடத்த வேண்டும், அதற்கு ரூ. 45 லட்சம் மதிப்புள்ள இந்த வீடுவேண்டாம். இன்னும் புதிய வீடாக வேண்டும் என்று ஸ்னேகாவும் அவரது அப்பாவும் என்னுடன் கோலாலம்பூர் முழுவதும்தெருத் தெருவாக காரில் சுற்றினார்கள். இருபது வீடுகளுக்கு மேல் பார்த்து கடைசியில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஒரு பெரியவீட்டை சேர்வு செய்தோம்.


  அதன் பிறகு பெரிய பர்னிச்சர் கடைகளுக்கு சென்று வீட்டு அலங்கார பொருட்களை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்தோம்.திருமணத்திற்கு சம்மதித்தவர்கள் இப்போது என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் சொல்வது பொய் என்கிறார் ஸ்னேகா. அப்படிஎன்றால் என் மீது வழக்கு போடட்டும். ஏன் தயங்க வேண்டும்?.

  ஸ்னேகாவின் புகழை நான் கெடுக்கவில்லை. இந்த நிமிடம் வரை அவருக்கு நான் கெடுதல் நினைக்கவில்லை. அவர்தான் என்மீது சேற்றை வாரி இறைக்கிறார். ஸ்னேகாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போது யாரும் உதவிக்கு வரவில்லை.நான் போய் நின்றேன்.

  அதிகாரிகளிடம், இந்த நகையெல்லாம் என் மாப்பிள்ளை கொடுத்தது என்று ஸ்னேகாவின் அப்பா என்னைக் காட்டினார்.இதையடுத்து என் வருமானத்தைப் பற்றி அதிகாரிகள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். அதற்கெல்லாம் பதில்சொல்லிவிட்டுத் திரும்பினேன்.


  அதன் பிறகு 3 நாட்கள் கழித்து வருமான வரி சோதனையில் எல்லாம் போய்விட்டது. நிறைய கடன் அதனால் திருமணத்தைஓராண்டு தள்ளிப் போடலாம் என்றனர். திருமண ஏற்பாடுகளை செய்து முடித்து விட்டு திடீரென்று நிறுத்தினால் என்ன நியாயம்.

  ஸ்னோகாவிடம் இது குறித்து நேரிலேயே நான் பேசினேன். கல்யாண மண்டபம் கட்டியது. புதிதாக சென்னையில் 80 லட்சத்துக்குவீடு வாங்கியது என மாதம் தோறும் ஒரு லட்சம் லோன் கட்ட வேண்டி உள்ளது. அதை சம்பாதிக்கும் வரை நடிக்க வேண்டும்என்றார்.

  அதே நேரத்தில் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி தரும்போது என்னை மகா கேவலமானவனாக விமர்சிக்கிறது ஸ்னேகா குடும்பம்.எனவே ஸ்னேகா மீது மான நஷ்ட வழக்கு போடுவது பற்றியும் யோசித்து வருகிறேன். எனது நண்பர்கள் சொன்னதன் பேரில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார் நாக்ரவி.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X