‘காந்தாரா சாப்டர் 1‘ படத்தை தடுக்கும் அமானுஷ்யம்.. தெய்வத்தை சீண்டியதால் வரும் பிரச்சனையா? பிரபலம்!
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு கடந்த ஆண்டு அறிவித்து இருந்த நிலையில், படப்பிடிப்பில் தொடர்ந்து நடந்து வரும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதால், படத்தில் நடித்து வந்த நடிகர்கள் நடிக்க மறுப்பதாக பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' படம் கடந்த 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதில் சப்தமி கவுடா, கிஷோர் என பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த
"காந்தாரா" படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றது. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னட மலை பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இப்டபம் எடுக்கப்பட்டது. 16 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், 400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

காந்தாரா: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த மாதம் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடித்து வந்த துணை நடிகர் கபில் உயிரிழந்தார். படப்பிடிப்பின் போது, மதிய உணவு இடைவெளியில் கபிலன், ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது. ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், அவர் அடித்துச் செல்லப்பட்டார். மீட்பு குழுவினர் நீண்ட நேரம் தேடி உடலை மீட்டனர். அடுத்த வாரமே, படத்தில் நடித்து வந்த மற்றொரு நடிகர் ராகேஷ் பூஜாரி, மாரடைப்பால் உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின் போது சில அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் முகில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.
சரிந்து விழுந்த செட்: அதில், காந்தாரா படப்பிடிப்பில் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதால் படத்தில் நடிக்கவே சில பல நடிகர்கள் பயப்படுகிறார்கள். படத்திற்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடந்து கொண்டிருந்த போது செட் திடீரென சரிந்து விழுந்தது. இதனால், படகுழுவிற்கு கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொல்லூரில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படகுழுவினர் ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் பலருக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. இதே போல, கபில் என்ற துணை நடிகர், நீச்சல் தெரிந்த அவர் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதே போல ராகேஷ் பூஜாரி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
அமானுஷ்யம்: இதனால், பயந்து போன படக்குழு மந்திரவாதியிடம் கேட்ட போது, இந்த படத்திற்கு அமானுஷ்யம் இருக்கிறது. அது படத்தை தடுக்கிறது என்றும், தொடர்ந்து உயிர் பலி வரும் என்று சொன்னதால், படக்குழு மிகுந்த கவனத்துடன் படத்தை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வராகி உருவம் பொறித்து அதில் நாகம் இருப்பது போல கிரீடம் செய்யப்பட்டுள்ளது. அந்த கிரீடம் தானாகவே உடைந்துவிட்டதாகவும், எத்தனை முறை செய்தாலும் அது தானாக உடைந்து விடுவதாக கர்நாடகா மாநிலத்தில் வரும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளது. இதனால், படத்தில் நடிப்பதற்கே நடிகர்கள் பயப்படுகிறார்கள் என்று முகில் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











