கூட்டத்தில் சிக்கிய நடிகையை பின்னால் கிள்ளிய விஷமி
Recommended Video

மும்பை: கூட்டத்தில் சிக்கியபோது தனக்கு நடந்த கொடுமை குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான மணிகர்னிகா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் கங்கனாவை தவிர வேறு யாராலும் ஜான்சி ராணியாக இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
படம் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு
பெண்கள் தங்களை பாதுகாக்க தற்காப்பு கலையை கற்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்தபோது அவரை பலரும் விளாசினார்கள். இந்நிலையில் கங்கனா ராணி முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கங்கனா
நாம் பாதுகாப்பாக உணர அடுத்தவர்கள் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரி அல்ல. நான் 16 வயதில் அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அடுத்தவர்கள் உங்களை காப்பாற்ற வேண்டும், உங்களை பாதுகாப்பாக உணரச் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றம்
குற்றம் செய்பவர்கள் அது தவறு என்று தெரிந்து தான் செய்கிறார்கள். த்ரிலுக்காக தவறுகளை செய்கிறார்கள். நான் ஒரு கூட்டத்தின் நடுவே நின்றபோது ஒருவர் என் பின்னால் கிள்ளிவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் என்கிறார் கங்கனா.

துணிச்சல்
அந்த நபர் என்னை கிள்ளிவிட்டு என் கண்களை பார்ப்பது இப்ப என்ன செய்வ என்பது போன்று இருந்தது. அதனால் என்ன எதிர்பார்க்க முடியும்?. நம் பாதுகாப்புக்கு அடுத்தவர்களை நம்பி இருக்கக் கூடாது என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











