»   »  வெரைட்டி சோனா!

வெரைட்டி சோனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆந்திரத்து அழகு மிளகாய் சோனா, கிளாமர், மாடர்ன், ஹோம்லி என மாறி மாறிநடித்து ரசிகர்களை வெரைட்டியாக மிரட்டுவதே லட்சியம் என்று கன்னக் குழி ததும்பகூறுகிறார்.

கேரளாவிலிருந்து ஹீரோயின்கள் புற்றீசல் போல கிளம்பி வரும் நிலையில்,ஆந்திரத்தின் குக்கிராமத்திலிருந்து அம்சமாக புறப்பட்டு வந்துள்ளார் சோனா.

கம்மம் மாவட்டத்தில் உள்ள வறப்பட்டிக்காடு தான் சோனாவைப் பெற்றெடுத்தசொர்க்க பூமியாம். பார்த்தவுடனேயே நெஞ்சைப் பதற வைக்கிறது சோனாவின்சொக்க வைக்கும் அழகு.

தாய்மொழியைப் போலவே தமிழையும் படு லாவகமாக பேசுகிறார் சோனா. அம்மணிகை நிறையப் படங்கள். அருவாலிங்கம்தான் சோனாவுக்கு முதல் படம். அதில்பட்டை தீட்டப்பட்டு, மெருகேறிய சோனாவுக்கு அடுத்தடுத்து நிறையப் படங்கள்.

இப்போது முரட்டுப் பயல், உறுதி, அழைப்பிதழ் என பிசியாக இருக்கிறார். இதில்முரட்டப் பயல் படத்தில் சோனாவுக்கு முரட்டுத்தனமான கிளாமர் ரோலாம்.இப்படத்தில் என்னைப் பார்க்கும் கண்கள் அசரப் போவது நிச்சயம் என்கிறார் சோனாவெட்கப் புன்னகையுடன்.

சோனாவின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சினிமாவைப் பத்தி ஒண்ணுமேதெரியாதாம். அந்த அளவுக்கு அவங்க வெள்ளந்தி மனிதர்களாம். இவராகப் பார்த்துஏதாவது சொன்னால்தான் அவர்களுக்குத் தெரியுமாம். அந்த அளவுக்கு அப்பாவிமக்காவாம்!

ஒன்லி கிளாமர்தானா என்று கேட்டால், ஜம்மென்று குந்திக் கொண்டு பேசுகிறார்சோனா. அப்படியெல்லாம் இல்லை. முரட்டுப் பயல் படத்தில் கிளாமர்தேவைப்படுகிறது. அதனால் நடிக்கிறேன். உறுதி படத்தில் நான் கிராமத்துப்பொண்ணாக கண்டாங்கிச் சேலை சரசரக்க நடிக்கிறேன்.

அதேபோல அழைப்பிதழ் படத்திலும் எனக்கு அருமையான கேரக்டர். எனக்கு எந்தரோலாக இருந்தாலும் கவலையில்லை. கொடுத்த ரோலுக்கு சிறப்பாக நடித்துக்கொடுப்பேன் என்கிறார் சோனா.

அவரே தொடர்ந்து, சேலையிலும் கிளாமர் காட்ட முடியும், குறைச்சலான உடையிலும்கிளாமர் காட்ட முடியும். எப்படிக் காட்டுகிறோம் என்பது முக்கியமில்லை. அந்தக்கேரக்டருக்கு அது பொருத்தமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று கிளாமர்புராணம் பாடுகிறார்.

கிளாமர், மாடர்ன் கேர்ள், ஹோம்லி, ஆக்ஷன், காமெடி என வெரைட்டியானரோல்களில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து அசத்துவதுதான் எனதுலட்சியம் என்று படு போடு போடுகிறார் சோனா.

ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார் சோனா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil