For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  போன் பண்ண போனேன்..நடிகை ஆய்ட்டேன்- சோனா அப்போது தான் பிரித்த ரெக்சோனா மாதிரி படு பிரஷ்ஷாக இருக்கிறார் சோனா.புஷ்டியில் கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் கும்மென்று இருக்கிறார்.ஆத்தாவுக்கு வடக்கயோ? என்று கிட்டப் போய் கேட்டால், இல்லீங்கண்ணா,தமிழ்நாடு தான் பொறந்த ஊரு. ஆனா அம்மாவுக்கு இலங்கை, அப்பா பிரெஞ்சுகுடியுரிமை பெற்றவர் என்று குழப்பக் குண்டை கிட்டக்கப் போட்டு விட்டுகெக்கபிக்கவென்று சிரிக்கிறார்.சினிமாவுக்கு வந்தது எப்படி?சென்னையில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். 2001ல் நான் மிஸ் சவுத் இந்தியாபோட்டியில் பட்டம் சூட்டப்பட்டேன். அதில் சிறந்த சிரிப்பழகி, சிறந்த பூனைநடையழகி என்ற பட்டங்களையும் நானேதான் தட்டிச் சென்றேன் (மறுபடியும்கெக்கபிக்கே!

  By Staff
  |
  அப்போது தான் பிரித்த ரெக்சோனா மாதிரி படு பிரஷ்ஷாக இருக்கிறார் சோனா.புஷ்டியில் கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் கும்மென்று இருக்கிறார்.

  ஆத்தாவுக்கு வடக்கயோ? என்று கிட்டப் போய் கேட்டால், இல்லீங்கண்ணா,தமிழ்நாடு தான் பொறந்த ஊரு. ஆனா அம்மாவுக்கு இலங்கை, அப்பா பிரெஞ்சுகுடியுரிமை பெற்றவர் என்று குழப்பக் குண்டை கிட்டக்கப் போட்டு விட்டு

  கெக்கபிக்கவென்று சிரிக்கிறார்.

  சினிமாவுக்கு வந்தது எப்படி?

  சென்னையில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். 2001ல் நான் மிஸ் சவுத் இந்தியாபோட்டியில் பட்டம் சூட்டப்பட்டேன். அதில் சிறந்த சிரிப்பழகி, சிறந்த பூனைநடையழகி என்ற பட்டங்களையும் நானேதான் தட்டிச் சென்றேன் (மறுபடியும்கெக்கபிக்கே!)

  சிறந்த தலைமுடிப் பிரிவுக்கான போட்டியில் நடிகை ஸ்னேகாதன் நடுவராக வந்தார்.ஆனாலும் நான் அதில் பரிசு பெற முடியவில்லை என்று செல்லமாக வருத்தப்பட்டார்சோனா (ஏஏஏஏஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!).

  ஒரு நாள் அண்ணா நகர் பக்கம் டெலிபோன் செய்வதற்காக எஸ்டிடி பூத்துக்குப்போனாராம் சோனா. அப்போது எதேச்சையாக நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவரதுமனைவி ஜீவிதாவும் சோனவைப் பார்த்து விட்டு நின்றுவிட்டனராம்.

  பூத்தில் பேசி முடித்து வெளியே வந்த சோனாவை ஜீவிதா கூப்பிட்டு நல்லாஇருக்கியே, நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

  ஏதோ தமாஷ் பண்றார் போல ஜீவிதா என்று நினைத்துள்ளார் சோனா. ஆனால்ஜீவிதாவும், ராஜசேகரும் சீரியஸா பேசுறோம் என்றவுடன் சரி என்று மண்டையைஆட்டி விட்டாராம். அப்புறம் என்ன தெலுங்கில் ராஜசேகர்-ஜீவிதா தயாரித்த ஆயுதம்படத்தின் நாயகியாகி விட்டார் சோனா.

  ஆனால் அடுத்தடுத்து நாயகி வாய்ப்பு அவரைத் தேடி வரவில்லை. மாறாககுத்தாட்டம் போடவே கூப்பிட்டிருக்கிறார்கள் (பார்க்க மஜக் மஜக்னு இருந்தாஅதுக்குத்தான் கூப்பிடுவாங்கோ!) ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரோடுகுண்டக்க மண்டக்க ஆட்டம் போட்சார் சோனா.

  இப்படி தெலுங்கில் வலம் வந்து கொண்டிருந்த சோனாவுக்கு அவரது மேனேஜரின்கடும் முயற்சிக்குப் பின்னர் தமிழில் கேள்விக்குறி பட வாய்ப்பு வந்ததாம்.

  படு மாடர்ன் கேர்ள் ஆக இதில் கலகுக்கிறாராம் சோனா. அத்தோடு அருவாலிங்கம்(பேரே சரியில்லீங்களே!) என்ற புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம்சோனா.

  இவரது அருமை பெருமைகளை அறிந்த சிவப்பதிகாரம் யூனிட், ஒத்தப் பாட்டுக்குவந்துட்டு போங்க என்று கூப்பிட்டுள்ளார்கள். சோனாவும் ஓ.கே. சொல்லியுள்ளாராம்.

  நீங்க நாயகியா, இல்ல குத்தாட்ட சுந்தரியா என்று சோனாடம் கேட்டால், எல்லாம்ஒண்ணுதான். எதா இருந்தா என்ன? மக்கள் மனதில் இடம் பிடித்தால் போதாதா என்றுபோட்டுத் தாக்குகிறார் ரெக் சோனா.

   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X