வடிவேலுவுக்கு அடி.. விஜய்க்கு கிஸ்.. ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன்.. சோனாவின் கிஸ் லிஸ்ட்!
சென்னை: கவர்ச்சி நடிகையான சோனா, நடிகையாக மட்டுமில்லாமல், சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அண்மையில் சோனா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதில், வடிவேலுவை அடிப்பேன், விஜய்க்கு கிஸ் கொடுக்க விருப்பம் என வெளிப்படையாக பேசி உள்ளார்.
நடிகை சோனா தமிழில் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து குசேலன், யாமிருக்க பயமேன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அண்மையில், நடிகை சோனா யூடியூப் சேனலுக்கு அந்த பேட்டியில் இடம்பெற்ற ரேபிட் ஃபயர் ரவுண்டில் தொகுப்பாளர் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினார் அதற்கு தரமான பதிலளித்துள்ளார். அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை சோனா: அதில், தொகுப்பாளர் அடிக்க வேண்டும் என்றால் யாரை அடிப்பீங்க? என்ற கேள்விக்கு சோனா கொஞ்சம் கூட யோசிக்காமல் நடிகர் வடிவேலு பெயரை சொல்லி அவரைத்தான் நடிப்பேன் என்றார். தொடர்ந்து யாருக்கு முத்தம் கொடுக்க விருப்பம்? என்ற கேள்விக்கு , நான் மிகவும் விரும்புவது நடிகர் விஜய்யை, அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என சொல்வேன். ஆனால், இப்போது அவர் தலைவராக இருப்பதால், அவருக்கு என் மரியாதையை கொடுக்கிறேன். அடுத்ததாக யாருக்கு முத்தம் கொடுப்பேன் என்றால், ஹரிஷ் கல்யாண் மற்றும் அஷோக் செல்வன். இருவரும் மிகவும் அழகானவர்கள், அன்பானவர்கள், நல்ல மனிதராக இருக்கிறார்கள். அதனால் அவருக்கும் கிஸ் கொடுக்கலாம் என நினைக்கிறேன் என்றார்.
கலகல பேட்டி: உடனே தொகுப்பாளர் குசும்பாக அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்? கிஸ் கொடுத்து விடுங்கள் என சொல்ல, எனக்கு ஓகே தான். ஆனால் அவர்கள் 'நோ ஆண்டி' என சொல்லிவிட்டால் என்ன ஆவாது என சோனா நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். தற்போது நடிகை சோனாவின் இந்த கலகலப்பான பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications