தனுஷ் மாதிரி புருஷன் வேணும்... சோனம் கபூரின் ஆசை இது!

By Mayura Akilan

தனுஷ் உடன் முதன் முதலாக ஒரு படத்தில் நடித்துள்ள சோனம் கபூர், தனக்கு தனுஷ் மாதிரி கணவர் வேண்டும் என்று கூறியுள்ளார். தனுஷ் ஒரு அப்பாவி எனவே தமிழ்நாட்டிற்கு வந்து தனுஷ் மாதிரியான மாப்பிள்ளை ஒருவரை தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்வேன் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்தியில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள படம் ராஞ்சனா. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர். இருவரும் பள்ளி மாணவர்கள் கெட் அப்பில் நடித்துள்ளனர்.

ராஞ்சனா படம் பற்றியும், அதில் தனுசுடன் நடித்த இனியமையான அனுபவங்களை மும்பை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்போதுதான் தனக்கு கணவராக வருகிறவர் தனுஷ் மாதிரியே இருக்க வேண்டும் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

 அப்பாவி தனுஷ்

அப்பாவி தனுஷ்

இந்த படத்தில் ராஞ்சனா என்றால் அது தனுஷ்தான். அவரைப்போன்று யாருமே கிடையாது. அப்பாவித்தனமான அவர் பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர். அவருடன் பழகின பிறகுதான், தனக்கு எதிர்காலத்தில் இவரை மாதிரியான ஒருவர்தான் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மாப்பிள்ளை

தமிழ்நாட்டு மாப்பிள்ளை

அதோடு நிற்காமல் தமிழ்நாட்டுக்கு சென்று தனுஷ் மாதிரியான ஒருவரைத்தான் தேர்வு செய்வேன் என்று நினைக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். ராஞ்சனா திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு தனுஷ்கள் ரெடியா இருங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X