கல்யாணமாம் கல்யாணம்... சோனியா அகர்வாலுக்கும், எனக்கும் இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்று இயக்குனர் செல்வராகவன் தடாலடியாக அறிவித்துள்ளார். நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த செய்தியை இருவரும் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. ஆனால் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது உறுதி என்ற தகவல் ரொம்ப காலமாகவே பேசப்பட்டு வருகிறது. இந் நிலையில் சோனியா புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதை நிறுத்தி வைத்துள்ளார். தனக்கும், செல்வராகவனுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக தன்னை அணுகும் இயக்குனர்களிடம் கூறிவருகிறார். ஆனால் இதை செல்வராகவன் மறுத்துள்ளார். அவருக்கே உரிய யாருக்கும், புரியாத வகையில் செல்வராகன் தனது திருமணம் தொடர்பான செய்தியை மறுத்துக் கூறியதாவது: சோனியா இப்போது சண்டீகர் (சொந்த ஊர்) சென்றுள்ளார். அவர் எதற்காக சென்றார் என்பதை நான் விளக்க முடியாது. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். புதுப்பேட்டை படத்தில் மட்டுமே இப்போது எனது முழுக் கவனமும். அதை ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளோம். படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன். சோனியாவுடன் உங்களது கல்யாணம்? புதுப்பேட்டை முலில் வெளி வர வேண்டும். அதன் பிறகு தெலுங்குப் படம் செய்யப் போகிறேன். பின்னர் இந்திப் படம் ஒன்றையும் இயக்கப் போகிறேன். அப்ப, சோனியாவுடனான கல்யாணம்? எனக்கு படங்கள்தான் முக்கியம். அதை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். அட, அப்ப சோனியாவுடனான கல்யாணம்? கல்யாணம் செய்து கொண்டால் என்னால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடும். அதனால் படங்களுக்குத்தான் இப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். எனக்கு 29 வயதாகி விட்டது என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ள முடியாது. அதற்கு இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பது மட்டும் உறுதி. கல்யாண டிரஸ் எடுக்கத்தான் சோனியா சண்டீகர் போயுள்ளார் என்கிறார்களே? அப்படியா, எனக்குத் தெரியாதே!,, என்றார் செல்வா. அப்ப சோனியாவுடனான கல்யாணம்?.. (நம்ம ரிப்போர்டர் இப்போதெல்லாம் தூக்கத்திலும் இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்)
சோனியா அகர்வாலுக்கும், எனக்கும் இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்று இயக்குனர் செல்வராகவன் தடாலடியாக அறிவித்துள்ளார்.
நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த செய்தியை இருவரும் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. ஆனால் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது உறுதி என்ற தகவல் ரொம்ப காலமாகவே பேசப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சோனியா புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதை நிறுத்தி வைத்துள்ளார். தனக்கும், செல்வராகவனுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக தன்னை அணுகும் இயக்குனர்களிடம் கூறிவருகிறார்.
ஆனால் இதை செல்வராகவன் மறுத்துள்ளார். அவருக்கே உரிய யாருக்கும், புரியாத வகையில் செல்வராகன் தனது திருமணம் தொடர்பான செய்தியை மறுத்துக் கூறியதாவது:
சோனியா இப்போது சண்டீகர் (சொந்த ஊர்) சென்றுள்ளார். அவர் எதற்காக சென்றார் என்பதை நான் விளக்க முடியாது. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
புதுப்பேட்டை படத்தில் மட்டுமே இப்போது எனது முழுக் கவனமும். அதை ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளோம். படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன்.
சோனியாவுடன் உங்களது கல்யாணம்?
புதுப்பேட்டை முலில் வெளி வர வேண்டும். அதன் பிறகு தெலுங்குப் படம் செய்யப் போகிறேன். பின்னர் இந்திப் படம் ஒன்றையும் இயக்கப் போகிறேன்.
அப்ப, சோனியாவுடனான கல்யாணம்?
எனக்கு படங்கள்தான் முக்கியம். அதை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.
அட, அப்ப சோனியாவுடனான கல்யாணம்?
கல்யாணம் செய்து கொண்டால் என்னால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடும். அதனால் படங்களுக்குத்தான் இப்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். எனக்கு 29 வயதாகி விட்டது என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ள முடியாது.
அதற்கு இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பது மட்டும் உறுதி.
கல்யாண டிரஸ் எடுக்கத்தான் சோனியா சண்டீகர் போயுள்ளார் என்கிறார்களே?
அப்படியா, எனக்குத் தெரியாதே!,, என்றார் செல்வா.
அப்ப சோனியாவுடனான கல்யாணம்?..
(நம்ம ரிப்போர்டர் இப்போதெல்லாம் தூக்கத்திலும் இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்)


Click it and Unblock the Notifications











