»   »  கல்யாணத்துக்கப்புறமும்.. செல்வராகவனை திருமணம் செய்து கொண்டாலும் நான் சினிமாவை விட மாட்டேன்,தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சோனியா அகர்வால்.நடக்குமா, நடக்காதா என்ற கோலிவுட் விவாதத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளிவைத்துள்ளார்கள் சோனியா அகர்வாலும், செல்வராகவனும். இருவரும் ஒரு வழியாகதிருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.ஒரு பக்கம் சோனியாவின் நெருக்குதல், மறுபக்கம் பெற்றோர், தம்பி தனுஷ்,அவருடைய மனைவி ஐஸ்வர்யா, சகோதரிகள் என பலமுனை நெருக்குதலிலிருந்துதப்பிக்க முடியாத செல்வராகவன் சோனியாவை அஃபீஷியலாக கட்டிக் கொள்ளஓ.கே சொல்லி விட்டார்.திருமணம் வட நாட்டு முறைப்படி சண்டிகரில் (சோனியாவின் சொந்த ஊர் அதுதான்)நடக்கும் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அதில் மாற்றம்.தமிழ் முறைப்படி, சென்னையிலேயே திருமணத்தை நடத்த இப்போதுமுடிவாகியிருக்கிறதாம். செல்வராகவன் இப்போது புதிதாக இரண்டு படங்களைசெய்யவுள்ளார். ஒன்று தெலுங்கில் அவர் இயக்கும் படம், இன்னொன்று ராதிகாவின்ராடன் பட நிறுவனத்திற்காக இந்தியில் இயக்கவுள்ள 7ஜி ரெயின்போ காலனி.இந்த இரு படங்களையும் முடித்து விட்டுத்தான் சோனியாவை கைப்பிடிக்கவுள்ளாராம்செல்வா. இதனால் திட்டமிட்டபடி அக்டோபரில் திருமணம் நடப்பதாகஅறிவிக்கப்பட்டது சில வாரங்கள் தள்ளிப் போகக் கூடுமாம் (ஆமாமா, அண்ணன்படத்தை இயக்க ஆரம்பிச்சா, எப்ப முடிப்பார்னு அவருக்கே தெரியாது!)கட்டக் கடைசியாக செல்வாவைக் கைப்பிடிக்கப் போகும் வெற்றிக் களிப்பில்இருக்கிறார் சோனியா. கல்யாணம் முடிவாகி விட்டது, ஆனால் அக்டோபர் என்றுஉறுதியாக கூற முடியாது. இன்னும் ஏற்பாடுகளை இரு தரப்பினரும்ஆரம்பிக்கவில்லை.இது குறித்து சோனியாவிடம் கேட்டால், ரொம்ப நெருக்குதல் கொடுத்துத்தான்செல்வாவை எல்லோரும் சேர்ந்து வழிக்குக் கொண்டு வந்தார்களாம். மனுஷன் இந்தமுறை தப்பிக்க முடியவில்லை (கலகலவென சிரிக்கிறார்).அப்புறம் இன்னும் இரு வீட்டாரும் முறைப்படி பேசிக் கொள்ளவில்லை, சீக்கிரமேபேசுவார்கள். முடிசம்பர் போல கல்யாணம் இருக்கலாம்.சரி, யார்முதலில் காதலைச் சொன்னது என்ற கேள்வியை தூக்கி சோனியாவிடம்போட்டபோது,அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, அவர் ஒண்ணும் வெளிப்படையான ஆசாமிஇல்லை, நான்தான் காதலை முதலில் சொன்னேன். அப்படியா என்று மொட்டையாகக்கேட்டுக் கொண்டு அடுத்த சீனுக்குப் போய் விட்டார் பார்ட்டி. இப்படித்தான்ஆரம்பித்தது எங்களது காதல்.அவர் காதல் வசனம் பேசித் திரியும் ரோமியோ கிடையாது. டின்னருக்கு என்னைக்கூட்டிக் கொண்டு போனது கிடையாது (நெசமாலுமா?) எதாக இருந்தாலும் நானாகபார்த்து இழுத்துக் கொண்டு போனால்தான் உண்டு என்கிறார் சோனியா.கல்யாணத்துக்கப்புறம்? அப்பவும் நான் நடிகையாகத்தான் இருப்பேன். அதற்கு என்னபிரச்சினை வந்து விட்டது? கல்யாணத்துக்குப் பிறகு செல்வா படமே இயக்கப்போவதில்லையா? அது போலத்தான் நானும். நான் ஒரு நடிகை, எனவே நடிப்புஇருக்கும் வரை நானும் நடித்துக் கொண்டுதான் இருப்பேன்.ஆனா தமிழ் சினிமாக்காரங்க ஆண்ட்டியை (செல்வா அங்கிளோட ஒய்ப் ஆனாசோனியா ஆண்ட்டிதானே!) எல்லாம் நடிக்க வைக்க மாட்டாங்களே என்று நாம்இழுத்தால்,யார் சொன்னது, அழகா இருந்தால் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கத்தான்செய்யும். நான் அழகாக இருக்கிறேன், நன்றாகவும் நடிக்கிறேன். ஸோ, தொடர்ந்துநடிப்பதில் ஒரு குழப்பமும் இல்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறையஇருக்கு என்று கோணல் வாய் புன்னகையுடன் பேட்டியை முடித்தார் சோனியா.சோனியா அகர்வாலோடே பெஸ்ட் பிரண்ட் யார் தெரியுமா? உட்பி மச்சினன்தனுஷோட மனைவி ஐஸ்வர்யாதான். எங்கே போவதாக இருந்தாலும் இரண்டு பேரும்சேர்ந்தேதான் போறாங்கோ, வர்றாங்கோ. அந்த அளவுக்கு குளோஸ் ஆயிட்டாங்க.

கல்யாணத்துக்கப்புறமும்.. செல்வராகவனை திருமணம் செய்து கொண்டாலும் நான் சினிமாவை விட மாட்டேன்,தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சோனியா அகர்வால்.நடக்குமா, நடக்காதா என்ற கோலிவுட் விவாதத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளிவைத்துள்ளார்கள் சோனியா அகர்வாலும், செல்வராகவனும். இருவரும் ஒரு வழியாகதிருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.ஒரு பக்கம் சோனியாவின் நெருக்குதல், மறுபக்கம் பெற்றோர், தம்பி தனுஷ்,அவருடைய மனைவி ஐஸ்வர்யா, சகோதரிகள் என பலமுனை நெருக்குதலிலிருந்துதப்பிக்க முடியாத செல்வராகவன் சோனியாவை அஃபீஷியலாக கட்டிக் கொள்ளஓ.கே சொல்லி விட்டார்.திருமணம் வட நாட்டு முறைப்படி சண்டிகரில் (சோனியாவின் சொந்த ஊர் அதுதான்)நடக்கும் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அதில் மாற்றம்.தமிழ் முறைப்படி, சென்னையிலேயே திருமணத்தை நடத்த இப்போதுமுடிவாகியிருக்கிறதாம். செல்வராகவன் இப்போது புதிதாக இரண்டு படங்களைசெய்யவுள்ளார். ஒன்று தெலுங்கில் அவர் இயக்கும் படம், இன்னொன்று ராதிகாவின்ராடன் பட நிறுவனத்திற்காக இந்தியில் இயக்கவுள்ள 7ஜி ரெயின்போ காலனி.இந்த இரு படங்களையும் முடித்து விட்டுத்தான் சோனியாவை கைப்பிடிக்கவுள்ளாராம்செல்வா. இதனால் திட்டமிட்டபடி அக்டோபரில் திருமணம் நடப்பதாகஅறிவிக்கப்பட்டது சில வாரங்கள் தள்ளிப் போகக் கூடுமாம் (ஆமாமா, அண்ணன்படத்தை இயக்க ஆரம்பிச்சா, எப்ப முடிப்பார்னு அவருக்கே தெரியாது!)கட்டக் கடைசியாக செல்வாவைக் கைப்பிடிக்கப் போகும் வெற்றிக் களிப்பில்இருக்கிறார் சோனியா. கல்யாணம் முடிவாகி விட்டது, ஆனால் அக்டோபர் என்றுஉறுதியாக கூற முடியாது. இன்னும் ஏற்பாடுகளை இரு தரப்பினரும்ஆரம்பிக்கவில்லை.இது குறித்து சோனியாவிடம் கேட்டால், ரொம்ப நெருக்குதல் கொடுத்துத்தான்செல்வாவை எல்லோரும் சேர்ந்து வழிக்குக் கொண்டு வந்தார்களாம். மனுஷன் இந்தமுறை தப்பிக்க முடியவில்லை (கலகலவென சிரிக்கிறார்).அப்புறம் இன்னும் இரு வீட்டாரும் முறைப்படி பேசிக் கொள்ளவில்லை, சீக்கிரமேபேசுவார்கள். முடிசம்பர் போல கல்யாணம் இருக்கலாம்.சரி, யார்முதலில் காதலைச் சொன்னது என்ற கேள்வியை தூக்கி சோனியாவிடம்போட்டபோது,அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, அவர் ஒண்ணும் வெளிப்படையான ஆசாமிஇல்லை, நான்தான் காதலை முதலில் சொன்னேன். அப்படியா என்று மொட்டையாகக்கேட்டுக் கொண்டு அடுத்த சீனுக்குப் போய் விட்டார் பார்ட்டி. இப்படித்தான்ஆரம்பித்தது எங்களது காதல்.அவர் காதல் வசனம் பேசித் திரியும் ரோமியோ கிடையாது. டின்னருக்கு என்னைக்கூட்டிக் கொண்டு போனது கிடையாது (நெசமாலுமா?) எதாக இருந்தாலும் நானாகபார்த்து இழுத்துக் கொண்டு போனால்தான் உண்டு என்கிறார் சோனியா.கல்யாணத்துக்கப்புறம்? அப்பவும் நான் நடிகையாகத்தான் இருப்பேன். அதற்கு என்னபிரச்சினை வந்து விட்டது? கல்யாணத்துக்குப் பிறகு செல்வா படமே இயக்கப்போவதில்லையா? அது போலத்தான் நானும். நான் ஒரு நடிகை, எனவே நடிப்புஇருக்கும் வரை நானும் நடித்துக் கொண்டுதான் இருப்பேன்.ஆனா தமிழ் சினிமாக்காரங்க ஆண்ட்டியை (செல்வா அங்கிளோட ஒய்ப் ஆனாசோனியா ஆண்ட்டிதானே!) எல்லாம் நடிக்க வைக்க மாட்டாங்களே என்று நாம்இழுத்தால்,யார் சொன்னது, அழகா இருந்தால் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கத்தான்செய்யும். நான் அழகாக இருக்கிறேன், நன்றாகவும் நடிக்கிறேன். ஸோ, தொடர்ந்துநடிப்பதில் ஒரு குழப்பமும் இல்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறையஇருக்கு என்று கோணல் வாய் புன்னகையுடன் பேட்டியை முடித்தார் சோனியா.சோனியா அகர்வாலோடே பெஸ்ட் பிரண்ட் யார் தெரியுமா? உட்பி மச்சினன்தனுஷோட மனைவி ஐஸ்வர்யாதான். எங்கே போவதாக இருந்தாலும் இரண்டு பேரும்சேர்ந்தேதான் போறாங்கோ, வர்றாங்கோ. அந்த அளவுக்கு குளோஸ் ஆயிட்டாங்க.

Subscribe to Oneindia Tamil

செல்வராகவனை திருமணம் செய்து கொண்டாலும் நான் சினிமாவை விட மாட்டேன்,தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சோனியா அகர்வால்.

நடக்குமா, நடக்காதா என்ற கோலிவுட் விவாதத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளிவைத்துள்ளார்கள் சோனியா அகர்வாலும், செல்வராகவனும். இருவரும் ஒரு வழியாகதிருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.

ஒரு பக்கம் சோனியாவின் நெருக்குதல், மறுபக்கம் பெற்றோர், தம்பி தனுஷ்,அவருடைய மனைவி ஐஸ்வர்யா, சகோதரிகள் என பலமுனை நெருக்குதலிலிருந்துதப்பிக்க முடியாத செல்வராகவன் சோனியாவை அஃபீஷியலாக கட்டிக் கொள்ளஓ.கே சொல்லி விட்டார்.

திருமணம் வட நாட்டு முறைப்படி சண்டிகரில் (சோனியாவின் சொந்த ஊர் அதுதான்)நடக்கும் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அதில் மாற்றம்.

தமிழ் முறைப்படி, சென்னையிலேயே திருமணத்தை நடத்த இப்போதுமுடிவாகியிருக்கிறதாம். செல்வராகவன் இப்போது புதிதாக இரண்டு படங்களைசெய்யவுள்ளார். ஒன்று தெலுங்கில் அவர் இயக்கும் படம், இன்னொன்று ராதிகாவின்ராடன் பட நிறுவனத்திற்காக இந்தியில் இயக்கவுள்ள 7ஜி ரெயின்போ காலனி.


இந்த இரு படங்களையும் முடித்து விட்டுத்தான் சோனியாவை கைப்பிடிக்கவுள்ளாராம்செல்வா. இதனால் திட்டமிட்டபடி அக்டோபரில் திருமணம் நடப்பதாகஅறிவிக்கப்பட்டது சில வாரங்கள் தள்ளிப் போகக் கூடுமாம் (ஆமாமா, அண்ணன்படத்தை இயக்க ஆரம்பிச்சா, எப்ப முடிப்பார்னு அவருக்கே தெரியாது!)

கட்டக் கடைசியாக செல்வாவைக் கைப்பிடிக்கப் போகும் வெற்றிக் களிப்பில்இருக்கிறார் சோனியா. கல்யாணம் முடிவாகி விட்டது, ஆனால் அக்டோபர் என்றுஉறுதியாக கூற முடியாது. இன்னும் ஏற்பாடுகளை இரு தரப்பினரும்ஆரம்பிக்கவில்லை.

இது குறித்து சோனியாவிடம் கேட்டால், ரொம்ப நெருக்குதல் கொடுத்துத்தான்செல்வாவை எல்லோரும் சேர்ந்து வழிக்குக் கொண்டு வந்தார்களாம். மனுஷன் இந்தமுறை தப்பிக்க முடியவில்லை (கலகலவென சிரிக்கிறார்).

அப்புறம் இன்னும் இரு வீட்டாரும் முறைப்படி பேசிக் கொள்ளவில்லை, சீக்கிரமேபேசுவார்கள். முடிசம்பர் போல கல்யாணம் இருக்கலாம்.

சரி, யார்முதலில் காதலைச் சொன்னது என்ற கேள்வியை தூக்கி சோனியாவிடம்போட்டபோது,


அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, அவர் ஒண்ணும் வெளிப்படையான ஆசாமிஇல்லை, நான்தான் காதலை முதலில் சொன்னேன். அப்படியா என்று மொட்டையாகக்கேட்டுக் கொண்டு அடுத்த சீனுக்குப் போய் விட்டார் பார்ட்டி. இப்படித்தான்ஆரம்பித்தது எங்களது காதல்.

அவர் காதல் வசனம் பேசித் திரியும் ரோமியோ கிடையாது. டின்னருக்கு என்னைக்கூட்டிக் கொண்டு போனது கிடையாது (நெசமாலுமா?) எதாக இருந்தாலும் நானாகபார்த்து இழுத்துக் கொண்டு போனால்தான் உண்டு என்கிறார் சோனியா.

கல்யாணத்துக்கப்புறம்? அப்பவும் நான் நடிகையாகத்தான் இருப்பேன். அதற்கு என்னபிரச்சினை வந்து விட்டது? கல்யாணத்துக்குப் பிறகு செல்வா படமே இயக்கப்போவதில்லையா? அது போலத்தான் நானும். நான் ஒரு நடிகை, எனவே நடிப்புஇருக்கும் வரை நானும் நடித்துக் கொண்டுதான் இருப்பேன்.

ஆனா தமிழ் சினிமாக்காரங்க ஆண்ட்டியை (செல்வா அங்கிளோட ஒய்ப் ஆனாசோனியா ஆண்ட்டிதானே!) எல்லாம் நடிக்க வைக்க மாட்டாங்களே என்று நாம்இழுத்தால்,

யார் சொன்னது, அழகா இருந்தால் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கத்தான்செய்யும். நான் அழகாக இருக்கிறேன், நன்றாகவும் நடிக்கிறேன். ஸோ, தொடர்ந்துநடிப்பதில் ஒரு குழப்பமும் இல்லை. சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறையஇருக்கு என்று கோணல் வாய் புன்னகையுடன் பேட்டியை முடித்தார் சோனியா.

சோனியா அகர்வாலோடே பெஸ்ட் பிரண்ட் யார் தெரியுமா? உட்பி மச்சினன்தனுஷோட மனைவி ஐஸ்வர்யாதான். எங்கே போவதாக இருந்தாலும் இரண்டு பேரும்சேர்ந்தேதான் போறாங்கோ, வர்றாங்கோ. அந்த அளவுக்கு குளோஸ் ஆயிட்டாங்க.

Read more about: sonia to act after marriage

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil