twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் பாடல்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது… இசையமைப்பாளர் ஜிப்ரானின் ஜாலியான பதில்கள் !

    |

    சென்னை: ஜிப்ரான் வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது வித்யாசமான மெல்லிய இசை மூலம் பல ரசிகர்களை பெற்றார் .

    தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

    தொடரும் போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக பிரபல நடிகருக்கு மீண்டும் சம்மன்! தொடரும் போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக பிரபல நடிகருக்கு மீண்டும் சம்மன்!

    சமீபத்தில் அவருடைய இசையில் நீயே சரணம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி வைராலாகியது. அதனை பற்றியும் இன்னும் பல விஷயங்களை பற்றியும் ஜாலியாக இந்த நேர்காணலில் கூறி உள்ளார்.

    காதலை சொல்லும் சரணம்

    காதலை சொல்லும் சரணம்

    நீயே சரணம் இந்த பாடலை பற்றி சொல்லுங்க என கேட்க, Sony Music உடன் All About The Love என்ற சீரிஸ் தொடங்கி கடந்த வருடம் அழகு என்ற பாடலை வெளியிட்டோம். அதன் பின்னர் 2 மாதத்திற்கு ஒரு முறை அடுத்தடுத்த பாடல்களை வெளியிட இருந்தோம்.

    சரணம் என்ற வார்த்தை

    சரணம் என்ற வார்த்தை

    கொரோனா காரணமாக பாடலின் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. அந்த சீரிஸ்-ன் இரண்டாம் பாடல் தான் நீயே சரணம். சரணம் என்ற வார்த்தை சாமிக்கு பயன்படுத்துவோம் அதையே ஒரு பெண்ணுக்கு சொல்லும் அளவிற்கு அந்த பெண்ணின் மேல் உள்ள காதல் தான் இந்த பாடல் என பதிலளித்தார்.

    வட்டார வழக்கில்

    வட்டார வழக்கில்

    உங்களுடைய பாடல்களை பல நாடுகளில் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் நீங்கள் ஒரு கொங்கு தமிழர் கோயம்புத்தூர் வட்டார வழக்கில் கொங்கு தமிழ் வார்த்தைகளோடு ஒரு பாடல் எப்போ பண்ணுவிங்க என்ற கேள்விக்கு, தானும் நீண்ட நாட்களாக அதற்கு காத்திருப்பதாகவும் அதற்கு ஏற்ற சூழ்நிலை அமையவில்லை எனவும் பதிலளித்தார்.

    இசை அனுபவத்தை

    இசை அனுபவத்தை

    விளம்பரங்களில் தனது இசை அனுபவத்தை பற்றியும் பல சுவாரஸ்ய தகவல் கொடுத்து உள்ளார் ஜிப்ரான் . அது மட்டும் அல்லாமல் அரசியல் பாடல்கள் தேர்தல் சமயத்தில் செய்வீர்களா? என்று கேட்டதற்கு வித்யாசமான பதில் கொடுத்து இருக்கிறார் . இது போன்ற பல கேள்விகளுக்கு ஜிப்ரான் ஜாலியாக இந்த நேர்காணலில் பதில் கூறியுள்ளார். இந்த நேர்காணலை மிஸ் பண்ணாமல் கண்டு களியுங்கள். பில்மி பீட் யூ ட்யூப் சேனலில்.

    English summary
    Special interview with composer Ghibran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X