நடனத்தால் கிடைத்த வாய்ப்பு..ராஜ சுலோச்சனா பற்றி இந்த வார ஸ்பெஷல் ரீவைண்ட்!

சென்னை: ராஜ சுலோச்சனா இந்தியன் கிளாசிக்கல் நடன கலைஞர் & பிரபல நடிகையாவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ராஜ சுலோச்சனா.

ராஜ சுலோச்சனாவை பற்றி அவரது மகள் தேவி கிருஷ்ணா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

இரு கொண்டாட்டம்

இரு கொண்டாட்டம்

ராஜ சுலோச்சனாவின் பிறந்த வருடம் விக்கிப்பீடியாவில் தவறாக இருப்பதாகவும், 1934ம் ஆண்டு தான் தன் தாயார் பிறந்தார் என தெளிவுபடுத்தி இருக்கிறார் தேவி கிருஷ்ணா. அது மட்டுமன்றி தாயாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம், அவருடைய பிறந்த தினம் என இரட்டிப்பு கொண்டாட்டமாக இருக்கும் என நினைவு கூர்ந்தார் தேவி கிருஷ்ணா.

கன்னடத்தில் அறிமுகம்

கன்னடத்தில் அறிமுகம்

ராஜ சுலோச்சனா நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கி வந்ததால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது எனவும், அதனை சுலோச்சனாவின் தந்தை மறுக்க பின்பு முயற்சி செய்து 1953ம் ஆண்டில் இயக்குனர் சிம்ஹா இயக்கத்தில் குணசகரி என்னும் கன்னட படத்தில் அறிமுகமானார் எனவும் சில விஷயங்களை ரீவைண்ட்செய்துள்ளார் தேவி கிருஷ்ணா.

அழகிய கண்கள்

அழகிய கண்கள்

ராஜ சுலோச்சனாவிற்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜீவலோச்சனா. அழகிய கண்கள் உடைய பெண் என்பதே அதன் பொருள். அதனை குழந்தை பருவத்தில் பள்ளியில் படிக்கும் போது ராஜ சுலோச்சனா என மாற்றி சொல்ல நாளடைவில் ராஜீவலோச்சனா என்னும் பெயர் ராஜ சுலோச்சனாவாக மாறிவிட்டது என பேட்டியளித்துள்ளார் தேவி கிருஷ்ணா.

இன்னும் பல செய்திகள்

இன்னும் பல செய்திகள்

ராஜ சுலோச்சனாவின் வாழ்க்கை மிகவும் அழகாக அமைந்தது எனவும், மிகவும் தைரியமான முறையில் அதனை கையாண்டு வாழ்ந்தார் எனவும் தேவி கிருஷ்ணா பேட்டியளித்துள்ளார். இது போல ராஜ சுலோச்சனா குறித்து இன்னும் பல செய்திகளை ரீவைண்ட் செய்துள்ளார் தேவி கிருஷ்ணா. பில்மி பீட் யூ டியூப் சேனலில் இதனை மிஸ் பண்ணாமல் கண்டு களியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X