twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!

    |

    சென்னை: ராஜ சுலோச்சனா இந்தியன் கிளாசிக்கல் நடன கலைஞர் & பிரபல நடிகையாவார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ராஜ சுலோச்சனா.

    ராஜ சுலோச்சனாவை பற்றி அவரது மகள் தேவி கிருஷ்ணா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

    திறந்து வைத்த முதல்வர்

    திறந்து வைத்த முதல்வர்

    1961ம் ஆண்டிலேயே முதல் முறையாக ராஜ சுலோச்சனா நடனப்பள்ளி தொடங்கினார் எனவும், அப்போதைய முதலமைச்சர் அதை திறந்து வைத்தார் எனவும் கூறியுள்ளார். இசை, நடனம், குறிப்பாக குச்சுப்பிடி போன்றவற்றை கற்றுக்கொண்ட பல மாணவர்கள் பெரிதாக உருவாகி வெளியே வந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார் தேவி கிருஷ்ணா.

    சோகமான கதை

    சோகமான கதை

    சகோதரி என்னும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராஜ சுலோச்சனாவுக்கு குழந்தை பிறந்து அவர் இறக்கும் வகையில் காட்சி அமைந்திருக்கும். அது போல நிஜ வாழ்வில் சற்று மாறி ராஜ சுலோச்சனாவுக்கு குழந்தை இறந்து பிறந்தது அவரது வாழ்வின் ஒரு சோகமான கதையாகும் என்பதை பகிர்ந்துள்ளார் தேவி கிருஷ்ணா.

    பிரமாண்டமான கார்

    பிரமாண்டமான கார்

    அந்த காலத்தில் முதல் முறையாக சென்னையில் படப்பிடிப்பின் போது ஒரே செக்கில் பிரம்மாண்டமான Ply Mouth கார் வாங்கினார் எனவும், அதற்கு பின்னர் தான் நடிகர் சிவாஜி வாங்கினார் எனவும் கூறியுள்ளார். அதை மிகவும் பெருமையாக அம்மா பேசுவார் எனவும் பேட்டியளித்துள்ளார் தேவி கிருஷ்ணா.

    சமூக பணிகள்

    சமூக பணிகள்

    அதன் பின்னர் நிறைய கார்கள் வாங்கியதாகவும், சொத்துக்கள் சேர்த்ததாகவும், சமூக பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இறை பக்தி அதிகமாக கொண்டும், யோகா பயிற்சி, தியான பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்தார் எனவும் பேட்டியளித்துள்ளார் தேவி கிருஷ்ணா.

    ரீவைண்ட்

    ரீவைண்ட்

    இது போல ராஜ சுலோச்சனா குறித்து இன்னும் பல தகவல்களை ரீவைண்ட் செய்துள்ளார் தேவி கிருஷ்ணா. பில்மி பீட் யூ டியூப் சேனலில் இதனை மிஸ் பண்ணாமல் கண்டு களியுங்கள்.

    English summary
    Special interview with Devi Krishna, daughter of Raja Sulochana
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X