“ரீமிக்ஸ்” பெயரில் பாடல்கள் சிதைப்பா?”-தினா

அவர் கூறுகையில், சிலர் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ரீமிக்ஸ் செய்வதன் மூலம் இளைய தலைமுறையினர் பழைய பாடல்களை அறிந்து கொள்கின்றனர்.
தினா குத்துப்பாடல்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்று என் மேல் முத்திரை குத்தியுள்ளனர். அதை சீடன் படத்தில் அகற்றியுள்ளேன்.
மெலடி பாடல்கள் மற்றும் அதே பாணி இசையில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு சீடன் படத்தில் நிறை வேறியுள்ளது என்றார்.
அன்மையில் நடந்த விழா ஒன்றில் இன்றைய தலைமுறைப் பாடகர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் வரும் பழைய பாடல்களை தவறாக உச்சரித்து கொலை செய்வதாக பிரபல பாடகர் டி.எம்.எஸ். குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications