விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன்- ஜெயம் ரவி

By Shankar

சென்னை: எனக்குள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணர்கிறேன். எனவே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

திரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும்.

4 படங்களில்...

4 படங்களில்...

அதே போல தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்துள்ள ஜெயம் ரவிக்கும் ஸ்போர்ட்ஸ்மேன் இமேஜ் உருவாகியுள்ளது.

தாஸ் படத்தில் கால்பந்தாட்ட வீரராக, குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்துச் சண்டை வீரனாக, பேராண்மை படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக, தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகம் படத்தில் குத்து சண்டை வீரராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. நிஜமாகவே கிக் பாக்சிங் கற்றவர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலிருந்தே...

சிறுவயதிலிருந்தே...

இதுகுறித்து ஜெயம் ரவி கூறுகையில், 'எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும் , ஒழுக்கத்தையும் கற்று தந்தது.

விளையாட்டு வீரனின் மனநிலையில்...

விளையாட்டு வீரனின் மனநிலையில்...

நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில்தான் நான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்கொள்கிறேன். இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது .

விளையாட்டுப் போட்டிகளுக்காக

விளையாட்டுப் போட்டிகளுக்காக

விளையாட்டு துறைக்காகவும் , விளையாட்டுப் போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய கணிசமான நேரத்தையும், சக்தியையும் செலவிட இருக்கிறேன் . எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரனாக பாத்திரம் அமைவது திட்டமிடப்பட்டது அல்ல. நான் எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்கவே விரும்புகிறேன்.

தற்போது நடித்து வரும் சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் 'நிமிர்ந்து நில்' மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் 'பூலோகம்' ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே. அவை ரசிகர்களை நிச்சயம் கவரும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X