twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஒரு எளிஜிபில் பேச்சிலர்: ஸ்ரீகாந்த் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிவாஜி படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லையாம்.ஏவி.எம். நிறுவன பிரமாண்ட தயாரிப்பான சிவாஜியில் ரஜினி நடிக்க, அதை ஷங்கர் படத்தை இயக்கவுள்ளார்.இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் ஜோடி தவிர படத்தில்நடிக்கப் போகும் மற்ற கேரக்டர்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதை படு ரகசியமாக நடத்தி வருகிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.சிவாஜியில் ரஜினியின் மருமகன் கேரக்டரில் நடிக்கஸ்ரீகாந்திடம் பேசப்பட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.இதுகுறித்து ஸ்ரீகாந்த்திடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் நான் நடிப்பதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை. இப்படம்தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்என்றார்.சமீபத்தில் ஒரு நாள் ஒரு கனவு படத்தை மிகவும ரசித்து செய்தேன். படம் எனக்கு படு திருப்தியாக இருந்தது. ரசிகர்களும் அதைநன்றாக வரவேற்றுள்ளனர்.அந்தப் படத்தில் சோனியா அகர்வாலுடன் பழகுவது மிகவும் இனிய அனுபவமாக இருந்தது. எளிதாக பழகுகிறார், இனியகுணம் கொண்டவர். மனம் விட்டுப் பழகுகிறார்.எனது கல்யாணம் குறித்து இன்னும் யோசிக்கவில்லை. இப்போதைக்கு நான் ஒரு எளிஜிபிள் பேச்சலர். கல்யாணத்தை அப்புறம்பார்த்துக்கலாம். (ஸ்னேகாவோடு நெடுங்காலமாக கிசுகிசுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது)த்ரிஷாவுடன் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நடிக்க நான் ரெடியாகத்தான் உள்ளேன். ஆனால் அவர் தான் படு பிசியாக உள்ளார்.மீண்டும் வாய்ப்பு வந்தால் திரும்பவும் ஜோடி சேருவோம் என்கிறார் ஸ்ரீகாந்த்.

    By Staff
    |

    ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிவாஜி படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லையாம்.

    ஏவி.எம். நிறுவன பிரமாண்ட தயாரிப்பான சிவாஜியில் ரஜினி நடிக்க, அதை ஷங்கர் படத்தை இயக்கவுள்ளார்.

    இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினியின் ஜோடி தவிர படத்தில்நடிக்கப் போகும் மற்ற கேரக்டர்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதை படு ரகசியமாக நடத்தி வருகிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.சிவாஜியில் ரஜினியின் மருமகன் கேரக்டரில் நடிக்கஸ்ரீகாந்திடம் பேசப்பட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.


    இதுகுறித்து ஸ்ரீகாந்த்திடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் நான் நடிப்பதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை. இப்படம்தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்என்றார்.

    சமீபத்தில் ஒரு நாள் ஒரு கனவு படத்தை மிகவும ரசித்து செய்தேன். படம் எனக்கு படு திருப்தியாக இருந்தது. ரசிகர்களும் அதைநன்றாக வரவேற்றுள்ளனர்.

    அந்தப் படத்தில் சோனியா அகர்வாலுடன் பழகுவது மிகவும் இனிய அனுபவமாக இருந்தது. எளிதாக பழகுகிறார், இனியகுணம் கொண்டவர். மனம் விட்டுப் பழகுகிறார்.


    எனது கல்யாணம் குறித்து இன்னும் யோசிக்கவில்லை. இப்போதைக்கு நான் ஒரு எளிஜிபிள் பேச்சலர். கல்யாணத்தை அப்புறம்பார்த்துக்கலாம். (ஸ்னேகாவோடு நெடுங்காலமாக கிசுகிசுக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது)

    த்ரிஷாவுடன் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நடிக்க நான் ரெடியாகத்தான் உள்ளேன். ஆனால் அவர் தான் படு பிசியாக உள்ளார்.மீண்டும் வாய்ப்பு வந்தால் திரும்பவும் ஜோடி சேருவோம் என்கிறார் ஸ்ரீகாந்த்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X