அது விவரம் தெரியாத வயசு.. 4 பிட்டு படத்துல நடிச்சிருக்கேன்.. ஓபனா பேசிய ’தளபதி’ தினேஷ்!

சென்னை: தளபதி படத்தின் ஃபைட்டராக அறிமுகமாகி பின்னர் ஸ்டன்ட் மாஸ்டராக பாட்ஷா, வின்னர், கிரி, தேவதையை கண்டேன், சிவகாசி, திருப்பதி, நான் அவன் இல்லை, குசேலன், படிக்காதவன், அரண்மனை 3 மற்றும் சந்திரமுகி 2 என பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய தளபதி தினேஷ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களையும் சீக்ரெட் தகவல்களையும் ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சண்டை பயிற்சி இயக்குநராக மட்டுமின்றி 1989ம் ஆண்டு வெளியான உத்தம புருஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் பாட்ஷா, கலகலப்பு என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான்.

Stunt Master Thalapathy Dinesh opens up about his b grade movies


ஆரம்பத்தில் மலையாளத்தில் சில ஆபாச படங்களில் நடித்த அனுபவத்தையும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் குறித்தும் இந்த பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார் தளபதி தினேஷ்.

தளபதி படத்தில்: மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தளபதி படத்தில் தான் ஃபைட்டர் ஆக அறிமுகமானவர் தினேஷ். அந்த படத்திற்கு பிறகு தளபதி தினேஷ் என்றே தனது பெயரை மாற்றிக் கொண்டார். தளபதி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் பெரிய கார்களை கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். ஏன் இவ்வளவு செலவு செய்கிறார் என யோசித்தேன். யாருக்காவது ஸ்டண்ட் நடிகர்களுக்கு அடிபட்டால் உடனடியாக அந்த காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று விடுவார். அப்போ ஆம்புலன்ஸ் இல்லாத இடங்களில் ஸ்டண்ட் நடிகர்களுக்காக யோசித்து பெரிய கார்களை கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் மணிரத்னம் சார் என ஆரம்பத்திலேயே தளபதி பட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பிட்டு படம்: ஆரம்பத்தில் பெரிதாக பொது அறிவு எல்லாம் எனக்கு கிடையாது. சினிமாவில் நடிக்க கூப்பிட்டார்கள் ஆபாச படம் என்றே சொல்லி அழைத்தனர். அந்த படமும் சென்சார் செய்யப்பட்டுத் தானே தியேட்டருக்கு வருகிறது. தியேட்டரிலேயே ரசிகர்கள் பார்க்கும் படத்தில் நடிக்கக் கூடாதா என நினைத்து நடித்தேன். 4 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் என்றார்.

தமிழ்நாட்டிலும் ரிலீஸ்: மலையாள படம் தானே என நினைத்து நடித்தேன். ஆனால் அந்த படம் தமிழில் ’இளமை கொண்டாட்டம்’என போஸ்டர் அடித்து ரிலீஸ் செய்து விட்டனர். அதைப் பார்த்த பலரும் ஏன் இந்த மாதிரி படங்களில் நடிச்சீங்க என ஒரு மாதிரி பேச ஆரம்பித்துவிட்டனர். நைட் 12 மணிக்கு அப்போதெல்லாம் உதயா டிவியில் இதுபோன்ற படங்கள் போடுவார்கள். அதை பார்த்த சில பெரிய நடிகர்களே நீங்க ஏன் பிட்டு படத்துல நடிச்சீங்கன்னு கேட்பாங்க.. நீ ஏன் அந்த படத்தை இந்த நேரத்துல பார்த்த என பதிலுக்கு கேட்டு ஆஃப் செய்து விடுவேன் என அதிரடியாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மலையாளத்தில் நான் நடிச்ச படமெல்லாம் பெருசா ஓட ஆரம்பிச்சுடுச்சு, அதன் பின்னர் தான் மம்மூட்டி, மோகன்லால் எல்லாம் பிரச்சனை செய்து ஆபாச படங்களுக்கு தடை விதித்தார்கள் எனக் கூறியுள்ளார்.

அம்மா படமே பார்க்க மாட்டார்: முதல் படத்தில் மாடியிலிருந்து விழுந்து நடிச்சேன். அதை பார்த்த என்னோட அம்மா அதன் பின்னர் நான் நடிக்கிற படங்களையே பார்ப்பதை நிறுத்தி விட்டார். டிவியில் போட்டால் கூட ஆஃப் செய்து விடுவார். இந்த பொழப்புக்கு கூலி வேலை செஞ்சாவது பிழைத்துக் கொள்ளலாம். ஏதாவது பெரிய அடி பட்டால் உன்னை யாரு பார்த்துப்பா என கேட்டு அடிக்கடி திட்டி சண்டை போட்டிருக்கிறார் என ஸ்டண்ட் நடிகர்களுக்கே உரித்தான பிரச்சனை குறித்தும் உருக்கமாக தினேஷ் மாஸ்டர் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X