Parasakthi: பராசக்தி சென்சாரில் CBFC அதை கோட்டை விட்டுட்டாங்க.. சொல்லி சொல்லி சிரிக்கும் சுதா கொங்கரா!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸை எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இல்லை. விஜயின் ஜன நாயகனும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாவதாக இருந்தது. சென்சார் நடவடிக்கைகளைப் பார்த்த போது இந்த ஆண்டு பொங்கல் தியேட்டர்கள் காலியாகத்தான் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஜன நாயகன் படத்திற்கு இதுவரை சென்சார் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. பராசக்தி படத்திற்கு ரிலீஸ்க்கு முந்தைய நாள் சென்சார் கிடைத்தது. அதுவும் கிட்டத்தட்ட 23 கட்களுடன் தான் சென்சார் கிடைத்தது.

ஆனாலும் படக்குழு தரப்பில் இருந்து படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் கட்கள் இவை தான் என்று பட்டியலை வெளியிட்டது மட்டும் இல்லாமல், அந்த காட்சிகளையும் வசனங்களையும் படத்தின் புரோமோசனுக்கு பயன்படுத்தியது. இதனால் படத்தின் கதை களத்தையும் திரைக்கதையையும் புரிந்து கொண்ட ரசிகர்கள் சென்சார் தரப்பில் இருந்து நீக்கிய காட்சிகளையும் வசனங்களையும் புரிந்து கொண்டனர்.

Sudha Kongara Express Her Thoughts About How CBFC Censor Main Dialogue of Parasakthi

ஆனாலும் சென்சார் படத்தில் இருந்து நீக்கிய மிக முக்கியமான ஒன்று, தீ பரவட்டும் என்ற சொல் தான். அதை படக்குழு நீதி பரவட்டும் என்று மாற்றி வைத்துக் கொண்டனர். ஆனாலும் படத்தின் புரோமோஷனில் தீ பரவட்டும் என்ற சொல்லும் ஒரு காட்சியில் வந்தது. அதையும் சென்சார் நீக்கியது.

சென்சார்: இந்நிலையில் தனது உதவி இயக்குநர்களுடன் இயக்குநர் சுதா கொங்கரா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் சுதா கொங்கரா தெரிவித்த ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசுகையில், சென்சார் அமைப்பு பராசக்தி படத்தை சென்சார் செய்யும் போது ஒன்றை விட்டுவிட்டார்கள். எனக்கு அது நிம்மதியாக பட்டது. அவர்கள் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும் என்றால், அது தம்பி கொழுத்துடா என்பதுதான்.

Sudha Kongara Express Her Thoughts About How CBFC Censor Main Dialogue of Parasakthi

முக்கியமான வசனம்: ஆனால் அவர்கள் அதை விட்டுவிட்டு, தீ பரவட்டும் என்ற வசனத்தை எடுத்துவிட்டார்கள். நானும் இது போனால் பரவாயில்லை. என்னைப் பொறுத்தவரை, ’தம்பி கொளுத்துடா’ என்ற வசனம் தான் மிகவும் முக்கியமான வசனமாகப் படுகிறது. அதுதான் படத்தில் மிகவும் முக்கியமான வசனமாக நான் பார்க்கிறேன்" என்று சொல்லி சிரி சிரி என்று சிரிக்கிறார். சுதா கொங்கராவின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X