சென்சார் போர்டில் இருப்பவர்கள் மோசமானவர்கள் இல்லை.. பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்!
சென்னை: ஜன நாயகன் படத்துக்கு எதிராக தணிக்கை குழு நடந்துக் கொள்ளும் விதம் விசித்திரமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தெரிவித்து இருந்தார். 500 கோடி முதலீடு போட்டு எடுத்துள்ள ஜன நாயகன் திரைப்படம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்கும் என்று கேவிஎன் தரப்பு வாதத்தை வைத்த நிலையிலும், தணிக்கை குழு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சென்சார் போர்டுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் டைம் லைனை பின்பற்றித்தான் எதையும் செய்ய முடியும் என்றார்.
பாஜக அரசு விஜய்யை கூட்டணிக்கு அழைக்கவே தணிக்கை குழுவை பயன்படுத்தி நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் புலம்பி வரும் நிலையில், சென்சார் போர்டில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர் என்றும் பராசக்தி படத்தை பார்த்துவிட்டு அவர்கள் பாராட்டியதை சுதா கொங்கரா பேட்டி ஒன்றில் கூறியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டக் கதையை மையப்படுத்தி பராசக்தி படத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ள நிலையில், அந்த படம் பற்றியும் அதன் சென்சார் பற்றியும் சுதா கொங்கரா பேசியுள்ளார்.
ஜன நாயகன் படத்தை முதல் நாளே பார்ப்பேன்: இயக்குநர் சுதா கொங்கரா தான் ஒரு தீவிர விஜய் ஃபேன் என்றும் ஜன நாயகன் படத்தை முதல் நாளே தியேட்டருக்குச் சென்று பார்ப்பேன். எனக்கு விசில் அடிக்கத் தெரியாததால் 3 பேரை உடன் அழைத்துக் கொண்டு செல்வேன். அவர்கள் விசில் அடிப்பார்கள் என ஜன நாயகன் படம் ரிலீஸ் குறித்தும் சுதா கொங்கரா அந்த பேட்டியில் கூறினார்.
தணிக்கையாளர்கள் தங்கமானவர்கள்: டெல்லி தான் இந்தியாவா? என்றும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட படமாகவும் உருவாகியுள்ள பராசக்தி படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி படத்தை சுதந்திரமாக செயல்பட வைத்தது தன்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியது. சென்சார் போர்டில் இருப்பவங்க எல்லாம் ரொம்ப மோசம் என்கிற பேச்சு நிலவுகிறது. ஆனால், உண்மையில், அவர்கள் அப்படி இல்லை. சரியான கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு தக்க பதில் கொடுத்தால் படத்தை சுதந்திரமாக சுவாசிக்க விடுகின்றனர் என சுதா கொங்கரா பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











