ஏனோ தானோனு பராசக்தி படம் எடுக்கல.. படத்தை பார்த்துவிட்டு பேசுங்க.. சுதா கொங்கரா!
சென்னை: சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் 10ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில் , சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படம் குறித்து இணையத்தில் மோசமாக பரவி வரும் தகவலுக்கு இயக்குநர் சுதா கொங்கரா சரியான பதில் அளித்துள்ளார்.
ஜனவரி 10ந் தேதி வெளியான இப்படம் கடந்த சில நாட்களாக வசூலில் சரிவை சந்தித்து வந்தது. ஆனால், நேற்று பொங்கல் பண்டிகையில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து விடுமுறை என்பதால் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்து வரும் மோசமான தகவல் பற்றி பேசி உள்ள இயக்குநர் சுதா கொங்கரா, படத்தை பார்க்காமலே பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பராசக்தி திரைப்படம்: அந்த கால கட்டத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து தான் படத்தை எடுத்து இருக்கிறோம். அந்த காலத்தில் சினிமாவிற்கு செல்வதற்கு யாரிடமும் காசு இருக்காது. யாராவது பணக்காரர் அவர்களை அழைத்து சென்றால் தான் படம் பார்ப்பார்கள். அப்படி இருக்கும் போது, நாள் முழுக்க என்ன செய்வார்கள் என்றால், விடிய விடிய பேசிக்கிட்டே இருப்பாங்க, நாட்டை பற்றி பேசுவாங்க, அரசியல் பேசுவாங்க இப்படி பல விஷயத்தை பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். இப்போது நாம் யாரும் யாரிடமும் அதிக நேரம் பேசுவது இல்லை. ஆனால், அவர்களுக்கு அது தான் பொழுபோக்கு. இந்த படத்தில் ஹீரோ என்ன செய்கிறார், அவரின் பொருளாதாரம் என்ன என்பதை எல்லாம் மனத்தில் வைத்துத்தான் அவரை சைக்கிளில் செல்வது போல காட்சியை வைத்து இருந்தோம்.
2 ரூபாய் பீஸ் : இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு 'டிடிஆர்' வேலைக்கு இன்டர்வியூ வரும் அதில், இந்தி பேசவேண்டும் என்பதற்காக இந்தி வாத்தியாருக்கு 2 ரூபாய் பீஸ் கொடுத்து இருப்பார். இதை நாங்கள் சும்மா ஏனோ தானே என்று காட் எடுத்துவிடவில்லை, 1960ல் இந்தி டியூஷனுக்கு எவ்வளவு பீல் என்பதை ஆராச்சி செய்து தான் படத்தில் அந்த வசனத்தை வைத்தோம். இன்றைய ஜென்ஸி தலைமுறையினருக்கு என்னது இரண்டு ரூபாயா என்று தான் தோன்றும். ஆனால், படத்தின் ஹீரோவிற்கு அது பெரிய விஷயம், அந்த உலகத்திற்குள் ரசிகர்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல விஷயத்தை கம்பேர் செய்தோம். அதுமட்டுமில்லாமல், படத்தில் ஸ்ரீலீலா கட்டிவரும் புடவை படத்திற்காகவே யார் செய்தோம் என இயக்குநர் சுதா கொங்கரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











