»   »  குத்தாட்டமும் கற்று மற

குத்தாட்டமும் கற்று மற

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்து சுஜா படு கெத்தாக இருக்கிறார். கைவசம் நிறைய குத்துப் பாட்டும், தங்கச்சி கேரக்டர்களும் இருப்பதால் சுஜாவின் கால்ஷீட் டைரி நிரம்பிவழிகிறது.

வாத்தியார் படத்தில் என்னடி முனியம்மா ரீமிக்ஸ் பாட்டுக்கு சுஜா போட்ட ஆட்டம், அவருக்கு பல வாய்ப்புகளை வாரிக் கொண்டு வந்துள்ளது.குளிர்ந்துபோன சுஜா ஒரு பாட்டையும் விடாமல் அத்தனையையும் அப்படியே அள்ளி அசத்தி வருகிறார்.

இடையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முந்திரிக் காட்டில் நடிகர் ஒருவருடன் அவர் போட்ட குத்தாட்ட கொண்டாட்டத்தால் இலவசமாகவிளம்பரமும் கிடைத்து விட்டதால் போலீஸ் எச்சரித்தைக் கூட மறந்து விட்டாராம்.

மன மகிழ்ச்சியோடு, மன நிறைவோடு தாராளமாக குத்தி வரும் சுஜாவிடம், இப்படி குத்துப் பாட்டோடு நின்று விட்டீர்களே, ஹீரோயின் ஆகமாட்டீர்களா என்று தெரியாத்தனமாக கேட்டு விட்டோம்.

தனது தரப்பு வாதத்தை அவர் ஆணித்தரமாக எடுத்து வைத்து அசத்தி விட்டார் சுஜா. குத்துப் பாட்டுன்னா கேவலமா? அதுக்கும் ஒரு திறமைவேண்டும், அழகு வேண்டும், வடிவு வேண்டும். இதெல்லாம் எனக்கு சிறப்பாகவும், சீராகவும் இருக்கிறது.

என்னால் முடியும் என்பதால்தானே என்னை ஐட்டம் நம்பருக்கு ஆடக் கூப்பிடுகிறார்கள். என்னை மதித்துக் கூப்பிடுபவர்களை நான் வேண்டாம்என்று எப்படி மறுக்க முடியும்?

ஒரு நடிகை என்றால் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். குத்தாட்டம் ஆடவும் தெரிந்திருக்க வேண்டும். களவையும் கற்று மற என்றுசொல்வார்கள். அதுபோலத்தான், நல்ல ஹீரோயின் வாய்ப்பு வரும் வரை சும்மா இருக்காமல் குத்துப் பாட்டின் மூலம் என்னை ஷேப் செய்துகொள்கிறேன்.

நான் சும்மா ஆடவில்லையே, முன்னணி ஹீரோக்களுடன்தானே குத்துப் பாட்டுக்கு ஆடுகிறேன், எனவே அதில் பெருமைதான், சந்தோஷமாதான்,நிம்மதிதான்.

இப்போதைக்கு இப்படியே போய்ட்டிருக்கேன். இடை இடையே நல்ல கேரக்டர்களும் வருகின்றன. சரத்குமாரின் தங்கச்சியாக வைத்தீஸ்வரன்படத்தில் நடிக்கிறேன். அந்தப் படத்தோட கதையே என்னை சுற்றித்தான்.

சமீபத்தில் பள்ளிக்கூடம் படத்துக்காக ஒரு வித்தியாசமான குத்துப் பாட்டை எடுத்தார்கள். அதாவது, பழைய நடிகைகளின் கெட்டப்பில் இந்தப்பாட்டுக்கு ஆடியுள்ளேன். நல்ல பாட்டு, நல்ல ஆட்டம் என்று சிலாகித்தார் சுஜா.

என்னமா பேசுராரு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil