சொந்த மகன் மகளை நடிக்க வைத்து.. ஹாலிவுட் படம் எடுத்த சுஜா ரகுராம்.. ஜாலி பேட்டி!

சென்னை: மறைந்த நடன இயக்குநர் ரகுராம்மின் மகள் சுஜா ரகுராம் தனது மகன் மகளை வைத்து ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வந்தவர் ரகுராம். ரஜினி கமல் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ரகுராம் கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சுஜா ரகுராம். இளைய மகள் காயத்ரி ரகுராம்.

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில்

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில்

சுஜா ரகுராம் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் காயத்ரி ரகுராம் திரைப்படங்களுக்கு கோரியோகிராப் செய்து வருகிறார். பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள அவர் அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.

ஹாலிவுட்டில் படம் இயக்கும் சுஜா

ஹாலிவுட்டில் படம் இயக்கும் சுஜா

இந்நிலையில் சுஜா ரகுராம் ஹாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள நேர்காணலில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் சுஜா ரகுராம். அதாவது திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன சுஜா ரகுராம் அங்கு ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகிறார்.

விஜய் தனக்கு சகோதரர் போன்றவர்

விஜய் தனக்கு சகோதரர் போன்றவர்

சிறுவயது முதலே தனக்கு தெரிந்தது சினிமா தான் என்பதால் சினிமாவை இயக்கும் பணியில் இறங்கியுள்ளாராம் சுஜா ரகுராம். தான் இயக்கியுள்ள படத்திற்கு டேக் இட் ஈஸி என்ற தலைப்பு வைத்துள்ளார். பிரபு தேவா தனது நெருங்கிய நண்பர் என்று கூறிய சுஜா, அவருடைய பாடலில் தனது படத்திற்கு தலைப்பு வைத்ததை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார் என கூறியுள்ளார் . மேலும் இயக்குநர் ஏஎல் விஜய் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும் இந்தப் படத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய இளம் திறமைசாலிகள்

இந்திய இளம் திறமைசாலிகள்

மேலும் தனது நேர்காணலில் அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான இளம் திறமைசாலிகள் இருப்பதாக கூறியுள்ள சுஜா ரகுராம், அவர்களை வெளி உலகுக்கு காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளர். டேக் இட் ஈஸி படம் ஃபிரண்ட்ஷிப்பை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மகள் சனா மனோஜ்

மகள் சனா மனோஜ்

தனது மகன் திரிசுல் மனோஜ், தனது மகள் சனா மற்றும் மகனின் நண்பன் நிகில் ஆகியோரை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார் சுஜா ரகுராம். இதில் அவர்கள் 3 பேருமே நண்பர்களை போல் நடித்துள்ளதாக கூறிய அவர் தனக்கு தமிழ் சினிமாவில் நட்பு பாடல்களான முஸ்தபா முஸ்தபா, ஓ மை கடவுளே படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் பிடிக்கும் என கூறியுள்ளார்.

படத்தில் குத்துப்பாட்டு..

படத்தில் குத்துப்பாட்டு..

மேலும் தங்களின் படத்தில் கேர்ள் பிரண்ட் கடைசி வரை கேர்ள் ஃபிரண்ட்டாகதான் இருப்பார் என்றும் கூறியுள்ளார். ஹாலிவுட் படமாக இருந்தாலும் கோலிவுட் இசையையும் இசையமைப்பாளர் இணைத்துள்ளார். தங்களின் படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஹாலிவுட்டில் பிரபு தேவாவை வைத்து இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதல் முறையாக ஆங்கில மொழியில்

முழுக்க முழுக்க இயக்கம் மற்றும் தயாரிப்பு பணியில் இறங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். தனது மகன் ஒரு தமிழன் என்பதால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசை என்றும் கூறியுள்ளார். தனது அப்பாவின் ஆசையும் திருசூல் நடிகராக வேண்டும் என்பதுதான். முதல் முறையாக ஆங்கில மொழியில் படம் இயக்கியுள்ளேன். தமிழ் நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அமெரிக்கர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதல் முறையாக தயாரிப்பு

முதல் முறையாக தயாரிப்பு

தொடர்ந்து பேசிய சுஜாவின் கணவர் மனோஜ் இதுதான் முதல் முறை தான் படத்தை தயாரிப்பது என்று கூறியுள்ளார். தன்னுடைய தொழில் உணவு சார்ந்ததுதான் என்ற அவர் சினிமாவுக்கு தான் வருவது முதல் முறை என கூறியுள்ளார். உணவு துறை என்பதே எண்டெர்டெய்ன்மென்ட்தான் என்ற அவர் தான் தற்போது இரண்டு எண்டெர்டெய்ன்மென்ட்டிலும் இறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X