அந்த நூறு தலை இவங்க தான்.. என்னம்மா கஷ்டப்பட்டுருக்காங்க.. சுல்தான் பாய்ஸின் அட்டகாசமான பேட்டி இதோ

சென்னை: நடிகர் கார்த்தியின் சுல்தான் படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

Recommended Video

சோத்துலயும் அடி வாங்கிட்டோம் சேத்துலயும் அடி வாங்கிட்டோம் |Sulthan Boys Chat | Filmibeat Tamil

கலவையான விமர்சனங்கள் குவிந்தாலும், அதையெல்லாம் பற்றி கவலைப் படாத அளவுக்கு தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

சுல்தான் படத்தில் நூறு தலை ராவணன் என நடிகர் கார்த்தி பேசும் வசனத்துக்கு பின்னாடி நூறு தலைகளாக இருக்கும் சுல்தான் பாய்ஸின் பிரத்யேக பேட்டி தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

ஜிம் பாய்ஸ்

ஜிம் பாய்ஸ்

சினிமா நட்சத்திரங்களுக்கு பாடிகார்டாக இருக்கும் ஜிம் பாய்ஸ்களை நடிகர்களாக மாற்றியுள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். வாட்ட சாட்டமாக, நீண்ட தாடியுடன் தோற்றத்தில் காட்டு மிராண்டிகளை போலவும், உள்ளத்தில் குழந்தைகளை போலவும் இருக்கும் ஜிம் பாய்ஸ்களின் பேட்டி வைரலாகி வருகிறது.

சுல்தான் பாய்ஸ்

சுல்தான் பாய்ஸ்

ஜிம் பாய்ஸை சுல்தான் பாய்ஸாக மாற்றி சுளுக்கெடுத்து இருக்கிறார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். மழை, வெயில், பனி என போட்டு விவசாயம் பண்ண சொல்லி சண்டை செய்ய வைத்து, டான்ஸ் ஆட வைத்து என பெண்டு நிமிர்த்தி உள்ளார். நடன இயக்குநர்களுக்கும், ஸ்டன்ட் மாஸ்டருக்கும், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நடிகர் கார்த்திக்கும் என சுல்தான் பாய்ஸ் நன்றி மழை பொழிந்துள்ளனர் இந்த பேட்டியில்..

சோத்துலையும் சேத்துலையும்

சோத்துலையும் சேத்துலையும்

விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறி வருகிறதோ அந்த அளவுக்கு விவசாயமும் முன்னேறி வர வேண்டும் என்கிற கருத்தை சுல்தான் படம் எடுத்துரைத்து இருக்கிறது. சுல்தான் பாய்ஸாக நடித்தவர்களே விவசாயிகளாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் தாங்கள் சோத்துலையும் அடிவாங்கிட்டோம், சேத்துலையும் அடிவாங்கிட்டோம் என இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடின உழைப்பை போட்டது குறித்தும் இந்த பேட்டியில் கூறியுள்ளனர்.

விமர்சனங்களை தாண்டிய வெற்றி

விமர்சனங்களை தாண்டிய வெற்றி

சுல்தான் படம் பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசாகி உள்ளது. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் குடும்பங்கள் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. முதல் நாள் வசூலை விட வீக்கெண்ட் வசூல் அதிகமாக உள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவே ட்வீட் போட்டுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனைத்து சுல்தான் பாய்ஸ்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மற்ற இயக்குநர்களும்

வெறும் ஜிம் பாய்ஸ்களாக இருந்தவர்களை சுல்தான் படத்தின் மூலம் நடிகர்களாக மாற்றி அசத்தி உள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சினிமாவுக்காக எந்த வித ரிஸ்க்கையும் எடுக்க துணிந்த இவர்களுக்கு மற்ற பெரிய இயக்குநர்களும் நல்ல கதாபாத்திரங்களை கொடுத்தால் செய்வோம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X