»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தமிழில் பெரும்புள்ளி படத்தில் அறிமுகமான சுமன் ரங்கநாதன், பின்னர் மாநகரக் காவல் படத்தில்விஜய்காந்துடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், தமிழில் அவ்வளவாக சான்ஸ் இல்லாததால் மும்பைக்கு பிளைட்பிடித்தார்.

அங்கு தனது அதிரடி ஆடைகுறைப்பு மற்றும் பார்ட்டிகள், டான்ஸ், டிஸ்கோத்தே அறிமுகங்கள் மூலம்பிரபலமானார். பெயரையும் சுமா ரங்கநாத் ஆக்கிக் கொண்டார்.

ஆனால், இப்போது அங்கு அவருக்கு சான்ஸ் இல்லை. இதனால் தமிழில் ஸ்திரீ என்ற கொஞ்சம் சூடான படத்தில்நடிக்க ஒப்புக் கொண்டார். வழக்கமாக அவருக்குத் தரப்படுவது ரூ. 10 லடசம். ஆனால் ஆடை குறைப்பும்,உஷ்ணக் காட்சிகளும் அதிகம் என்பதால் ரூ. 15 லட்சம் தரப்பட்டது.

அதை வாயைப் பிளந்து வாங்கிய சுமன், மிக தாராளமாக நடிக்கவும் செய்தார். ஆனால், மனிஷா கெய்ராலாஸ்டைலில் இப்போது ஸ்திரீ படத்தில் ஆபாசக் காட்சிகளை நீக்கினால் தான் ரிலிஸ் செய்ய விடுவேன் என்றுமிரட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்தப் படத்தை இந்தி, தெலுங்கில் டப் செய்து காசு பார்க்கத் திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர்கள் வெறுத்துப் போய்நிற்கின்றனர். இன்னும் கொஞ்சம் காசு கறக்கவே சுமன் இந்த நாடகம் போடுவதாகக் கருதப்படுகிறது.

ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த மார்வாடி இளைஞரை இவர் திருமணம் செய்யப் போவதாகவும் இந்த நேரத்தில்ஸ்திரீ படம் வெளியே வந்தால் பிரச்சனையாகிவிடும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் அளித்த சிறப்புப் பேட்டியில் சுமாவிடமிருந்து உதிர்ந்த முத்துக்களைப்பாருங்களேன் ..

எனக்கு ரொமான்ஸ் ரொம்பப் பிடிக்கும். எனது ராசி சிம்ம ராசி, சும்மா இருக்க முடியுமோ, அதனால்தான்காதலித்துக் கொண்டே இருக்கிறேன். இடையில் வரும் தோல்விகள் குறித்து நான் கவலைப்படுவதில்லை.

காதலித்துத் தோல்வியுற்றாலும் கூட எனது முன்னாள் காதலர்களுடன் இன்னும் எனக்கு தொடர்பு உள்ளது. நட்பும்கூட ஒருவகை காதல்தானே! காதல் மாதிரி வேறு எதுவும் வராதுங்க.

சின்ன வயதில் இருந்தே ஆண் என்றால் வேறுபாடு பார்க்காமல் வளர்ந்து விட்டேன். என்னுடன் எப்போதுமேயாராவது ஒரு பாய் பிரண்ட் இருந்து கொண்டே இருப்பான்.

எனக்கே சில நேரங்களில் சந்தேகம் வந்து விடும், நாம பெண்தானா, இல்லை ஆணா என்று. அந்த அளவுக்கு பாய்பிரண்ட் பைத்தியம் நான்... என்கிறார்.

கணவர் கெளதம் கபூரைப் பிரிந்த இவர் கொஞ்ச நாள் இந்தி நடிகர் ராகுல் ராயுடன் சுற்றினார். இப்போது சரக் கபூர்என்ற லண்டன் இளைஞரை மணக்க உள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil