For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "அந்தப் பிரச்னையால் வாய்ப்பு கிடைக்கலைன்னா கவலையில்லை.." - சுமங்கலி திவ்யா #Exclusive

  By Vignesh Selvaraj
  |
  திருமணம் நின்று போன பிரச்னை குறித்து சுமங்கலி திவ்யா பேட்டி

  சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'சுமங்கலி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றி பின்னர் சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் திவ்யா.

  'லட்சுமி வந்தாச்சு' சீரியலில் நெகட்டிவ் ரோல், 'சுமங்கலி' சீரியலில் அனைவரும் விரும்பும் மருமகள் ரோல் என கலக்குகிறார். இதற்கிடையே 'அடங்காதே' திரைப்படத்தில் சரத்குமாரின் ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.

  சீரியலில் அசத்தி வரும் நிலையில் சினிமா பக்கமும் ஒரு ரவுண்டு வரும் திட்டத்தில் இருக்கும் திவ்யாவிடம் பேசினோம். அவரது பேட்டி இங்கே..

  'சுமங்கலி' சீரியல் எப்படி போகுது?

  'சுமங்கலி' சீரியல் எப்படி போகுது?

  " 'சுமங்கலி' சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆகிருக்கு. இப்போதான் சீரியலில் இன்ட்ரெஸ்டிங்கான பல முடிச்சுகள் ஓப்பன் ஆகி பார்க்க செம பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு. சீரியல் பார்வையாளர்களின் வரவேற்பு இப்போ அதிகமா கிடைச்சிட்டு இருக்கு."

  பெர்ஃபார்மென்ஸுக்கு வரவேற்பு எப்படி?

  பெர்ஃபார்மென்ஸுக்கு வரவேற்பு எப்படி?

  " 'சுமங்கலி' சீரியல்ல இருக்கிற மாதிரி என்னோட ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. நான் ரொம்ப ஜாலி டைப். செட்லேயும் அப்படித்தான் இருப்பேன். சீரியல் கான்செப்ட் பொறுத்தவரைக்கும் ரொம்ப சைலன்ட் கேரக்டர். ஒரு மருமகள் வீட்டுல இப்படித்தான் இருக்கணும்னு பேரன்ட்ஸ்-லாம் லைக் பண்றமாதிரி ஒரு கேரக்டர். என்ன பிரச்னைனாலும் சரி கணவர், மாமியார், எல்லோர்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணி, ஒரு ஃபேமிலியை நல்லவிதமா ரன் பண்ணிக் கொண்டு போற மாதிரி ஒரு கேரக்டர். அதுனால எல்லோரும் விரும்புறாங்க."

  வேறு சீரியல்கள், நடிக்க வாய்ப்புகள் வருதா?

  வேறு சீரியல்கள், நடிக்க வாய்ப்புகள் வருதா?

  "வேற சேனல்ஸ்ல இருந்தும் சீரியலில் நடிக்க சான்ஸ் வந்துட்டு இருக்கு. ஆனா, எனக்கு சினிமாவில் பண்ணணும்னு ஐடியா இருக்கு. அதனால், இன்னும் எந்த வாய்ப்பையும் ஏத்துக்காம இருக்கேன். என்னால என்ன பெஸ்ட்டா கொடுக்க முடியுதோ அதுல கமிட் ஆகி பண்ணலாம்னு இருக்கேன்."

  வெப் சீரிஸ், சினிமா மாதிரி சான்ஸ் கிடைக்குதா?

  வெப் சீரிஸ், சினிமா மாதிரி சான்ஸ் கிடைக்குதா?

  "தமிழ், தெலுங்கு மொழிகளில் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. படங்களுக்கான கதை கேட்டுட்டு இருக்கேன். என்னால சினிமாவிலும் சீரியல்ல மாதிரி நல்ல நடிப்பை கொடுக்க முடியுமானு யோசிச்சு அப்புறம் தான் அந்த ஃபீல்டுல இறங்குவேன். கண்டிப்பா சினிமாவில் தொடர்ந்து வருவேன்."

  ஆங்கரா இருந்து டிவி நடிகையாகி இருக்கீங்க.. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  ஆங்கரா இருந்து டிவி நடிகையாகி இருக்கீங்க.. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  "வேந்தர் டி.வி-யில ஆங்கரா இருந்திருக்கேன். இந்த கரியர் நான் எதிர்பார்க்காத ஒண்ணு. பி.ஜி. பண்ண வந்துட்டு அப்புறம் விளையாட்டுத்தனமா ஜாலியா ஆங்கரிங் பண்ணேன். அது இந்தளவுக்கு கொன்டுவந்து விடும்னு எதிர்பார்க்கலை. நான் முன்னாடி நெனைச்ச லைஃப் இப்போ போய்க்கிட்ருக்க லைஃப் டிராவல்க்கு அப்படியே ஆப்போசிட்."

  தயாரிப்பாளர்/ நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடனான திருமணம் நின்றுபோனது குறித்து?

  தயாரிப்பாளர்/ நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடனான திருமணம் நின்றுபோனது குறித்து?

  "அந்த திருமண ஏற்பாடு வீட்டுல பார்த்துப் பண்ணினது. நாங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊர்ங்கிறதால அந்த பிளான் போச்சு. நடுவுல அது செட் ஆகாதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதையும் மீறி அதை எடுத்துட்டுப் போறது சரியில்லனு தோணுச்சு. எப்பவோ பின்னாடி சரியா வராதுனு முடிவு பண்றதுக்கு இப்பவே முடிச்சுக்கிட்டா நல்லதுன்னு அதை கேன்சல் பண்ணிட்டோம். பெருசா ஒரு பிரச்னை வரப்போகுதுனு தெரிஞ்சும் அதுல இன்வால்வ் ஆகி பிரச்னையை சந்திக்கிறதுக்கு பதிலா, நடுவுலயே அதுலேர்ந்து வெளிய வர்றது ஈஸில்ல?"

  அந்த முடிவு ஏற்படுத்திய பாதிப்பு?

  அந்த முடிவு ஏற்படுத்திய பாதிப்பு?

  "என்னோட ஆக்டிங்க்கும் என்னோட திறமைக்கும் தான் என்னை நடிக்கக் கூப்பிடுவாங்களே தவிர அந்த பிரச்னையை மையமா வச்சு எனக்கு சான்ஸ் தர்ற முடிவுக்கு வந்தாலோ வரலைன்னாலோ அதுக்கு நான் கவலைப்பட முடியாது. அதை பொருட்படுத்தவே மாட்டேன். பெர்சனல் வேற.. அஃபிஷியல் வேற.. இதை வெச்சு நான் சான்ஸ் கொடுப்பேன். இந்தக் கேரக்டர் கொடுத்தா அந்தப் பொண்ணு பண்ணுவாங்களா, அவ்ளோதான் வேணும்." என தெளிவாக பேசி முடிக்கிறார் திவ்யா.

  English summary
  Divya is the heroine in 'Sumangali' serial telecasting in Sun TV. We talked to Divya about her career. Here is an interview with Divya.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X