விஜய்சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிவிடற சீன்.. கண்டிஷன்ஸ் அப்ளைடு-ன்னு மகேஸ்வரியின் ஸ்பெஷல் பேட்டி !!

சென்னை : சன் ம்யூசிக் மூலம் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான விஜே மகேஸ்வரி தற்போது சில இடைவேளைக்குப் பிறகு பிரம்மாண்டமான படங்களில் நடிக்கிறார்.

சன்ம்யூசிக், இசையருவி என பல சேனல்களில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக வலம் வந்தவர். தாயுமானவன் முதலிய சீரியல்களிலும் நடித்தவர்.

மகேஸ்வரி சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி மக்களின் வரவேற்பை பெற்றவர். தற்போது விக்ரம் திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார் மகேஸ்வரி.

சின்னவயலேர்ந்தே

சின்னவயலேர்ந்தே

கேள்வி : ரொம்ப வருஷமா மீடியாவுல இருக்கீங்க.. அப்படியே இருக்கீங்களே?

பதில் : 16 வயசுல என்னோட கெரியர ஆரம்பிச்சேன். நிறைய பேர் சொல்லுவாங்க, சின்ன வயசுலேர்ந்து உங்கள நான் பாக்குறேன்னு. ஆக்சுவலி நான் சின்ன வயசுலயே இந்த ஃபீல்டுக்கு வந்துட்டேன். எனக்கு என்னோட ஃபீல்டுல ரொம்ப லவ். என்னோட கடைசி மூச்சு இருக்கவரைக்கும் வீடியோ விட்டு போகமாட்டேன் என்று சிரித்த முகத்துடன் பதிலளித்தார் .

 நானே முதல்ல…

நானே முதல்ல…

கேள்வி : உங்களுக்கு யாரு காஸ்ட்யூம் டிசைன் பண்றாங்க?

எனக்கு நான் தான் காஸ்ட்யூமர் டிசைனர். ஏன் என்றால் பேசிக்கலி நானும் காஸ்ட்யூம் டிசைனர் . என்னோட முதல் படம் ப்யார் ப்ரேமா காதல். அப்பறம் சிந்துபாத் படம் ஒர்க் பண்ணேன். சிம்புவுக்கும் நிறைய காஸ்ட்யூம்ஸ் ஒர்க் பண்ணிருக்கேன். இப்போ செஃல்பின்னு படத்துக்கு ஜீவி பிரகாஷ்-க்கு பண்னிருக்கேன். கருபழனியப்பன் சாருக்கு தமிழா தமிழா ப்ரோக்ராம்க்கு ரெகுலரா பண்ணிட்டுருக்கேன்.

ஜாலியா எடுத்துக்கணும்

ஜாலியா எடுத்துக்கணும்

கேள்வி: நிறைய கமெண்ட்ஸ்... எப்படி எதிர்கொள்றீங்க?

பதில்: எல்லோ போட்டோவுக்குமே மிக்ஸ்டா வரும். மகேஸ்ஹ்வரி க்ளாமரா இருக்க அந்த எல்லாம் கமெண்ட்ஸ்சும் ஜாலியா எடுத்துக்கணும் . இன்டர்நெட் இனியவர்கள் பலரும் என்னை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் .நான் முதல் முதலில் கிளாமர் போஸ் கொடுத்தபோ மகேஸ்வரியா இது என்று பலரும் ஆச்சர்ய பட்டனர் .இப்போது எல்லாருக்கும் பழகிடுச்சு .

காம்ப்ரமைஸே கிடையாது

காம்ப்ரமைஸே கிடையாது

கேள்வி : ரைட்டர் படத்துல பணியாற்றிய அனுபவம்

பதில் : இவ்வளவு நாளா காத்துட்டு இருந்தது இப்படி ஒரு ஆப்பர்சுனிட்டிக்குதான். இவ்ளோ நாளா மகேஸ்வரிய ஆங்கரா எல்லாரும் பாத்துருக்காங்க. க்ளாமரா காஸ்ட்யூம்ஸ், போட்டோ ஷூட் போட்டுவாங்கன்னு சொல்லிருக்காங்க. ஆனா எனக்கு ஆக்டிங் ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாளா ஆசையும் கூட, ப்ராக்டீஸ் பண்னிட்டும் இருந்தேன். இந்த படம் அமைஞ்சது ரொம்பவே பெரியவிஷயம். டயலாக்ஸ் ல்லாம் கஷ்டம் இல்ல.. ரொம்ப துறு துறுவான கேரக்டர். மொத்த டீமுமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. ஒவ்வொரு சீனுக்கும் ப்ராங்க்ளின் சாருக்கு அவருக்கு என்ன வேணுமோ, அதுவரைக்கும் நம்மள நடிக்க வச்சிதான் அனுப்புனாரு. காம்ப்ரமைஸே கிடையாது.

ஒன்னா சாப்பிடுவோம்

ஒன்னா சாப்பிடுவோம்

கேள்வி : விக்ரம் படத்தின் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்

பதில் : லோகேஷ் கனகராஜ், கமல்-ன்னு ரொம்ப பெரிய டீம். அந்த ப்ராஜெக்ட்-ல நான் இருக்கேன்னு நெனக்கிறதே எனக்கு பெரிய விஷயம் தான். ஏதோ ஒரு மூலையில நின்னாலே சந்தோஷம் தான்., ஆனா எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு குடுத்துருக்காங்க. என்னையும் கன்சிடர் பண்ணிருக்காங்கன்னு நெனக்கும்போதே நான் வெற்றியை நோக்கி போயிட்டு இருக்கேன்னு உணர முடியுது. அந்த ப்ரேம் ல விஜய்சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிவிடற சீன், ரொமான்ஸ் ல்லாம் இருக்கு. அவர் கூட நடிக்கனும்ன்னுல்லாம் ரொம்ப நாள் ஆசை, கனவு. எல்லாமே. அந்த கனவு நினைவு ஆகிடுச்சி.

ஆசப்பட்டேன் நடந்துச்சு.. ஆசப்படுறேன் நடக்கனும்

ஆசப்பட்டேன் நடந்துச்சு.. ஆசப்படுறேன் நடக்கனும்

கேள்வி : விஜய்சேதுபதி எதாச்சும் ஸ்பெஷலா பேசினாரா?

பதில் : விஜய்சேதுபதி எப்பவும் தனியால்லாம் சாப்பிட மாட்டாரு. எல்லாரும் ஷீட் முடிச்சி 9 மணிக்கு கெளம்பிட்டா, டீமா எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ல்லாம் ஷேர் பண்னுவாரு.ரொம்ப என்க்ரேஜ் பண்னுவாரு. விஜய்சேதுபதிக்கும் எனக்கும் தான் காம்போ. அதனால கமல் சார் , பகத்பாசில் பாக்க முடியல. அவங்கள எல்லாம் பாக்கனும்ன்னு ஆசப்படறேன்.

பிக்பாஸ் அபிஷேக்கோட க்ளாமர் ரோல்

பிக்பாஸ் அபிஷேக்கோட க்ளாமர் ரோல்

கேள்வி : மகேஸ்வரியின் அடுத்த பயணம்?

பதில் : 2022 காதல் கண்டிஷன்ஸ் அப்ளைடு-ன்னு ஒரு படம். 2022 ல வரப்போகுது இந்த படம். அபிஷேக்கோட ஒரு காம்போ இருக்கு. க்ளாமர் ரோல் தான். எனக்கு எப்பவுமே சேலஞ்சிங் ரோல் பண்ணத்தான் பிடிக்கும். இது ஒரு காமெடி கலந்த க்ளாமர் ரோல். இதுல.. இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இருக்காது. நீங்களா அதுன்னு கேட்பாங்க. அந்த அளவு இருக்கும். இந்த நியூ இயர் எல்லாருக்கும் அமோகமா ஹெல்தியா இருக்கனும். வாழ்த்துக்கள்.என்று கலகலப்பாக பகிர்ந்து கொண்டார் மகேஸ்வரி. இந்த வீடியோவில் நிறைய சுவாரஸ்ய தகவல்கள் உள்ளது .முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யுட்யூபில் காணலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X