ஜனனியின் கதையை முடிக்க குணசேகரன் போடும் பிளான்.. தப்பிப்பாளா ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஆதி குணசேகரை எதிர்த்து பெண்கள் அனைவரும் எதுவுமே செய்யக்கூடாது என்கிற முடிவில் தெளிவாக இருக்கிறார். இதனால் ஜனனியை வீட்டுக்குள் வைத்தால்தான் அத்தனை பெண்களும் அடங்குவார்கள். அமைதியாக இருக்கும் பெண்களை எல்லாம் தூண்டிவிடுவது ஜனனி தான். இதனால், அவளை வீட்டுக்குள் வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறான். இதனால் ஜனனியை ஏதாவது செய்து விட வேண்டும் என்று ஆதி குணசேகரன் திட்டம் போடுகிறான்.

போனை காணவில்லை என ஜனனி தேடிக்கொண்டு இருக்க. அந்த நேரத்தில் திடீரென அலறியபடி கீழே விழும் சத்தம் கேட்டு அனைத்து பெண்களும் ஓடி வருகின்றனர். அங்கு ஜனனியின் காலில் பூந்தொட்டி விழுந்து ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறாள். அந்த நேரம் பார்த்து சக்தி வீட்டுக்கு வர, ஜனனியை மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறான். உடனே நாங்களும் போகிறோம் என்று ஈஸ்வரி சொல்ல, உடனே ஆதி குணசேகரன், நீங்க அங்கே போய் என்ன செய்ய போறீங்க, எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாருங்க என்கிறார். இதைக்கேட்டு அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல்: நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, கரிகாலனுக்கு இந்த வேலையை செய்தது ஆதி குணசேகரன் தான் இருக்கும் என்று சந்தேகம் வருகிறது. உடனே மாமா, அது எப்படி பூந்தொட்டி தானா கீழே விழும் என்று கேட்க, டேய் ஆடி மாச காத்துல அம்மியே பறக்கும் பூந்தோட்டி பறக்காதா... இத வந்து என்கிட்ட கேட்டுக்கிட்டு இருக்க என்று சொல்கிறான். ஆதி குணசேகரின் இந்த பதிலை கேட்டதும், கரிகாலனுக்கு இது அவருடைய வேலை தான் என்பது தெரிந்து விடுகிறது. அதுசரி உங்கவிட்ட யார் மோதுனாலும், அவங்க அவ்வளவுதான்.. இப்போத்தான் ஜனனிக்கு வார்னிங் கொடுத்து இருக்கீங்க போல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறான்.

ஆதி குணசேகரன் மீது சந்தேகம்: அடுத்ததாக மருத்துவமனைக்கு வரும் ஆதி குணசேகரன், ஜனனியை பார்த்து நலம் விசாரித்து விட்டு நல்லபடியாக குணமாகி வீட்டிற்கு வா... எப்போதும் தேவையில்லாத வேலை செய்தா இப்படித்தான் ஆகும், இனிமேலாவது தேவையில்லாத வேலையை செய்யாதே என்று அறிவுரை கூறிவிட்டு வருகிறான். இதனால் சந்தேகமடைந்த ஜனனி, ஈஸ்வரிக்கு போனை போடுகிறாள். அப்போது ரேணுகா, நந்தினி என அனைவரும் அந்த இடத்தில் இருக்கின்றனர். ஜனனியிடம் இருந்து ஃபோன் வருவதை பார்த்து பதறி போய் ஃபோனை எடுத்த ஈஸ்வரி என்ன ஆச்சுமா உனக்கு என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, நான் நல்லா தான் இருக்கேன். ஆனால், கொஞ்ச நாள் நடக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு அவ்வளவுதாங்க என்று சொல்கிறாள். இப்போதான், ஆதி குணசேகரன் மாமா என்னை பார்த்துவிட்டு சென்றார் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு ஆச்சரியமான ரேணுகா, நாங்கள் உன்னை பார்க்க வருகிறோம் என்று சொன்னபோது அதெல்லாம் தேவை இல்லை என்று எங்களை அதட்டி வீட்டில் உட்கார வைத்துவிட்டு அவர் மட்டும் ஏன் வந்தார் என்று கேட்கிறாள்

அப்போது ஜனனி, அவர் மனதில் வன்மம் நிறைய இருக்கிறது. இதனால், நாம் அனைவரும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும் அவர் பேசுவது ஒன்றுமே சரியில்லை என்று சொல்கிறாள். அப்போது ரேணுகா, ஜனனி நீ சொல்றது எதுவுமே புரியல என்ன விஷயமா இருந்தாலும் தெளிவா சொல்லு என்று என்கிறார். அக்கா இன்னும் இரண்டு மணிநேரத்தில் நான் வீட்டுக்கு வந்துவிடுகிறேன் வந்ததும் இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கடுப்பான குந்தவை: ஜனனி மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் குந்தவையை சக்தியிடம் நெருங்கி பழக வைக்க வேண்டும் என்று திட்டம் போடும் ஆதி குணசேகரன். குந்தவைக்கு போனை போட்டு ஜனனிக்கு அடிபட்டுவிட்டது. அவள் மருத்துவமனையில் இருக்கும் தகவலை சொல்கின்றான். இந்த நேரத்தில் நீ சக்தியை பார்த்தால் நல்ல விஷயம் நடக்கும் என்று சொல்ல, குந்தவையும் ஜனனியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறாள். ஜனனியை மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆவதற்காக வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து குந்தவை வருகிறாள்.

குந்தவையைப் பார்த்து கடுப்பாகும் ஜனனி, உனக்கு இந்த விஷயத்தை யார் சொன்னது என்று கேட்க ஆதி குணசேகரன் தான் ஜனனிக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார் அதனால் தான் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஜனனி கடுப்பாகிறார். மேலும், குந்தவையை வெறுப்பேத்த வேண்டுமென்றே, என்னால் வீல்சேரில் வர முடியாது சக்தி, என்னை அப்படியே தூக்கிக் கொண்டு காரில் உங்கர வைத்துவிடு என்று சக்தியிடம் சொல்கிறாள். சக்தியும் ஜனனியை தூக்கிக்கொண்டு போய் காரில் உட்கார வைக்க இதை பார்த்தால் குந்தவை மேலும் கடுப்பாகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

ஜனனியின் உயிருக்கு ஆபத்து: பின் ஜனனி வீட்டுக்கு வர அனைவரும் அவளை பார்த்து நலம் விசாரிக்கின்றனர். அப்போது, அனைவரிடத்திலும் எனக்கு நடந்ததை பார்க்கும்போது இது தானாக நடந்தது போல எனக்கு தெரியவில்லை. என் உயிருக்கு ஏதோ பெரிய ஆபத்து வரப்போகிறது போல எனக்கு தெரிகிறது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜனனி, தனி அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க அப்போது வாட்டர் ஹீட்டர் வெடித்து அதிலிருந்து புகை வெளியேறுகிறது. இதனால், அறை முழுவதும் புகை சூழ்ந்துவிட, பயந்து போன, ஜனனி கதவை திறந்து வெளியே வரலாம் என்று நடக்க முடியாமல் நடந்து கதவருகே வந்து கதவை திறக்க கதவு வெளியில் பூட்டப்பட்டுள்ளது.

பயந்து போன ஜனனி கதவை தட்டி யாராவது இருக்கீங்களா... என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க என்று கத்துகிறாள். யாரும் வராததால், மெத்தை மீது இருக்கும் போனை எடுக்க முயற்சி செய்ய, நடக்க முடியாமல் விழுந்து விடுகிறாள். பின் தட்டுத்தடுமாறி போனை எடுத்து பேசுவதற்குள், அறை முழுவதும் புகை சூழ்ந்துவிட மூச்சு திணறல் ஏற்பட்டு, அப்படியே, மாயங்கி கீழே விழுந்து விடுகிறாள். ஆதி குணசேகரனின் சதி வலையில் சிக்கி இருக்கும் ஜனனி, இதில் இருந்து தப்பிப்பாளா இல்லையா.. என்பதை தெரிந்து கொள்ள சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 தொடரை தொடர்ந்து பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X