வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி.. குழப்பத்தில் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரனை அழிக்க நினைக்கும் ராவணன் ஜனனியை வச்சு கேமை ஸ்டார்ட் பண்ணி இருக்காரு. இதுக்காக ஜனனிக்கு வீடியோவை அனுப்புறது மட்டுமல்லாம, போன்ல பேசி ஜனனியை வெளியில வரச் சொல்லி, கஷ்டப்படுத்துறாரு. இதனால குழப்பம் அடைந்த ஜனனி, மதிவதனியிடம் உதவி கேட்டு போறாங்க.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடில், மதிவதனியுடம் இந்த நம்பர்ல இருந்து தான் எனக்கு போன் வந்தது, அவன் என்ன ரொம்ப டென்ஷன் பண்றான்னு என சொல்றாங்க, இதை கேட்ட மதிவதனி இந்த நம்பர் யாருடையதுனு விசாரிக்க சொல்றாங்க. அந்த விசாரணையில், அது கதிரோட நம்பர் என்ன தெரிய வருது. இதனால ஆத்திரப்படும் ஜனனி, நேராக வீட்டுக்கு போய் கதிரிடம் எதுக்கு இந்த மாதிரியான வேலைகள் எல்லாம் செய்றா, அந்த வீடியோவை எனக்கு ஏன் அனுப்பி குழப்புற என கேட்டு சண்டை போடுகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மேலும், இத்தனை நாளா அந்த வீடியோ உன்கிட்ட தான் இருக்குன்னு உங்க அண்ணனுக்கு கூட தெரியாம நீ வச்சிருக்க காரணம் என்ன, உன்னோட பிளான் என்ன என்று ஜனனி ஆத்திரத்தில் கத்துகிறாள். ஆனா, கதிர் நீ தேவையே இல்லாம என் மேல பழி போடுற, நான் உனக்கு போன் பண்ணல என்று சொல்கிறார். இப்படி ரெண்டு பேருக்கு இடையில பிரச்சனை ஆரம்பித்து அது சண்டையாக மாறுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல கோவத்தை கட்டுப்படுத்த முடியாத கதிர் ஜனனியை அடிக்க போறாரு அந்த நேரம் ஈஸ்வரி வந்து தடுத்துறாங்க.

வெளியேறிய ஜனனி: இதுக்கு மேல இந்த வீட்ல நான் இருக்க மாட்டேன் என்று சொல்லும் ஜனனி வீட்டை விட்டு வெளிய போவதாக சொல்கிறார். அப்போது குணசேகரன், ஜனனி எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகணும், கதிர் நீ தானே ஜனனியை அடிக்க போன, ஜனனி கிட்ட நீ மன்னிப்பு கேள், தம்பி பொண்டாட்டிய அடிக்க நீ யார் என திட்டுகிறார். ஆனால் கதிர், என் மேல தேவையே இல்லாம பழி போட்டது ஜனனி தான், நான் மன்னிப்பு கேட்க அவசியமே இல்ல என்று சொல்கிறாள். அந்த நேரம் மேலே இருந்து இறங்கி வரும் ஜனனி, எனக்காக யாரும் இந்த வீட்ல பேச வேண்டாம் உண்மையை எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடியாது. உண்மை என்னைக்காவது ஒருநாள் நிச்சயமா வெளியில வரும். நான் இந்த வீட்ட விட்டு போறேன் என வீட்டில் இருந்து சக்தியுடன் கிளம்புகிறாள். இதையடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X