மருமகள்களுக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்

சென்னை: இதையடுத்து குணசேகரன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது நீதிபதி, ஈஸ்வரியிடம் நீங்கள் தான் குணசேகரன் மீது கேஸ் கொடுத்தது. அப்படி இருக்கும்போது அவர் பரோலில் வர எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி, குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது அவர் வெளியில் வந்தால் தான் அந்த பிரச்சனை சரியாகும் என்பதால், அவர் பரோலில் வருவதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம் என்கிறாள். அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, இவர் பரோலில் இருந்து வெளியே வந்ததால் உங்கள் நான்கு பேரின் உயிருக்கு ஆபத்து என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள், அது உண்மையா என்றும், ஜனனி உங்களுக்குவிபத்து நடந்ததாகவும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர், அது உண்மையா? உங்களுக்கு சின்ன சந்தேகம் இருந்தாலும் பயப்படாமல் சொல்லுங்கள் நான், இவரின் பரோலை ரத்து செய்துவிடுகிறேன் என்கிறார்.

இது எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த ஜனனி குணசேகரன், பூந்தொட்டியை தள்ளிவிட்டதையும், புகையால் மூச்சு திணறவைத்ததையும் நினைத்து பார்க்கிறாள், அப்போது, நீதிபதி பயப்படாமல் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், இவர் எதுவும் சொல்லக்கூடாது என்று பயமுறுத்தி இருக்கிறாரா? என்று கேட்க அப்போது பேசிய ஜனனி எங்களை யாரும் மிரட்டவில்லை, அப்படி மிரட்டுவதற்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம்,குடும்பத்தில் சில முக்கியமான முடிவு எடுக்க வேண்டி இருந்ததால் தான், குணசேகரன் அவர்களை வீட்டுக்கு வர ஒத்துக்கொண்டோம். ஆனால், குணசேகரன் பரோலில் இருந்து வெளியே வந்ததும். அவர் வெளியில் தான் தங்கி இருந்தார். அதோ போல அவர் வீட்டுக்கு வரும் போது, நாங்கள் வெளியில் தங்கிக் கொண்டோம். இதனால், இவருக்கும் எனக்கு நடந்த விபத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறாள். இதைக்கேட்ட நீதிபதி, ஆதி குணசேகரனை எச்சரித்து அனுப்புகிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் 2: இதைத்தொடர்ந்து, ஈஸ்வரி ஏன் நீதிபதியிடம் அப்படி மாற்றி சொன்ன, உண்மையை சொல்லி இருக்க வேண்டியது தானே என்று கேட்க, இந்த ஒருமுறை நாம இவரை மன்னித்து விடுவோம். மீண்டும் இதே அவர் செய்தால் என்றால், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அக்கா என்று சொல்கிறாள். பின் கொற்றவை மேடம் இருந்து போன் வர, என்ன ஜனனி நீ இப்படி பண்ணிட்ட, ஆதி குணசேகரன் உங்க மேல பகையோட இருக்காரு, குறிப்பான ஜனனி உன் மேல கடுமையான கோபத்தோடு இருக்காரு என்று சொல்கிறாள். இதைகேட்ட ஜனனி எனக்கு தெரியும், நாங்க ஜாக்கிரதையாக இருக்கிறோம் என்கிறாள்.

நேரம் சரியில்ல: குணசேகரனுக்கு குலதெய்வ கோவிலில் பரிகாரம் செய்ய அனைவரும் போக, அந்த நேரம் பார்த்து ஜனனி விபத்தில் சிக்கிக்கொண்டதால், பூஜை செய்ய முடியாமல் போய்விடுகிறது. தொடர்ந்து குணசேகரனுக்கு பிரச்சனை வந்து கொண்டே இருப்பதால் விசாலாட்சி ஜோசியர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து, குணசேகரனின் ஜதாகத்தை கொடுத்து, இப்போது நேரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார். ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், இவருடைய நேரம் இப்போது எதிர்மறையாக இருக்கிறது, இவர் போடும் கணக்கு எல்லாமே இப்போது செல்லுபடி ஆகாது. இதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதற்காக பரிகாரம் ஒன்று செய்யும்படி சொல்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

இன்றைய ப்ரோமோ: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், இந்த ஜனனி என்ன பண்ணி இருக்கா தெரியுமா... கொற்றவைக்கு போனை போட்டு வீட்டுக்கு வர சொல்லி, அவங்கள வச்சே போலீஸ் ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொல்லி, அண்ணனை கைது பண்ண வெச்சி இருக்கா. அதுக்கப்புறம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜனனி தயவுல தான் அண்ணன் வெளியில வந்த மாதிரி ஒரு நாடகத்தை போட்டு இருக்காங்க. இப்ப, இந்த விஷயத்துக்காக மறுபடியும் அவங்க கிட்ட போய் கைகட்டி நம்ம நின்னு அனுமதி கேட்க வேண்டுமா என்கிறார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஆதி குணசேகரன், கதிர் நீயா ஏதாவது யோசனை பண்ணிக்கிட்டு அதுதான் சரின்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. முதல்ல இந்த விஷயம் சம்பந்தமா ஈஸ்வரி கிட்ட கலந்து பேசி, அவ என்ன சொல்கிறாளோ என்பதை நாம பார்க்க வேண்டும். உடனே விசாலாட்சி, இவ்வளவுதானா, நானே போய் ஈஸ்வரியிடம், பேசி சம்மதத்தா வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறாள். உடனே குணசேகரன், அம்மா இருங்க நீங்க போனா இதுக்கு ஒரு முடிவு வராது.

குணசேகரன் போடும் பிளான்: போன தடவை தம்பி பொண்டாட்டிங்க எல்லாம் சேர்ந்துதான் ஈஸ்வரி கிட்ட எடுத்து சொல்லி, ஈஸ்வரியை சம்மதிக்க வச்சாங்க. இந்த முறையும் உங்க பொண்டாட்டிங்களை ஈஸ்வரியிடம் பேச சொல்லுங்க, கோயில்ல பண்ணாம வேண்டிய பூஜையை, வீட்ல பண்ண போறோம் அவ்வளவு தானே, அதை எடுத்து சொல்லி ஈஸ்வரியை ஒரு நல்ல முடிவா எடுக்க எடுக்க சொல்லுங்க என்கிறார். உடனே கதிர், அண்ணன் இதெல்லாம் தேவையே இல்லாத வேலை, அவளுங்க இதுக்கெல்லாம் சம்மதிக்கவே மாட்டாங்க என்கிறார். அப்போது, குணசேகரன், தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் தேவையில்லை, ஆனால், எனக்குனு ஒரு குடும்பம் இருக்கும் போது நான் அதற்காக யோசித்துத்தானே ஆக வேண்டும். என் நேரம் சரியில்லாமல், அது உங்களை எல்லாம் அடித்துவிட்டது என்றால், இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஜோசியர் சொல்வது போல, நம்ம வீட்டில் நடக்கும் நல்லது எல்லாம் தட்டித்தட்டித்தான் போகிறது. அது எல்லாத்தையும் இந்த பூஜையோட சரி செய்துவிடலாம். கதிர், நீங்க சொல்ற விதத்துல சொன்னா, உங்க பொண்டாட்டிங்க கேட்டுப்பாங்க. நீ போய் ஆக வேண்டியது பார்த்து உன் பொண்டாட்டி கிட்ட சொல்ல வேண்டிய முறையில் எல்லாத்தையும் எடுத்து சொல்லு என்று சொல்கிறார் ஆதி குணசேகரன்.

மாடியில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என அனைவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருகஅப்போது அனைவரும் வந்து, முக்கியமான ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்கிறார். இதைக் கேட்ட நந்தினி, என்ன ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, அதெல்லாம் இல்லை, தனியாக பேச வேண்டும் வா என்று அழைத்து செல்கிறார். அப்போது, ஜனனியும் ஈஸ்வரியும் தனியாக இருக்க, கதிர் ஜனனியிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்ல, ஈஸ்வரி அக்காதானே இங்கேயே சொல்லு என்று சொல்ல, இல்ல ஜனனி தனியாக பேச வேண்டும் என்கிறான். உடனே ஈஸ்வரி, போ ஜனனி தனியா பேசிவிட்டு வா என்கிறாள். இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X