குணசேகரனின் சதி.. மிரண்டுப்போன ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில்!

சென்னை: ஆதி குணசேகரனுக்கு மணி விழா நடத்த வேண்டும் என ஜோசியர் சொன்ன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் இருக்க, அப்போது, குணசேகரன், நீங்க அனைவரும் உங்க பொண்டாட்டிங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, ஈஸ்வரி கிட்ட பேச சொல்லுங்க, அப்போது தான் ஈஸ்வரி இந்த விஷயத்துக்கு ஒத்துக்கொள்வாள் என்று சொல்கிறார். மேலும், ஈஸ்வரி முன்பு இருந்தது போல இல்ல, இப்போ மாறி இருக்கிறாள் இதனால், நிச்சயம் இந்த விஷயத்திற்கு சம்மதிப்பாள், நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை செய்ய சொல்லவில்லை, இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், இந்த குடும்பத்திற்கு நடக்க வேண்டிய நல்லது எல்லாம் நடக்காமல் போய் கொண்டு இருக்கிறது. இதனால், உங்க மனைவிங்க கிட்ட எடுத்து சொல்லி புரிய வைங்க என்று சொல்கிறார் குணசேகரன்.

இதைத் தொடர்ந்து, ஞானம், கதிர், சக்தி என அனைவரும் அவர்களின் மனைவியை அழைத்து, கீழே ஜோசியர் வந்து இருக்காரு, உங்களுக்கு அந்த விஷயம் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன். அவர் அண்ணனுக்கு மணி விழா நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்காரு. ஏன்னா, அண்ணனோட ஆயுளில் பிரச்சனை இருக்கு அதுக்காக இந்த பூஜையை நாம செஞ்சு தான் ஆகணும். அதுக்காக நீங்க எல்லோரும் ஈஸ்வரி அண்ணிகிட்ட இது பற்றி பேசி, அவங்கள பூஜைக்கு சம்மதிக்க வைக்கணும் என்று சொல்கிறார். இதைக்கேட்டு, அனைவரும் ஆத்திரம் அடைந்த நிலையில், அப்போது பேசிய ரேணுகா, இது பத்தி ஈஸ்வரி அக்கா கிட்ட நாங்க எப்படி பேச முடியும். அவங்க கொடைக்கானல்ல எப்படி வாழ்ந்தாங்க, எப்படி எல்லோருக்கும் உதவி செஞ்சாங்க என்று ஒரு நாள் போய் தெரிஞ்சிக்கிட்டு வாங்க, அப்போதான் நீங்க இந்த மாதிரி எல்லாம் பேச மாட்டீங்க.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சல் தொடர்கிறது: எல்லாத்தையும் விட்டுட்டு அவங்க இப்ப அமைதியாக இருக்குறதுக்கு காரணம் என்னன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நீங்க கொடுத்த வைரவளையல், தங்க செயின் எல்லாம், எதுக்குனு தெரியுமா? அது எங்க வாய்க்கு போடுற பூட்டு, இதையெல்லாம் போட்டுக்கிட்டா நாங்க எதையுமே பேச கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களா? இந்த விஷயத்துல எங்களுக்கு விருப்பமே இல்ல, ஈஸ்வரி அக்கா, அந்த இடத்துல உட்கார்ந்து பூஜை பண்ண மாட்டாங்க, இதுதான் என்னோட முடிவு, என்னோட முடிவு மட்டும் இல்ல, எங்க எல்லாரோட முடிவும் இதுதான் என்று தீர்க்கமாக சொல்கிறாள் ரேணுகா. ரேணுகாவின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த கதிர், நீங்க பேசவில்லை என்றால், நாங்களே பேசிக்கொள்கிறோம் என்கிறார். அப்போது, குறுக்கிட்ட நந்தினி, நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க ஏற்கனவே, அக்கா, மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க. இப்ப போய் இந்த விஷயத்தை பத்தி, நீங்க பேசி அவங்கள மேலும் காயப்படுத்தாதீங்க என்று சொல்லி தடுக்கிறாள்.

குணசேகரனின் பிளான்: ஆனால், நந்தினியின் பேச்சை கேட்காத கதிர், இல்ல நாங்களே பேசி இதுக்கு ஒரு முடிவு எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்ல. அப்போது ஞானம் தடுத்து நிறுத்தி இவங்க சொல்றத நம்மளும் கொஞ்சம் அமைதியா கேக்கணும். இந்த விஷயத்தை நாம அண்ணன் கிட்ட சொல்லிவிடலாம் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்க்கலாம் என்று கிளம்பி, ஆதி குணசேகரனிடம் இந்த விஷயத்தை சொல்கின்றனர். இதை கேட்டு ஆத்திரம் வந்தாலும், அதை அடக்கிக்கொண்ட குணசேகரன், சரி வாங்க, ஈஸ்வரியை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், வாங்க வெளியில் போய்விட்டு வரலாம் என தம்பிகளை அழைத்து கொண்டு, ஈஸ்வரியின் அப்பா வீட்டிற்கு வந்து. இந்த விஷயத்தை பற்றி சொல்ல, அவரும், நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை நான் ஈஸ்வரியிடம் வந்து பேசுகிறேன் என்றார்.

இதையடுத்து, ஈஸ்வரியின் வீட்டுக்கு வரும் அப்பா, மாப்பிள்ளைக்கு மணிவிழா வருது, நீ கொடைக்கானல் போனதும் எல்லாத்தையும் மறந்துட்டியா... என்று சொல்லி சத்தம் போடுகிறார். அப்போது, ஈஸ்வரி அப்பா எனக்கு இதுபற்றி எதுவும், தெரியாது. ஏதோ பூஜை செய்ய வேண்டும் என்று தான் சொன்னார்கள். இதற்காக கோவிலுக்கு போய் இருந்தோம். ஆனால், அந்த பூஜை தானாக நின்று விட்டது என்று சொல்ல, உடனே ஈஸ்வரியின் அப்பா, அதுபற்றி எல்லாம் எனக்கு தெரியாது. முன்பு குணசேசரன் மேல தப்பு இருந்ததால், நான் அவருக்கு எதிராக இருந்தேன்.ஜெயிலுக்கு போன பிறகு அவர் திருந்திவிட்டார். இப்பவும் நான் அவரை நம்ப மாட்டேன் என்று சொல்வது தப்பு, இதற்கு மேலமையும் நீ, அந்த மணி விழாவிற்கு தடையாக இருந்தால், என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இதையடுத்து, ஈஸ்வரி என்ன செய்வது என்றே தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

இன்றைய ப்ரோமோ: இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், ஜனனியை எங்க வீட்டு பக்கம் வரவிடாதீங்க, கஷ்டமோ நஷ்டமோ நாங்களே பார்த்துக்கொள்கிறோம். தயவு செய்து ஜனனியை எங்க வீட்டு பக்கம் வரவிடாதீர்கள் என்று காலில் விழுந்து செஞ்சுகிறார். மேலும், எங்களுக்கு வேற வழி தெரியவில்லை. எங்க வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும் அடங்காமல், கோர்ட்டுக்கு போவோம், போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் என்கிறார்கள். அதற்கு எல்லாம் காரணம் இந்த ஜனனி தான். இதுஎல்லாம் எங்களுக்கு தேவையா... உங்க மேல மரியாதை வெச்சித்தான் சொல்லிட்டு போகலாம் என்று வந்தோம் இல்லை என்றால், என்ன பண்ண வேண்டுமோ அதை செய்வோம் என்று அனைவர் முன்னும் மிரட்டிவிட்டு செல்கிறார்.

அப்போது, குணசேகரன், ஏம்மா ஜனனி, நமக்கு எதுக்கு ஊர் வம்பு, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருக்க முடியாதா... ஏன் இப்படி பண்றனு கேள்வி கேட்டால், நான் தான் அவங்களை தூண்டி விட்டு மிரட்ட சொன்னேன் என்று என் மேல பழி போடுவ. அந்த பழி பாவத்திற்கு எல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்ல, இவங்களை நான் பார்த்தது கூட இல்ல. ஆனால், என் மேல இருக்கும் மரியாதையால் தான் , இப்போ உன்னை விட்டு போய் இருக்கிறார்கள். இந்த மரியாதையாவது காப்பாத்திக்கோ, தேவை இல்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை விடாதே, அவங்களை பார்த்தா முரட்டுத்தனமான ஆட்களாக இருக்கிறார்கள் பார்த்து இருந்துக்கோ என, குணசேகரன் மறைமுகமாக ஜனனிக்கு எச்சரிக்கை விடுகிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X