வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த ஜான்சி ராணி.. சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரனுக்கு மணி விழா நடைபெறுவதால், அதற்கு சீர் செய்ய பணம் இல்லாததால், சக்தி, குந்தவையிடம் பண உதவி கேட்கிறான். அண்ணனுக்கு மணி விழா வருகிறது. அதற்காக சீர் செய்ய வேண்டும் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று கேட்க குந்தவை அவ்வளவுதானே எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன் என்று சொல்கிறாள். ஆனால், சக்தி, நான் கேட்டால் நீ நிச்சயம் பணம் தருவாய் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், நான் உன்னை தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது போல இருக்கிறது. இதனால், உனக்கு தெரிந்த ஏதாவது ஒரு நிறுவனத்திடம் இருந்து எனக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தால் போதும் என்று சொல்கிறான்.

உடனே குந்தவை, வேறு ஒரு கம்பெனியில் ஏன் கடன் வாங்க வேண்டும். நம்முடைய நிறுவனத்திலேயே உனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி தருகிறேன். உனக்கு, எப்போது அதை திருப்பி தர முடியுமோ, அப்போது திருப்பி கொடுத்தா போதும் இல்லை என்றால் சம்பளத்தில் இருந்து கூட பிடித்துக் கொள்ளலாம் அது உன்னுடைய விருப்பம் என்று சொல்கிறாள். இதையடுத்து சக்தி குந்தவையுடன் மணி விழாவிற்கு புடவை எடுப்பதற்காக கடைக்க செல்கிறான். அதே கடையில், ரேணுகா, நந்தினி, ஜனனி மூன்று பேரும் புடவை எடுக்க கடைக்கு வருகின்றனர். இதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

எதிர்நீச்சர் தொடர்கிறது : குணசேகரன் காஃபி கேட்க, அப்போது விசாலாட்சி காஃபி கொண்டு வந்து கொடுக்கிறாள். இதைப்பார்த்த, குணசேகரன் வீட்டில் இருந்த பெண்கள் எல்லாம் எங்கே என்று கேட்க, அவங்க மணி விழாவிற்காக துணி வாங்க கடைக்கு போய் இருக்கிறார்கள். இன்னைக்கு நல்ல நாள் போய்ட்டு வாங்க என்று சொன்னேன் எல்லாம் போய் இருக்காங்க, முதலில் ஜனனி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தா, பிறகு எல்லாரும் கூடி பேசி, புடவை எடுக்க கிளம்பிட்டாங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்ட குணகேசரன், ஓ ... அப்படியா.. நல்ல விஷயம் தான். இதுபோல, குடும்பத்திற்காக எல்லாரும் சேர்ந்து போனா நல்லாத்தான் இருக்கும், ஆனால், இவளுங்க ஏதோ வாழ்க்கையில முன்னேறப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, வேண்டாத வேலையை செய்கிறார்கள். எது எப்படியோ இந்த வீட்டில் இனிமேல், நல்ல விஷயம் மட்டும் தான் நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்க அப்போது. ஜான்சி ராணி என்ட்ரி கொடுக்கிறாள்.

ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் இருக்கிறாள். இதைப்பார்த்த குணசேகரன் என்ன இது ஆளே மாறி இருக்க, வந்தா உள்ளே வரவேண்டியது தானே வெளியில் உட்கார்ந்து இருக்க என்று கேட்க, அப்போது ஜான்சி, இந்த வீட்டுக்கு வராதவங்க எல்லாம் வந்து இருக்காங்க, எல்லாரையும் அழைச்சி ஒன்னா குடும்பம் நடத்துறீங்க. அப்படி இருக்கும் போது நான் எப்படி வீட்டுக்குள் வருவது என்று, பொடி வைத்து பேசுகிறாள். உடனே விசாலாட்சி... அடி உள்ளவாடி... வெளியில் இருந்து கொண்டே நியாயம் பேசுவ என்று உள்ளே அழைத்து செல்கிறாள். அப்போது, ஜான்சி, இப்போது தான் காசிக்கு போய்ட்டு வந்தேன். அந்த பிரசாதத்தை அண்ணணிடம் கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்று பிரசாதத்தை கொடுக்கிறாள். அப்போது, விசாலாட்சி, என்ன ஜான்சி இப்படி மாறி இருக்க என்று கேட்க, ஆமாம்.. முன்னே இருந்த ஜான்சி ராணி அடங்காபிடாரி... இப்போ இருக்கும் ஜான்சி ராணி ஆன்மீக ஜான்சி ராணி என்று சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கோவப்பட்ட சக்தி: மறுபக்கம், துணிக்கடையில் அனைவரும் துணி எடுத்துக்கொண்டு இருக்க, ஜனனி மட்டும், கதிருக்கு தன்னால் பணம் கொடுத்து உதவ முடியவில்லையே என்ற வருத்தத்தில் தனியாக எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து, சக்தி மற்றும் குந்தவை ஜோடியாக துணி கடைக்கு வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனனி, என்ன சக்தி இந்த பக்கம் என்று கேட்கிறாள். சக்தி என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவிதமான குழப்பத்தில் இருக்க, அப்போது, குந்தவை, சக்தி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். இதனால், இப்போது தான் கம்பேனியில் பேசி அவருக்கு லோன் வாங்கி கொடுத்தேன். அதான், மணி விழாவிற்கு தேவையான புடவையை வாங்கலாம் என்று வந்தோம் என்று சொல்கிறாள். குந்தவையின் பேச்சை கேட்டு மேலும், கடுப்பான ஜனனி, நீங்க எப்போ ஃபோன் பண்ணுவீங்க, நீங்க வந்ததும் புடவை எடுக்கலாம் என்று, நான் இங்கே உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கேன். நீங்க ஒருவார்த்தை ஃபோன் பண்ணி பணம் கிடைத்துவிட்டது என்று சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறாள்.

வருத்தப்பட்ட குந்தவை: சக்தி என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க, உடனே குந்தவை, சக்தி, இன்னைக்கு நல்ல நாள் அதனால், இன்னைக்கே புடவை எடுக்க வேண்டும் என்று சொன்னார். அதான், சரி இன்னைக்கே வாங்கிவிடலாம் என்று வந்தோம் என்று சொல்கிறாள். உடனே ஜனனி, நீங்க சொல்றது எல்லாம் சரி குந்தவை, நீங்க சக்திக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க, இருந்தாலும், புடவை வாங்கும் போது ஜனனியை கூட்டிக்கிட்டு போங்க என்று சொல்லி இருக்கலாமே... அதை ஏன் சொல்லவில்லை என்று ஜனனி கேட்கிறாள். உடனே குறுக்கிட்ட சக்தி, என்ன ஜனனி நமக்கு உதவி பண்ணவங்களையே இப்படி அவமானப்படுத்தி பேசிக்கிட்டு இருக்க, குந்தவை ஜனனியை கூட்டிக்கிட்டு போங்க என்று சொன்னாங்க நான் தான் நேரம் ஆகிவிட்டது என்று, குந்தவையை அழைத்து வந்தேன் என்று சொல்கிறான். இப்படி, சக்திக்கும் ஜனனிக்கும் இடையே வாக்கு வாதம் நடந்து கொண்டு இருக்க, இதைப்பார்த்த குந்தவை, சாரி எல்லாம் என்னை மன்னிச்சிடுங்க, நான் இப்படி எல்லாம் ஆகும் என்று நினைக்கவே இல்லை, நீங்க புடவை எடுத்துவிட்டு வாங்க நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள்.

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், நந்தினி, என்ன ஜனனி இன்னைக்கு புடவை எடுப்போமா இல்லையா...ஆளு ஆளுக்கு ஒவ்வொரு இடத்தில் இருந்தால் என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். அப்போது, ஜனனி... அக்கா சக்தியும் நானும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. இயல்பாகத்தான் பேசிக்கொண்டோம். அவன், பணம் கிடைத்ததும் என்னிடம் சொல்லி இருக்கலாமே என்று சொல்கிறாள். உடனே, சக்தி, சாரி ஜனனி... பணம் இல்லாததால் குழப்பத்தில் இருந்தேன் என்று சொல்ல இருவரும் சமாதானம் அடைகின்றனர். இடையடுத்து, என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X