பார்கவி இல்லனா செத்துடுவேன்.. கதறி அழுத தர்ஷன்.. நடக்கப்போவது என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: ஜனனி. ஈஸ்வரி அனைவரும் பதட்டத்தோடு, எத்தனை முறை ஜீவானந்தத்திற்கும் பார்கவிக்கும் போன் செய்தாலும் போன் ரீச் ஆகவே இல்லை. இதில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்களா என்று கூட தெரியவில்லை என்ன ஆனது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் தர்ஷன் பார்கவி ஏதாவது பேசினாளா.. இப்பொழுது பார்கவி எப்படி இருக்கிறார் என்று விசாரிக்க பார்கவியும் ஜீவானந்தமும் எங்கே இருக்கிறார்கள் என்ற தெரியவில்லை என சொல்ல தர்ஷன் பதறிப்போகிறான்.

பார்கவிக்கு என்ன ஆச்சு, இந்த அறிவுக்கரசி தான் அவளை ஏதோ செய்து இருப்பார் என்று சொல்ல, ஜனனி அவனை சமாதானப்படுத்தி, அவளுக்கு ஒன்னும் இல்லை தர்ஷன் அவள், ஜீவானந்தத்தின் பாதுகாப்பில் இருக்கிறாள். நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் தைரியமா இரு, உனக்கு பார்கவி கூடத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்கின்றனர். அப்போதும், சமாதானம் ஆகாத தர்ஷன், பார்கவி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்றால், நான் உயிரோடவே இருக்க மாட்டேன். எனக்கு பார்கவி வேண்டும், நான் உண்மையில் அவளை காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகிறான். அவளை எப்படியோ சமாதானப்படுத்தும் ஜனனி, பார்கவி எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கான வேலையை நான் ஆரம்பிக்கிறேன் என்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், ஜீவானந்தம் பார்கவியிடம், நீ கனடாவிற்கு போய்விடு, அங்கே போய் படி நல்ல வேலை பாரு, இந்த ஊரே வேண்டாம், இதில் உனக்கு சம்மந்தம் தானே என்று கேட்கிறார். நீங்க எது சொன்னாலும் நான் செய்வேன், நீங்க என் வாழ்க்கையில் வந்த தேவதை, அப்பா அடிக்கடி சொல்லுவாரு, கடவுள் மனித உருவில் வந்து தான் உதவி செய்வார் என்று அதுபோல என் வாழ்க்கையில் நீங்க வந்து இருக்கீங்க என்கிறார். இதைத்தொடர்ந்து இருவரும், டிக்கெட் புக்கில் அலுவலத்திற்கு செல்கின்றனர். அங்கு இருப்பவர், கனடா செல்வதற்கான டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்கிறார் 'இதை கேட்டு இருவருமே சந்தோஷப்படுகின்றனர்.

தவிக்கும் ஜனனி: ஜனனி, பார்கவியும் ஜீவானந்தமும் எங்க இருக்கிறார்கள் தேடி அலைந்து கொண்டு இருக்கிறாள். அப்போது, கும்பகோணத்தை நடக்கும் டிவி நிகழ்ச்சியில் ஒன்றில், பார்கவியும் ஜீவானந்தமும் நடந்து வருவதை பார்க்கும் ஜனனி அவர்கள் கும்பகோணத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு. அவர்களை தேடி கும்பகோணம் செல்கிறாள். அங்கு அவர்கள் வந்து சென்ற அந்த விசா கடைக்கு சென்று, இவர்கள் குறித்து விசாரிக்கிறாள். அந்த கடைக்காரர் ஜனனி திட்டிஅனுப்பிவிட, ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள்.

மற்றொரு பக்கம் வீட்டில், குணசேகரன் சாமியாரை அழைத்து வந்து பூஜை செய்கிறார். பூஜை நல்லபடியாக முடிந்ததும். மாப்பிள்ளை, பெண்ணையும் கோவிலுக்கு அழைத்து சென்று விட்டு பின் கல்யாண வேலைகளை பாருங்கள் என்று சொல்ல, அனைவரும் கோவிலுக்கு கிளம்பி செல்கின்றனர். இதைத்தொடர்ந்து வீட்டில் தர்ஷன், அன்புக்கரசிக்கான திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இத்தனை நாட்களாக தைரியமாக இருந்த ஈஸ்வரி, தர்ஷன், பார்கவி இல்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொன்னதால், ஒருவிதமான பயத்தில் இருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X