குணசேகரனின் நயவஞ்சக சூழ்ச்சி.. பறிபோனது உயிர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், கதிர், குணசேகரன் அறைக்கு வந்து, நீங்க ஜீவானந்தத்திடம் பேசி இருக்க கூடாது, வீட்டில் இவளுங்க நினைப்பது நடந்து கொண்டு இருக்கிறது என்கிறான். அப்போது, குணசேகரன், டேய் இவளுங்கள விடுடா, இவங்க எல்லாம் ஒரு ஆளா.. இப்போ தர்ஷன், அந்த ஆள் ஜீவானந்தத்திடம் கூட .தர்ஷினி கல்யாண விஷயம், மணி விழா விஷயம் என எல்லா விஷயத்திலும் நான் தோற்றுவிட்டேன், இந்த விஷயத்திலும் நான் தோற்றுப்போனால் உயிரோடு இருக்கவே மாட்டேன். முதலில் தர்ஷன் வீட்டிற்கு வரட்டும் என்கிறார். இதனால், குணசேகரன் ஏதோ பெரிய திட்டத்தோடுதான் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.
இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், மொத்த சூழ்ச்சித்தனத்தையும் நயவஞ்சகத்தையும் குணசேகரன் எப்படி நிகழ்த்துகிறார் என்பதை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமே ஆடி போய் நிற்கிறது. அதாவது, தர்ஷன் வருகைக்காக அனைவரும் வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் அறிவுக்கரசி தர்ஷன் வந்ததும் அவன் கதையையும் அந்த பெண்ணோட கதையும் முடிந்துவிட்டு, தன்னை அவமானப்படுத்திய குணசேகரனுக்கு பாடத்தை புகட்ட வேண்டும் என்று திட்டத்துடன் இருக்கிறாள். இது எதுவுமே தெரியாத, ஜீவானந்தம், இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை தர்ஷன் எல்லாம் சரியாகி விடும் என்று மகிழ்க்கியாக காரில் வந்தது இறங்குகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷனை பார்த்த குணசேகரன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அவனை நெஞ்சில் எட்டி மிதிக்க, அவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். இதைப்பார்த்து அனைவரும் பதறிப்போகின்றனர். மேலும், டேய், கதிர் அந்த பொண்ணையும், அப்பனையும் கொல்லுடா என்று சொல்ல, ஜீவானந்தம் பதறி போய் அவர்களை காப்பாற்ற செல்கிறார். ஆனால், அதற்குள் கதிர், பார்கவியின் அப்பா கழுத்தை பிடித்து அடி அடி என அடிக்க அவர் அப்படியே மயங்கி விழுகிறார். தர்ஷன் வருவதை தெரிந்து கொண்டால் அறிவுக்கரசி, எப்படியாவது அவன் கதையை முடித்துவிட வேண்டும் என வீட்டிற்கு அடியாட்களுடன் வர, வீட்டில் குணசேகரன் செய்வதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறாள். பின், பார்கவியின் அப்பாவை ஜீவானந்தம் எப்படியோ காப்பாற்றி, வெளியில் கொண்டு வருகிறார். பார்கவி அப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவரை ஜீவானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.
பறிபோன உயிர்: மறுபக்கம் வீட்டில், இன்னும் ரெண்டு மணி நேரத்தில் தர்ஷனுக்கும் அறிவுகரசி தங்கச்சி அன்புக்கரசிக்கும் கல்யாணம் என்று சொல்ல, பதறிப் போனா ஈஸ்வரி, இது ரொம்ப அநியாயம், நீங்க இவனை எதுவும் செய்ய மாட்டேன் என்று சொன்னதால்தான், தர்ஷன் வீட்டுக்கு வரவைத்தேன் என்கிறாள். உடனே குணசேகரன், ஏய் வாய மூடு டி, தர்ஷன் வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான், நீ சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டேன். இதற்கு மேல் இந்த வீட்டில் என்னை மீறி எதாவது நடந்தது, அனைவரையும் சுட்டுத்தள்ளி விடுவேன் என்கிறான். மறுபக்கம் மருத்துவமனையில் இருக்கும் ஜீவானந்தத்திற்கு ஜனனி ஃபோன் செய்து, பார்கவியின் அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்கிறாள். அப்போது, ஜீவானந்தம், அந்த பொண்ணோட அப்பா இறந்துவிட்டதாக சொல்ல, பேரதிர்ச்சியில் அனைவரும் இருக்கின்றன. இதை எடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











