குணசேகரிடம் வசமாக மாட்டிக்கொண்ட பெண்கள்.. இன்னைக்கு ஏதாச்சும் நடக்குமா? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: தர்ஷன், லேப் டாப்பில் பார்ட்டி ஹாலில் தாரா டான்ஸ் ஆடியதைப்பார்த்து ஆத்திரமடைந்த விசாலாட்சி, வயசுக்கு வந்த பிள்ளைய கூட்டிட்டு போய், இப்படி கூத்து அடிக்கிறார்கள் என்று கோபமாக பேசிக் கொண்டிருக்கிறது. உடனே குணசேகரன், நம்ம வீட்டு பொம்பளைங்க எல்லாம் தறி கெட்டவளுங்க இல்லனு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாளுங்க, கொஞ்சம் அமைதியா இருங்க, என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம் என்று சொல்கிறார். அவர், சொன்னதுக்கு போலவே மருமகள்கள் அனைவரும் பார்ட்டி ஹாலில் டான்ஸ் ஆடுகின்றனர். அதை வீட்டில் இருக்கும் அனைவரும் பார்த்துவிட்டு உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பார்ட்டிக்கு வரும் அப்பத்தா, நீங்க எல்லாம் ரொம்ப நல்ல உயரத்துக்கு வந்து இருப்பீங்கன்னு நினைச்சேன், ஆனால், நீங்க அதே இடத்தில் தான் இருக்கீங்க. உங்க வீட்டில நடந்த சண்டைகள் விஷயத்தை எல்லாமே நான் கேள்வி பட்டேன். ஆம்பள போல அருவாளை தூக்குறது இல்ல பெண்ணோட வேலை, இது தான் பெண்ணியமா.. அவங்க அப்படித்தான் படிப்பு அறிவு இல்லாதவர்கள், நீங்கள் அனைவரும் படித்தவர்கள் தானே. இப்படி ஒரு மனநிலையில இருக்குறவங்க கிட்ட, நாம விவாதம் பண்றது தவறான விஷயம். உங்கள நான் ஒரு கிரியேட்டரா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், நீங்க அப்படி இல்ல இன்னும் அதே இடத்தில் இருக்கிறீர்கள். இப்போ ஒரு ஃபங்ஷன் தேவையா... கதிரும் தாராவோட அப்பா, அப்படி இருக்கும் போது கதிரை சமாதிக்க வைத்து அதன் மூலமாக ஒரு விஷயத்தை நடத்தி இருக்கணும். இதுதான் ஒரு பெண் செய்திருக்க வேண்டிய வேலை அதை விட்டுவிட்டு நானும், நீங்க இப்படி செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று, அப்பத்தா சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள்

அப்பதா கொடுத்த அட்வைஸ்: அப்பத்தா சென்ற பிறகு அனைவரும் கவலையில் இருக்க அப்போது நந்தினி, வீட்ல அவ்ளோ கொடுமை படுத்துறாங்க அதை எல்லாம் பொருத்துக்கிட்டு அமைதியா இருக்கணுமா, இவங்க சொல்றத என்னால ஏத்துக்கவே முடியல என்று சொல்கிறாள். அப்போது குறிப்பிடும் நந்தினி நீங்க அப்பத்தா சொன்னதை தவறா புரிஞ்சுகிட்டீங்க அக்கா. அவங்க நம இந்த வீட்டை விட்டு நம்ம போகக்கூடாது, இந்த வீட்டில் இருந்து கொண்டே அனைவரையும் மாத்த வேண்டும் என்று தான் சொல்றாங்க, ஒரே ஒரு ஆள் குணசேகரன் அவர் எப்படி வீட்டில் இருப்பவர்களை பேசி பேசி மனதை மாற்றி வைத்து இருக்கிறார். நாம நாலு பேர் நினைத்தால் அதை செய்ய முடியாதா என்று ஜனனி கேட்கிறாள்.
இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் ஃபோனை பார்க்க அதில், அனைவரின் ஃபோனிலும் தர்ஷனில் மிஸ்டுகால் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதைத் தொடர்ந்து, ஈஸ்வரி தர்ஷனுக்கு ஃபோன் செய்து என்ன விஷயம் என்று கேட்க. அப்போது, தர்ஷன் சாப்பிடத்தானே போனீங்க அதை செய்ய வேண்டியது தானே, எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறீர்கள். நீங்கள் பார்ட்டி ஹாலில் டான்ஸ் ஆடியது அனைத்தையும் வீட்டில் இருந்தவர்கள் பார்த்து விட்டார்கள் என்று சொல்கிறான். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்,


Click it and Unblock the Notifications











