என் அப்பன் வக்கத்தவன் இல்ல.. விசாலாட்சியின் மூக்கை உடைத்த நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: குணசேகரன், நான் அந்த வீட்டுக்கு வரவேண்டும் என்றால், எனக்கு அந்த வீட்டில் மரியாதை வேண்டும். நாலு பெரும் எப்போதும் ஒத்துமையாக இருக்கிறார்கள். அவர்களை பிரிக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்துவிட்டு செல்கிறார். இதற்காக கதிர், ஞானம் இருவரும் ஒரு திட்டம் போடுகின்றனர்.
கதிர், நந்தினியிடம் நாளை காலை வெளி ஊருக்கு போக வேண்டும், போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வரலாம், நீ நாளைக்கு சீக்கிரம் எழுந்துவிடு என்று சொல்கிறான். உடனே நந்தினி, தாரா இப்போத்தான் பெரிய பொண்ணாகி இருக்கிறாள் அவளை வைத்துக்கொண்டு வெளியில் எங்குமே போகக்கூடாது என்று சொல்கிறாள். ஆனால், கதிர் நிச்சயமாக நாம் போக வேண்டு என்று சொல்ல நந்தினி என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறாள். இதையடுத்து நேற்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் ஞானம் மற்றும் ரேணுகா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, ஞானம் மகள் எங்கே என்று விசாரிக்க அப்போது ரேணுகா, மகள் பற்றி இப்பொழுதுதான் உங்களுக்கு நினைப்பு வருகிறதா. அவள் சடங்கு முடிந்ததுமே அம்மாவுடன் வீட்டுக்கு சென்று விட்டாள், இங்கே இருப்பவர்களை விட எங்க வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் நல்லவர்கள். எல்லாரும் உங்க மகளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். உங்களுடைய மகளுக்கு ஒன்றும் ஆகி விடாது என்கிறாள். உடனே ஞானம், மகள் இங்கேயே இருந்தால் இங்கே நடக்கும் சண்டைகளை எல்லாம் பார்த்து விட்டு அவள் மனது பாதிக்கப்படும். இதனால் நான் ஒரு திட்டம் போட்டு இருக்கிறேன். நாளைக்கு நாம் அனைவரும் ஊட்டிக்கு சென்று, அவளை ஒரு நல்ல கான்வெண்டில் சேர்த்து விட வேண்டும். அப்போதுதான் அவளது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறான்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக் கேட்டு கடுப்பான ரேணுகா, என்னது இங்கே இருக்கும் ஸ்கூலை விட்டு விட்டு, இப்போது கான்வென்டில் சேர்த்து படிக்க வைப்பதற்கான காரணம் என்ன என்று எனக்கு புரியவில்லை. இங்கேயே நல்ல ஸ்கூல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏன் மகளை கான்வென்டில் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறாள். உடனே ஞானம் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். என்னை விட நீ படித்தவளாக இருந்தாலும், ஜனனி சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் இந்த வீட்டில் ஆடிக்கொண்டு இருக்கிறாய். முதலில் ஜனனியுடன் நீ பேசுவதை நிறுத்தினால் தான், உன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சத்தம் போடுகிறான்.
கோவப்படும் சக்தி: மறுபக்கம் ஜனனி, சக்தி இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சக்தி நான் உனக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். குடும்பம் வேறு நம்மளுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று. ஆனால், நீ இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொண்டு இருக்க. பெரும்பாலும் அண்ணிகளுக்கு நீ ஆதரவாக பேசுகிறேன் என்று அவர்களை ஏற்றி விடுகிறாய், இதனாலே குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இனிமேல் எந்த விசயத்திலும் நீ தலையிடாதே என்கிறான். உடனே ஜனனி, குடும்பத்தில் நடக்கும் சண்டையை, படுக்கையறையில் பேசக்கூடாது என்று நீ சொல்வதில் நியாயமே இல்ல சக்தி. குடும்பத்தில் ஒரு பிரச்சனை நடக்கும் போது தனிப்பட்ட முறையில் நமக்கும் பாதிப்பு வரும். அது என்னை பாதிக்காது, என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு போவேன் என்று சொல்வது. நடிப்பது போல இருக்கும். என்னால், அப்படியெல்லாம் நடிக்க முடியாது. நான் இயல்பாகத்தான் இருப்பேன் என்று சொல்கிறாள். உடனே சக்தி உனக்கு இருக்கும் பிடிவாதத்தால் தான், பல பிரச்சனை நடக்கிறது. பல விசயத்தில் நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன். அதற்காக எல்லா விசயத்திலும் உனக்காக நான் ஆதரவாக இருக்க முடியாது என்று கோபமாக சொல்கிறான்.

கதிர் போட்ட பிளான்: விடியற் காலை கதிர் நந்தினிக்கு காஃபி கொடுத்து எழுப்புகிறான். பதறிப்போய் எழுத நந்தினி, என்ன விசயம் என்று கேட்க, நான் தான் நேற்றே சொன்னேனே நாம் அனைவரும் மேகமலையை சுற்றி பார்க்க போகிறோம். அனைவரும் ஜாலியாக ஒரு டூர் போய்விட்டு வரலாம் என்று சொல்ல, உடனே நந்தினி இந்த விசயம் மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிந்தால் நிச்சயமாக பத்ரகாளியாக மாறிவிடுவார்கள். அதுவும் இல்லாமல், தாரா பெரிய பொண்ணாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் எங்கேயுமே போகக்கூடாது என்று சொல்ல கதிர் அதையெல்லாம் நான் பார்த்துகிறேன் முதலில் நீ ரெடியாகும் என்கிறான்.
மவனே யாருக்கிட்ட: வெளியே வரும் நந்தினி, ரேணுகாவை பார்த்து டூர் போகிற விஷயத்தை சொல்ல, ரேணுகாவும் நானும் ஊட்டிக்கு டூர் போகிறேன் என்கிறாள். அப்போது நந்தினி, நாம் அனைவரையும் வெளியூருக்கு டூருக்கு அனுப்பி வைத்துவிட்டு, இங்கே ஜனனி மற்றும் ஈஸ்வரி அக்காவிற்கு பிரச்சனை கொடுக்க பார்க்கிறார்கள். இதனால், ஏதோ நிச்சயமாக பிரச்சனை நடக்கும் என்று சொல்கிறாள். உடனே ரேணுகா, அதில் சந்தேகமே இல்லை அதற்காகத்தான் நாம் அனைவரையும் ஊருக்கு அனுப்ப பிளான் போடுகிறார்கள். ஆனால், இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறாள். இது மிகவும் ஈஸியான வேலை அக்கா, இந்த விஷயத்தை அத்தையிடம் சொல்லிவிட்டால் அவர்களை நாம் வெளியூருக்கு செல்வதை தடுத்து விடுவார்கள். அவர்களுக்கு நாம புருசனுடன் சேர்ந்து தெருமுனைக்கு போவதே பிடிக்காது. அப்படி இருக்கும் டூருக்கு எப்படி அனுப்புவார்கள். இதனால், இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிடலாம், பின் அவர்களே தடுத்துவிடுவார்கள் என்று பிளான் போடுகின்றனர்.

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது. அதில் நந்தினியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தாராவின் சடங்குக்கு தேதி குறித்து பற்றி பேசுவதற்காக வீட்டுக்கு வருகின்றனர். அப்போது, விசாலாட்சி... ஏய்.. நந்தினி, நான் காலையிலேயே எல்லாத்தையும் தெளிவாக பேசிட்டேன். மறுபடியும் எதுக்கு உங்க அப்பன் வந்து இருக்கான். அவரை வெளியில கூட்டிட்டு போயி, நான் சொன்ன விசயத்தை சொல்லி, அப்படியே அனுப்பிவிடு என்று சொல்கிறார். இதை கேட்டு கடுப்பான நந்தினி, வெளியிலேயே நிக்க வச்சு பேசி அனுப்பும் அளவிற்கு எங்க அப்பன் ஒன்னும் வக்கத்தவன் இல்லை. என்னை கட்டுனவன் கிட்டையே என்ன விஷயம் என்று அவர்கள் கேட்டுக்கொள்ளட்டும் என்கிறாள். இதையடுத்து, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











