சொத்து வேண்டாம்.. தம்பிகள் தான் வேணும்.. வேஷம் போட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஆடிட்டர் வீட்டிற்கு வந்து சொத்து பத்திரத்தை கொடுக்கிறார். அப்போது குணசேகரன், கதிர் என்னிடம் சொத்துக்களை ஒப்படைத்த போதே, நானும் ஒரு முடிவு செய்து விட்டேன். பல நாட்களுக்கு முன்பே என்னுடைய அனைத்து சொத்துக்களையும் அனைவருடைய பெயருக்கும் சரியாக பிரித்து எழுதி வைத்திருக்கிறேன் என்கிறார். தர்ஷனை அழைத்து, இது உன்னுடைய பங்கு, இதில் தர்ஷினிக்கும் பங்கு பிரித்து இருக்கிறேன். அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும், அவள் என் மகள் தான். அதேபோல, ஈஸ்வரியும் என்னை நம்பி வந்தவள் அவளுக்கும் இந்த சொத்தில் பங்கு இருக்கு என்றார். பின் கதிர், ஞானம், சக்தி என அனைவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் சொத்து பத்திரத்தை கொடுக்கிறார் குணசேகரன். இதில் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தயங்காமல் சொல்லிவிடுங்கள் அதை நாம் சரி செய்து கொள்வோம். இதுபற்றி, உங்களின் மனைவிகளிடம் பேசுங்கள் என்கிறார்.

நேற்றைய எபிசோடில், நந்தினி,ஜனனி, ரேணுகா என அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, ரேணுகா, இவங்களுக்கு இதே வேலையா போச்சு, சொத்தை பிரித்து எழுதுவாங்க அதுக்கப்புறம் வேண்டான்னு முடிவு எடுப்பாங்க, இவங்கள புரிஞ்சுக்கவே முடியாது என்று சொல்கிறாள். அப்போது. நந்தினி அவங்க நம்மள வச்சு ஏதோ ஒரு காயை நகர்த்த பார்க்கிறார்கள். இதனால, நம்ம ஒரு திட்டத்தை போட வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இதையடுத்து நந்தினி, கதரிடம், உங்க அண்ணன், எப்படி சொதை பிரித்துக் கொடுத்த இருக்காரு பாத்தீங்களா... ஞானம் அண்ணனுக்கு பெரிய பெரிய ஃபேக்டரியெல்லாம் எழுதி கொடுத்து இருக்காரு. நமக்கு எதுவுமே பெருசா செய்யவே இல்ல. ஞானம், எத்தனை தொழிலை தொடங்கி எல்லாமே வீணாப்போச்சுனு உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்கும்போது உங்களுக்கு தானே எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கணும். ஆனா அவரு அப்படி செய்யவே இல்ல. எனக்கு சொத்து மேல எல்லாம் ஆசை இல்ல. ஆனால், எல்லாருக்கும் சரி பாதி சொத்தை எழுதி வைத்து இருக்க வேண்டும் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

குணசேகரனின் பிளான்: அதேபோல ரேணுகாவும் தன்னுடைய கணவரிடம் அழுதுக்கொண்டே, கதிருக்கு அவனுக்கு சொத்தில் நிறைய எழுதி கொடுத்து இருக்காங்க. ஆனால், உங்களுக்கு சுண்ணாம்பு பேக்டரியை தான் கொடுத்து இருக்காங்க, அந்த சுண்ணாம்பு பேக்டரிய வச்சு, நாம என்ன பண்றது நாளைக்கு நமக்கும் பசங்க இருக்காங்க. இந்த குடும்பத்துல உங்களை ஒரு மாதிரி பார்ப்பாங்க, அது எனக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும். நீங்க எல்லாரும் ஒண்ணா இருப்பதால், நான் அதை பத்தி கண்டுக்கவே இல்ல. ஆனால், இப்ப சொத்தை இப்படி எழுதி கொடுத்து இருப்பதை பார்க்கும்போது எனக்கே மனசு சங்கடமா இருக்கிறது என்று சொல்கிறாள்.

நடந்தது வேற ஒன்னு: மறுபக்கம் சக்தி ஜனனியிடம் சொத்தைப்பற்றி விசாரிக்க, எனக்கு அந்த சொத்தின் மீது விருப்பமே இல்ல சக்தி, என்னை கேவலப்படுத்தி அவர் கொடுத்த சொத்து எனக்கு வேண்டாம்.அதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறாள். அதே போல, ஈஸ்வரி மற்றும் தர்ஷினியும் எனக்கு இந்த வீட்டில் இருந்து எந்த சொத்தும் தேவையில்லை என்று திட்டவட்டமாக சொல்லி விடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X