ராசியான நிறம்.. அனுகூலமான திசை.. இந்த குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆகுது.. ராசிபலன் விஷால் பேட்டி!
சென்னை: தினமும் காலையில் சன் டிவியை போடுவதே இவரது அழகான முகத்துடன் அந்த நாளை தொடங்கலாம் என்ற ஒரே காரணத்திற்காக, பல 90ஸ் கிட்ஸ்களையும் ராசி பலன் பார்க்க வைத்த விஜே விஷால் சுந்தர் நமது வி கனெக்டில் இணைந்து பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
ராசியான நிறம்.. அனுகூலமான திசை என இவர் அழகாக சொல்லக் கேட்ட ரசிகர்கள், சன் டிவியில் வேறு எந்த புரொகிராமிலும் இவர் வர மாட்டாரா? சன் மியூசிக்கில் வர மாட்டாரா? என தவியாய் தவித்தது எல்லாம் ஒரு அழகான காலம்.

சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, பார்ட் டைமாக ராசி பலன் வாசித்து வந்த விஜே விஷால், இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
லண்டனில் கிட்டத்தட்ட 6 வருடங்களாக நல்ல வேலையில் செட்டிலாகி பணியாற்றி வருகிறார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சன் டிவியில் அழகாக ராசி பலன் வாசித்து, தமிழ் மக்கள் மனதில் நின்ற இவரும் மீண்டும் கம்பேக் கொடுக்கப் போகிறாரா? இல்லையா? என்பது குறித்து இந்த பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
மேலும், கொரோனா காலத்தில் ராசி பலன் வாசிக்காதது, மீம்களில் தப்பிக்க உதவுகிறது என்பதை நினைத்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் விஷால் கலகலப்பாக கூறியுள்ள முழு வீடியோவை அவரது சூப்பரான குரலில் கேட்டு மகிழ, வீடியோவை பாருங்கள்!


Click it and Unblock the Notifications











