வாழ்ந்தா அப்படி வாழனும்.. நெகிழிந்து உண்மையை சொன்ன ரம்யா!

சென்னை : புதிய புதிய திரைப்படங்கள் விதவிதமான தளங்களில் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது.

Recommended Video

Abhiyum Naanum | Ramya Gowda Exclusive | Thalapathy Vijay னா உசுரு | Filmibeat Tamil

அறிமுக இயக்குனர் முதல் அறிமுக நாயகிகள் வரை அதிரடியான திறமைசாலிகள் வருடம்தோறும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும் சீரியல்களுக்கான மாஸ் இன்னும் குறையவில்லை. வெப்சீரீஸ் பார்க்கும் அடுத்த தலைமுறையினரும் சீரியல் அப்டேட்டாக இருப்பது வித்யாசமான ஒன்றுதான்.

அபியும் நானும் மற்றும் ராசாத்தி சீரியல்களின் நட்சத்திர நாயகி ரம்யா கவுடா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்ல.. குடும்பங்களில் ஒருவராகவும் நினைக்கும் அளவுக்கு புகழ்பெற்றவர். நமது பிலிம்பீட் க்கு கொடுத்த பேட்டியில் பல கலகல விஷயங்கள் வந்தன.

பெங்களூர் ல போனப்போ

பெங்களூர் ல போனப்போ

கேள்வி : வாத்தி பேபிதான் உங்க ரியல் கேரக்டரா?

பதில் : ஆரம்பத்துல எனக்கு நடிக்க வந்தப்போ பயம் இருந்துச்சு. எப்படி மக்கள் ஏத்துப்பாங்க.. ஒரு ரவுடி பேபி.. வாத்தி பேபி. மக்கள் ஏத்துப்பாங்களான்னு ல்லாம் தோனுச்சு. ஆனா எந்த ஊரு போனாலும், பெங்களூர் போனப்ப கூட ரசிகர்கள் பாத்து கெஸ் பண்னி கேக்குறாங்க. என்னோட ரியல் கேரக்டர்க்கு நேர் ஆப்போசிட் நான் நடிச்சிட்டு இருக்குறது. ஆனா இப்ப பழகிட்டு.

நாங்க க்ளோஸ் ஆகிட்டோம்

நாங்க க்ளோஸ் ஆகிட்டோம்

கேள்வி : அபியும் நானும் செட் ல உங்களுக்கு பிடிச்சது யாரு?

பதில் : குருவி, ரியா, ரகு.. அபி கேரக்டர் பண்ற ரியா எல்லார் கூடவும் ரொம்ப ப்ரண்டாகிடுவா. ஆரம்பத்துல அவ கூடவே நான் நிறைய ட்ராவல் பண்ணிட்டேன். குருவி, ராசாத்தி சீரியல்ல பண்ணதால அப்பவே ரொம்ப ப்ரண்ட். அப்பறம் ரகு, ஷ்யாம் கூட நிறைய சீன் சீக்வன்ஸ் இருந்துச்சு.. அதனால நாங்க க்ளோஸ் ஆகிட்டோம்

அவர் சீக்கிரம் இறந்துருக்க கூடாது

அவர் சீக்கிரம் இறந்துருக்க கூடாது

கேள்வி : கன்னடம் திரைப்படத்துறையில உங்களுக்கு பிடிச்சது யாரு?

பதில் : கன்னட நடிகர் புனித்ராஜ்குமார். அவர் இறந்தப்போ அவ்ளோ கூட்டம். எல்லா திரைப்படத்துறையில இருந்தும் அத்தனை பேரும் வந்திருந்தாங்க. காந்திஜி மரணத்துக்கு பிறகு, ஒருத்தரோட மரணத்துக்கு இவ்ளோ கூட்டம் வந்துருக்குன்னா.. அது புனித்ராஜ்குமார் க்குதான். அவரால வாழ்ந்த, வாழ்ற குடும்பங்கள் ல்லாம் நிறைய நிறைய. அவரு இவ்ளோ சீக்கிரம் போயிருக்க கூடாது.

ரம்யா தத்தெடுத்த குழந்தை

ரம்யா தத்தெடுத்த குழந்தை

கேள்வி : ரம்யாவோட பேமிலி பத்தி சொல்லுங்களேன்?

பதில் : அப்பா பேரு ஸ்ரீனிவாச கெளடா.. அம்மா பேரு தங்கமணி. ஆனா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. ஒரு தம்பிய தத்தெடுத்து வளர்த்துட்டு வரேன். இப்போ அவருக்கு 11 வயசு ஆகுது. எனக்கு மாரல் சப்போர்ட்டா இருக்கறது எல்லாமே என்னோட 7 நண்பர்கள். அவங்க இல்லன்னா.. நான் இல்ல. என்று மகிழ்வுடன் நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X